வெறும் ரூ.9,499 விலையில் 6000mAh பேட்டரி மற்றும் 5ஜி வசதி.. HMD போனின் மெகா ஆஃபர்!

பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே மற்றும் லேட்டஸ்ட் இயங்குதளத்துடன் வெளியாகும் எச்எம்டி வைப் 2 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் ஆஃபர் விவரங்கள்.
HMD Vibe 2 5G
HMD Vibe 2 5G
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on: 

ஸ்மார்ட்போன் சந்தையில் எப்போதுமே பட்ஜெட் ரக மாடல்களுக்கு ஒரு தனி மவுசு உண்டு. கம்மி விலையில் நிறைய தொழில்நுட்ப அம்சங்களை எதிர்பார்க்கும் நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் எச்.எம்.டி க்ளோபல் (HMD Global) நிறுவனம் ஒரு அட்டகாசமான புதிய போனை களமிறக்கியுள்ளது. 

இதன் பெயர் எச்எம்டி வைப் 2 5ஜி (HMD Vibe 2 5G). பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் ஒரு நிறைவான 5ஜி அனுபவத்தை தேடுபவர்களுக்கு இந்த சாதனம் மிகச்சிறந்த ஒன்றாக அமையும். இந்த மொபைலில் அப்படி என்ன ஸ்பெஷல் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.

வடிவமைப்பு மற்றும் டிஸ்ப்ளே!

இந்த புதிய மாடல் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காஸ்மிக் லாவெண்டர், பீச் பிங்க் மற்றும் நார்டிக் ப்ளூ ஆகிய மூன்று மனதை கவரும் நிறங்களில் இது விற்பனைக்கு வருகிறது. போனின் எடை வெறும் 210 கிராம் மட்டுமே என்பதால் கைகளில் வைத்து பயன்படுத்த மிகவும் வசதியாக இருக்கும். 

டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 6.7 இன்ச் அளவிலான எச்டி பிளஸ் (HD+) திரை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) இருப்பதால் சமூக வலைத்தளங்களை ஸ்க்ரோல் செய்யும்போதும், வீடியோக்களை பார்க்கும்போதும் ஸ்கிரீன் மிகவும் ஸ்மூத்தாக செயல்படும்.

பேட்டரி மற்றும் OS!

இந்த மொபைலின் மிக முக்கிய ஈர்ப்பாக இதன் 6000mAh மெகா பேட்டரி அமைந்துள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒன்றரை நாட்கள் வரை தைரியமாக பயன்படுத்த முடியும். மேலும் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருப்பதால் சீக்கிரமாகவே சார்ஜ் ஏறிவிடும். இதற்கான சார்ஜர் அடாப்டர் மொபைல் பாக்ஸிலேயே வருவது கூடுதல் சிறப்பு. சாப்ட்வேர் பிரியர்களுக்காக இந்த போன் நேரடியாக Android 16 இயங்குதளத்துடன் வெளிவருகிறது.

இதையும் படியுங்கள்:
டெஸ்லாவின் புதிய வரவு 'Model Y L': இந்தியாவில் முன்பதிவு தொடங்கியது - சிறப்பம்சங்கள் என்ன?
HMD Vibe 2 5G

செயல்திறன் மற்றும் கேமரா!

தினசரி பயன்பாட்டிற்கு எந்த வித தடையுமின்றி செயல்பட ஏதுவாக 2.3 ஜிகாஹெர்ட்ஸ் (2.3GHz) வேகம் கொண்ட ஆக்டா-கோர் யூனிசாக் (Unisoc) பிராசஸர் இதில் உள்ளது. புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்காக பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய முதன்மை கேமரா இடம்பெற்றுள்ளது.

இதன் மூலம் மிகத் துல்லியமான படங்களை எடுக்கலாம். செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 8 மெகாபிக்சல் கேமரா முன்பக்கத்தில் அழகாக கொடுக்கப்பட்டுள்ளது. போனில் தண்ணீர் பட்டு வீணாவதை தடுக்க IP64 தரச்சான்றிதழும், பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் கைரேகை சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் சலுகைகள்!

4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வேரியன்டின் அசல் விலை ரூபாய் 10,999 ஆகும். ஆனால் மே 26-ம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறும் Flipkart முதல் நாள் விற்பனையில், குறிப்பிட்ட பேங்க் கார்டு அல்லது UPI மூலம் ரூபாய் 1,500 நேரடி தள்ளுபடி பெறலாம். இந்த ஆஃபரில் இதனை வெறும் ரூபாய் 9,499க்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம். அதேபோல 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலை ஆஃபர் போக ரூபாய் 10,499 விலையில் வாங்கலாம்.

இதையும் படியுங்கள்:
யூரோப் சுற்றுலா (9) - விழுந்து எழுந்த அனுபவமும், வேறு பல இடையூறுகளும்...
HMD Vibe 2 5G

கம்மியான பட்ஜெட்டில் ஒரு பெரிய பேட்டரி, லேட்டஸ்ட் சாப்ட்வேர், நல்ல கேமரா மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பேக்கேஜாக இந்த சாதனம் வந்துள்ளது. கல்லூரி மாணவர்களுக்கும், அன்றாட பயன்பாட்டிற்கும் ஏற்ற ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை வாங்க நினைப்பவர்கள் இந்த மாடலை தாராளமாக பரிசீலனை செய்யலாம்.

logo
Kalki Online
kalkionline.com