கார் ஓட்டும்போது ரோடே தெரியலையா? இந்த ஒரு உருளைக்கிழங்கு போதும்!

கெமிக்கல் தேவையில்லை; வீட்டிலிருக்கும் பொருளால் விபத்துகளைத் தடுத்துப் பாதுகாப்பாகப் பயணம் செய்யுங்கள்.
கார் கண்ணாடி - Car Windshield Hack
கார் கண்ணாடி - Car Windshield Hack
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

மழைக்காலத்தில் கார் ஓட்டும் பொழுது டிரைவர்கள் பொதுவாக சந்திக்கும் ஒரு பிரச்னை கார் கண்ணாடியில் தண்ணீர் பட்டு வண்டி ஓட்டும் பொழுது ரோடு சரியாகத் தெரியாமல் போவதுதான். அதேபோல் பனிக்காலத்திலும் கண்ணாடியில் பனி படர்ந்து ரோடு சரியாகத் தெரியாது வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவார்கள். இதற்கு நம் வீட்டில் இருக்கும் சாதாரண உருளைக்கிழங்கை வைத்தே இந்தப் பிரச்னையை ஓரளவுக்கு சரி பண்ணிவிடலாம்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா! பாதியாக வெட்டப்பட்ட உருளைக்கிழங்கை வண்டியின் கண்ணாடி மேல் தேய்க்க மழைத்தண்ணீர் கண்ணாடியில் ஒட்டாமல் சுலபமாக வழுக்கிக் கொண்டு சென்றுவிடும். இதனால் கண்ணாடியில் மழைத்தண்ணீர் தேங்காமல் டிரைவிங் செய்யும்போது சாலை தெளிவாகத் தெரியும். இது மழைக்காலத்தில் தெளிவான பார்வைக்கு உதவும் ஒரு எளிய அறிவியல் தந்திரமாகும்.

கார் கண்ணாடியில் உருளைக்கிழங்கை வெட்டித் தேய்த்தால் அதில் உள்ள ஸ்டார்ச் மற்றும் இயற்கையான சர்க்கரை கண்ணாடி மீது ஒரு மெல்லிய பாதுகாப்புப் படலத்தை உருவாக்கும்.

இதன் பின்னால் உள்ள அறிவியல்:

பரப்பு இழுவிசை (Surface Tension) என்கிற அறிவியல் கொள்கையின் அடிப்படையில்தான் இந்த வேலை நடக்கிறது. சாதாரணமாக மழைத்துளி கண்ணாடி மேல் பட்டால் அது பரவி ஒரு தண்ணீர் படலத்தை உருவாக்கிவிடும். இதனால் சாலை சரியாகத் தெரியாமல் பார்வை மங்கிவிடும். ஆனால் கண்ணாடி மேல் ஸ்டார்ச் படலம் இருக்கும்பொழுது தண்ணீர் துளிகள் பரவாமல் சின்னச் சின்ன உருண்டைகளாக நின்று, வண்டி ஓடும்போது வருகின்ற காற்றில் அவை சுலபமாக வழுக்கிக்கொண்டு ஓடிவிடும்.

உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் ஒரு ஒட்டும் தன்மையைக் கொண்டது. இது கண்ணாடிக்கும் வெளிப்பகுதி காற்றுக்கும் இடையே ஒரு மெல்லியத் தடையாகச் செயல்படுகிறது. மழைக்காலங்களில் விண்டோஸ்கிரீனில் ஒரு உருளைக்கிழங்குத் துண்டை வைத்து தேய்ப்பது விண்டோஸ்கிரீனில் மழைநீர் ஒட்டிக் கொள்வதை தடுக்க உதவும்.

கார் கண்ணாடி - Car Windshield Hack
கார் கண்ணாடி - Car Windshield Hack

வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடியை முதலில் நன்றாகக் கழுவி பிறகு வெட்டப்பட்ட உருளைக் கிழங்கைக் கொண்டு பக்கவாட்டில் தேய்க்கவும். கண்ணாடி ஜன்னலில் மாவுக்கீற்றுகள் தோன்றத் தொடங்கினால் அவற்றை ஒரு மைக்ரோஃபைபர் துணியால் துடைக்கவும். இப்படி செய்வதால் ஸ்டார்ச் கறை தெரியாமல் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.

