புது போன் பெட்டிக்குள் பழைய மொபைல்! ஐரோப்பாவில் அம்பலமான 3,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட மோசடி!

10 லட்சத்துக்கும் மேற்பட்ட போன்கள் புதியவை என ஏமாற்றி விற்பனை: 19 நாடுகளில் அதிரடி சோதனை!
ஆன்லைன் மோசடி - Refurbished Phone Scam
ஆன்லைன் மோசடி - Refurbished Phone Scam
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on: 

ஒருவர் ஆன்லைனில் ஆயிரம் யூரோ கொடுத்து ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்குகிறார். பெட்டி புத்தம் புதியது. வெளிப்புறத்தில் எந்தக் கீறலும் இல்லை. சீலும் சரியாக இருக்கிறது. ஆனால் அந்தப் பெட்டிக்குள் இருப்பது உண்மையில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட போன் என்றால் அவருக்கு எப்படி இருக்கும்?

ஐரோப்பாவில் இத்தகைய ஒரு மிகப்பெரிய ஆன்லைன் மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதிர்ச்சியூட்டும் முறையில் 10 லட்சத்துக்கும் அதிகமான பயன் படுத்தப்பட்ட மொபைல் போன்கள் “புதியவை” என்று விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நுகர்வோருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பு குறைந்தது 300 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 3000 கோடி ரூபாய்) என்றும், பல நாடுகளுக்கு ஏற்பட்ட VAT வரி இழப்பு 30 மில்லியன் யூரோவுக்கும் அதிகம் என்றும் ஐரோப்பிய பொது வழக்குத் தொடர்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பழைய பாகங்களில் உருவான ‘புதிய’ போன்கள்

‘டிரோஜா” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புலனாய்வு விசாரணையின்படி, பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்களின் உதிரிபாகங்கள் ஹாங்காங் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட இடங்களில் சேகரிக்கப்பட்டு, அவற்றைக் கொண்டு போன்கள் மீண்டும் அசெம்பிள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அந்த சாதனங்கள் சுத்தம் செய்யப்பட்டு, புதிய போன்களைப் போல பேக்கிங் செய்யப்பட்டன. இதன் பிறகு அவை நெதர்லாந்துக்கு அனுப்பப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். அங்கிருந்து ஜெர்மனியில் உள்ள கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு ஆன்லைன் சந்தைகள் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர் களுக்கு விற்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

ஆன்லைன் மோசடி - Refurbished Phone Scam
ஆன்லைன் மோசடி - Refurbished Phone Scam

இதில் முக்கியமான கேள்வி எழுகிறது: ஏன் நெதர்லாந்து?

நெதர்லாந்து – ஒரு ‘டிரான்சிட் ஹப்”

நெதர்லாந்து ஐரோப்பாவின் மிக முக்கியமான சரக்கு மற்றும் வர்த்தக மையங்களில் ஒன்று. உலகின் பல பகுதிகளில் இருந்து வரும் பொருட்கள் இங்கு வந்து, பின்னர் ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கு செல்லும் மிகப்பெரிய விநியோக வலையமைப்பைக் கொண்டுள்ளது.

எனவே, இந்த புது மெருகூட்டிய பழைய மொபைல் போன்கள் நெதர்லாந்தில் தயாரிக்கப்படவில்லை; மாறாக, பிற நாடுகளில் பழைய பாகங்களைக் கொண்டு அசெம்பிள் செய்யப்பட்ட மொபைல் போன்கள் நெதர்லாந்து வழியாக ஜெர்மனிக்கும் அங்கிருந்து ஐரோப்பிய சந்தைக்கும் சென்றதாக விசாரணை தெரிவிக்கிறது.

இந்த வழக்கில் இன்னும் சிக்கலான பகுதி “வாட் வரி மோசடி ஆகும். பழைய பொருட்கள் விற்பனைக்கான வாட் வரிச்சலுகையைப் பயன்படுத்தி, வரி ஏய்ப்பு செய்துவிட்டு, பழிய மொபைல் போன்களி புதிது என்று மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டிருக்கும் மோசடி இப்போது அம்பலமாகி உள்ளது. 2018ம் ஆண்டிலிருந்தே இந்த மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

19 நாடுகளில் அதிரடி நடவடிக்கை

19 ஐரோப்பிய நாடுகளில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 1,770 போலீஸ், சுங்கம் மற்றும் வரித்துறை அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை. எந்தெந்த நிறுவனங்கள், விற்பனையாளர்கள், ஆன்லைன் தளங்கள் மற்றும் சாதனங்கள் முழுமையாக இதில் தொடர்புபட்டுள்ளன என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்கிறது: ஆன்லைனில் ஒரு பொருளின் பெட்டி புத்தம் புதியதாக இருப்பது மட்டும், அந்தப் பொருளும் உண்மையில் புதியது என்பதற்கு உத்தரவாதம் அல்ல. குறிப்பாக விலை உயர்ந்த மொபைல் வாங்கும்போது விற்பனையாளர் யார், warranty எங்கிருந்து வருகிறது, IMEI/serial number சரியாக உள்ளதா, சாதனத்தின் வரலாறு என்ன என்பதையும் கவனிப்பது அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com