
கார் பேட்டரிகள் வாகனங்களின் இதயத்துடிப்பாகும். இவை இயந்திரத்தை தொடங்கவும், மின்விளக்குகளை இயக்கவும், பல்வேறு மின்கூறுகளை இயக்கவும் தேவையான சக்தியை வழங்குகின்றன. கார் மற்றும் பைக் பேட்டரிகளில் முக்கியமாக லீட்-ஆசிட் பேட்டரிகள்(Lead-Acid), ஜெல் பேட்டரிகள்(Gel batteries) மற்றும் லித்தியம்- அயன் பேட்டரிகள்(Lithium- ion) உள்ளன. வாகனங்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்த பேட்டரிகள் பிரிக்கப்படுகின்றது. அதாவது ஸ்டார்டிங் பேட்டரி மற்றும் ட்ராக்கிங் பேட்டரி என இரண்டு வகைகள் உள்ளன. இவை வாகனத்தின் மின்சார அமைப்பை கவனித்துக் கொள்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட நமது வாகனங்களில் பேட்டரி என்பது ஒரே வகையான பயன் கொண்ட துணை அமைப்பாகத் தான் இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது உள்ள மின்சார வாகனங்களில் ஸ்டார்ட்டிங் பேட்டரி, ட்ராக்கிங் பேட்டரி என்ற இரண்டு வகைகள் மற்றும் இரண்டும் வெவ்வேறு வேலைகளைச் செய்கின்றன.
முக்கிய வகைகள்:
1) லீட்-ஆசிட் பேட்டரிகள்:
இவை மிகக்குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட பேட்டரிகள். மற்ற பேட்டரிகளைப் போலல்லாமல் லீட் ஆசிட் பேட்டரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றை சர்வீஸ் செய்ய முடியாது. பேட்டரிகளை மட்டுமே மாற்ற முடியும். இவை மிகவும் பொதுவான வகை மற்றும் கார், பைக் பேட்டரிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவை மின்னழுத்தத்தை உருவாக்க லீட் மற்றும் சல்பூரிக் அமிலத்தை பயன்படுத்துகின்றன. திரவ எலெக்ட்ரோலைட்டின் தன்மை காரணமாக காலப்போக்கில் ஆவியாதல் ஏற்படலாம். இது பேட்டரி செயல்திறன் குறைவதற்கு வழிவகுக்கும். எனவே இந்த பேட்டரிகளுக்கு அவ்வப்போது பராமரிப்பு மற்றும் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை நிரப்புவது தேவைப்படுகிறது.
ஆனால் லீட் ஆசிட் பேட்டரிகள் அவற்றின் வலிமை மற்றும் நிலையான மின்சாரம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. மற்ற வகை பேட்டரிகளுடன் ஒப்பிடும்பொழுது செலவு குறைந்தவை. அத்துடன் இந்த பேட்டரிகள் சந்தையில் எளிதாகவும் கிடைக்கின்றன.
2) ஜெல் பேட்டரிகள்:
இவை லீட்-ஆசிட் பேட்டரிகளின் ஒரு மாறுபாடாகும். அங்கு எலக்ட்ரோலைட் திரவத்திற்கு பதிலாக ஜெல் வடிவத்தில் இருக்கும். இதனால் கசிவு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. இவை வெப்பம், கசிவு, எலக்ட்ரோலைட் ஆவியாதல் போன்றவை இல்லாமல் நீண்ட சுழற்சி ஆயுளைக் கொண்டுள்ளன. பராமரிப்பு இல்லாதவை மற்றும் நீட்டிக்கப்பட்ட பேட்டரி ஆயுளை வழங்குகின்றது.
3) லித்தியம்-அயன் பேட்டரிகள்:
இவை மின்சார வாகனங்கள் மற்றும் அதிக மின் தேவைகளைக் கொண்ட வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் நன்மைகளில் நீண்ட ஆயுள் காலமும் அடங்கும். இந்த பேட்டரிகள் அதே சக்தி கொண்ட வழக்கமான கார் பேட்டரிகளை விட குறைவான எடை கொண்டவை. ஆனால் விலை சற்று அதிகமாக இருக்கும். அத்துடன் தவறாக சார்ஜ் செய்தால் தீ விபத்து ஏற்படலாம். இந்த பேட்டரிகள் அதிக சக்தி, எடை விகிதம், சிறந்த ஆற்றல் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளன. இவை மறுசுழற்சி செய்யக் கூடியவை. சுற்றுச்சூழலுக்கு உகந்த விருப்பமாக அமைகின்றது. இவை எடை குறைவாக இருக்கும் போது அதிக சக்தியை வழங்குகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் அதிக வெப்பமடைதல் காரணமாக பாதுகாப்பு குறித்து கவலையாக உள்ளது.
பயன்பாட்டின் அடிப்படையில் வகைகள்:
1) ஸ்டார்ட்டிங் பேட்டரிகள்:
ஸ்டார்ட்டிங் பேட்டரியானது குறைந்த மின்னழுத்த மின் அமைப்புகளான டேஷ்போர்டு, ஹெட்லைட்டுகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் மின்னணு கட்டுப்பாடு அலகு(ECU) ஆகியவற்றை கவனித்துக் கொள்ளும். பெரும்பாலும் இந்த ஸ்டார்டிங் பேட்டரி பெட்ரோல், டீசல் இன்ஜின்களில் பயன்படுத்துவது போல் இருக்கும். இந்த ஸ்டார்ட்டிங் பேட்டரி, ட்ராக்கிங் பேட்டரியில் இருந்து டிசி(DC) கன்வெர்ட்டரின் மூலம் சார்ஜ் செய்து கொள்ளும்.
2) ட்ராக்கிங் பேட்டரிகள்:
ட்ராக்கிங் பேட்டரிகள் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும். இதுதான் மின்சார மோட்டாரை இயக்கி சக்கரங்கள் மற்றும் பிற மின்னணு அமைப்புகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன.
மின்சார வாகனங்கள் பொதுவாக (EV) லித்தியம் அயன் பேட்டரிகளை பயன்படுத்துகின்றன. ஏனெனில் அவற்றின் அதிக சக்தி எடை விகிதம், ஆற்றல் திறன் மற்றும் கணிசமான ஆற்றலை சேமிக்கும் திறன் போன்றவையே காரணமாகின்றன.
முக்கியமாக பல்வேறு வகையான பேட்டரிகளுக்கு குறிப்பிட்ட சார்ஜிங் தேவைகள் உள்ளன. உற்பத்தியாளரின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதும், ஒவ்வொரு பேட்டரி வகைக்கும் பொருத்தமான சார்ஜரை பயன்படுத்துவதும் அவசியமாகிறது.