கண்ணாடிக்கு சேதம் ஏற்படாதவாறு மென்மையாகத் தேய்த்து முடித்தவுடன் கண்ணாடியை நன்கு உலரவிடவும். அந்த சமயத்தில் விண்டோஸ்கிரீனைத் தொடாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் உருளைக்கிழங்கு சாற்றில் கைரேகைகள் படியக் கூடும். பிறகு பாருங்கள் அதிசயத்தை! மழைத்துளியோ, பனித்துளியோ கண்ணாடியில் படிவதை தடுத்து சிறப்பாக செயல்படும்.

இதையும் படியுங்கள்:
மழையில் சிக்கிய காரை ஸ்டார்ட் செய்தால் இன்ஜின் வெடிக்குமா? 90% பேர் செய்யும் 1 தவறு!
கார் கண்ணாடி - Car Windshield Hack

பனி மற்றும் மூடுபனி தடுப்பு:

காரின் கண்ணாடியை பனிமூட்டம் அல்லது உறைபனியில் இருந்து பாதுகாக்க உருளைக்கிழங்கை பயன்படுத்துவது சிறந்த பலனைத்தருகிறது. பாதியாக வெட்டப்பட்ட உருளைக்கிழங்கின் பக்கத்தை கண்ணாடியின் வெளிப்புற பரப்பில் நன்கு தேய்க்க முன்பக்க கண்ணாடியில் சிறந்த மாற்றத்தை நம்மால் உணரமுடியும்.

உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து கண்ணாடிக்கும் காற்றுக்கும் இடையில் ஒரு தடையாக செயல்பட்டு, முன்பக்கக் கண்ணாடி பனிமூட்டம் அடைந்து பார்ப்பதை கடினமாக்கும் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. குளிர் காலங்களில் பனி படர்வதையோ அல்லது மழை மற்றும் ஈரப்பதத்தால் கண்ணாடி பனிமூட்டம் (Fogging) அடைவதையோ இந்த ஸ்டார்ச் அடுக்கு தடுக்கிறது. நீர்த்திவலைகள் கண்ணாடியில் எளிதில் ஒட்டிக்கொள்ளாமல் சிதற இது உதவுகிறது.

செயற்கை ஸ்பிரேக்களுக்கு மாற்று:

உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து பிசுபிசுப்பாக இருப்பது, கண்ணாடி மீது பூசப்படும் பொழுது இந்த பிசுபிசுப்புத் தன்மையானது ஈரப்பதத்தில் இருந்து கண்ணாடியை பாதுகாக்கும் ஒரு தடுப்பாக செயல்படுகிறது. கடைகளில் விற்கும் ஆன்டி-ஃபாக் (Anti-fog) ஸ்பிரேக்கள் செய்யும் வேலையைத்தான் இந்த இயற்கை ஸ்டார்ச் செய்கிறது.

இது குறைந்த செலவில் செய்யக்கூடியது. அதிக விலை உள்ள ஆன்டி-ஃபாக் ஸ்ப்ரேக்கள் அல்லது ஸ்பெஷல் கெமிக்கல் கோட்டிங் எதுவும் வாங்கத் தேவையில்லை.

இது ஒரு தற்காலிகமான தீர்வுதான். வைப்பர்களைத் தொடர்ந்து பயன்படுத்தினாலோ அல்லது பலத்த மழை பெய்தாலோ இந்தப் படலம் விரைவில் கரைந்துவிடும். அதனால் நிரந்தர தீர்விற்கு, முக்கியமாக கனமழை பெய்யும் பொழுது காரின் வைப்பர்களையும், விண்ட்ஷீல்ட் வாஷர் சிஸ்டத்தையும் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அத்துடன் கார் கண்ணாடியை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.

இதையும் படியுங்கள்:
உங்க போன் மழையில் நனைஞ்சுடுச்சா? உடனே 'இந்த' 3 விஷயங்களைச் செய்யுங்க!
கார் கண்ணாடி - Car Windshield Hack