காலின் அளவை துல்லியமாக காட்டும் 'பிரான்னாக் டிவைஸ்' காலணி அளவீட்டுக் கருவியின் வரலாறு தெரியுமா?

பிரான்னாக் டிவைஸ்: காலணி அளவீட்டுக் கருவியின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்
காலணி அளவு - Brannock Device
காலணி அளவு - Brannock DeviceImage credit: footsolutionsrichmond.co.uk
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

நாம் செருப்பு கடைகளுக்குச் செல்லும்போது, நமது காலின் சரியான காலணி அளவு கண்டறிய வெள்ளியினாலான அல்லது பிளாஸ்டிக்கினாலான ஒரு கருவியைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் செருப்புக் கடைகளில் பயன் படுத்தப்பட்டு வரும் இந்த உலகளாவிய அளவீட்டுக் கருவியின் பெயர் பிரான்னாக் டிவைஸ் (Brannock Device) என்பதாகும்.

காலணிகளைத் தேர்வு செய்வதில் புரட்சியை ஏற்படுத்திய இக்கருவியின் வரலாறு, அதன் அமைப்பு, செயல்படும் விதம் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கு காண்போம்.

கண்டுபிடிப்பும் வரலாறும்: 1920-களின் தொடக்கம் வரை, காலணிகளின் அளவைக் கண்டறியப் பயன்பட்ட அளவீடுகள் துல்லியமாக இருக்கவில்லை. வெறும் மரத்தாலான அளவுகோல்களையே பெரும்பாலான கடைகள் பயன்படுத்தி வந்தன. பின்னர் அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் பிரான்னாக் (Charles F. Brannock) என்பவர் 1927-ஆம் ஆண்டு இக்கருவியைக் கண்டுபிடித்தார்.

நியூயார்க்கில் உள்ள சைராகுஸ் (Syracuse) பகுதியில் தனது தந்தையின் காலணி கடையில் பணிபுரிந்த பிரான்னாக், கல்லூரிப் பருவத்திலேயே இக்கருவியை வடிவமைப்பு செய்யத் தொடங்கினார். இதற்கான காரணம் முக்கியமாக இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்க ராணுவ வீரர்கள் சரியான அளவுடைய காலணிகளைத் தேர்வு செய்ய இக்கருவி பெருமளவில் பயன்படுத்தப் பட்டது. அதன் பிறகு, இது உலகெங்கிலும் உள்ள காலணிக் கடைகளில் இன்றியமையாத ஒரு கருவியாக மாறியது.

கருவியின் அமைப்பும் அளவிடும் முறையும்: பிரான்னாக் டிவைஸ் என்பது காலின் நீளத்தை மட்டும் அளவிடும் சாதாரண அளவுகோல் அல்ல. இது காலின் மூன்று முக்கிய பகுதிகளை ஒரே நேரத்தில் துல்லியமாக அளவிட வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை ஒட்டுமொத்த நீளம் (Heel-to-Toe Length): குதிகாலில் இருந்து காலின் பெருவிரல் அல்லது நீண்ட விரலின் நுனி வரையிலான நீளம்.

வளைவு நீளம் (Arch Length / Heel-to-Ball Length): குதிகாலில் இருந்து காலின் பெருவிரல் மூட்டு (Ball of the foot) வரையிலான நீளம்.

காலணி அளவு - Brannock Device
காலணி அளவு - Brannock DeviceImage credit: footsolutionsrichmond.co.uk

அகலம் (Width): காலின் பக்கவாட்டு அகலம்

செயல்படும் விதம்: இக்கருவியில் கால் பாதத்தை வைக்கும் இடத்தில் குதிகாலைச் சரியாகப் பொருத்த வேண்டும். பின்னர், பக்கவாட்டில் உள்ள நெகிழ்விகளைச் (Sliders) நகர்த்தி, விரல் மூட்டின் அமைப்பிற்கும் அகலத்திற்கும் ஏற்பச் சரிசெய்வதன் மூலம், ஒருவரின் காலிற்கு ஏற்ற சரியான காலணி அளவைக் கணக்கிட முடியும்.

பிரான்னாக் டிவைஸின் முக்கியத்துவம்: துல்லியமான பொருத்தம்: காலின் நீளம் சரியாக இருந்தாலும், காலின் வளைவு (Arch) சரியாகப் பொருந்தாவிட்டால் காலணி அணிவது அசௌகரியத்தை ஏற்படுத்தும். இக்கருவி வளைவு நீளத்தையும் சேர்த்து அளவிடுவதால், பாதங்களுக்கு மிகச்சரியான பொருத்தம் (Fit) கிடைக்கிறது.

பாத ஆரோக்கியம்: தவறான அளவுடைய காலணிகளை அணிவதால் ஏற்பட்டும் ஆணி நோய், விரல் வளைவு, தசை பிடிப்பு மற்றும் பாத வலி போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க இக்கருவியின் துல்லியமான அளவீடு உதவுகிறது.

1927-இல் கண்டுபிடிக்கப்பட்ட இதன் அடிப்படை வடிவமைப்பு மற்றும் இயக்க முறை, ஏறத்தாழ நூறு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட இன்றளவும் எந்தவொரு பெரிய மாற்றமும் இன்றி அப்படியே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
மழையில் நனைந்த வண்டியை ஸ்டார்ட் பண்ணாதீங்க... லட்சக்கணக்கில் பில் வரும்!
காலணி அளவு - Brannock Device

இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் பல கணினி மயமாக்கப்பட்ட அளவீட்டு முறைகள் வந்தபோதிலும், பிரான்னாக் டிவைஸ் தன் எளிமையான வடிவமைப்பு மற்றும் இணையற்ற துல்லியத்தால் இன்றளவும் உலகம் முழுவதிலும் உள்ள காலணிக் கடைகளில் முதன்மை அளவீட்டுக் கருவியாகத் திகழ்கிறது. நாம் அணியும் காலணிகள் ஆரோக்கியத்திற்கும் வசதிக்கும் உகந்ததாக இருக்கவேண்டும் என்பதை நினைவூட்டும் ஒரு மிகச்சிறந்த பொறியியல் கண்டுபிடிப்பாக இக்கருவி விளங்குகிறது.

இதையும் படியுங்கள்:
புது காலணி வாங்குறீங்களா? இந்த 5 அலாரம் அறிகுறிகளை முதல்ல செக் பண்ணுங்க!
காலணி அளவு - Brannock Device