விண்மீன்கள் எப்படி பிறக்கின்றன? பிரபஞ்சத்தின் மர்மங்கள்!

தூசு மற்றும் வாயுக்களில் இருந்து உருவாகும் விண்மீன்களின் பிறப்பு மற்றும் பரிணாம வளர்ச்சி ரகசியங்கள்.
விண்மீன்கள் - Birth of stars
விண்மீன்கள் - Birth of stars
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

தூசு நிரம்பிய வாயு விண் முகில்களிலிருந்து  உண்டானவையே விண்மீன்கள். விண்வெளியில் இந்த தூசும் வாயுவும் மிகக்குறைந்த அடர்த்தியில் காணப்படுகிறது. நிறை ஈர்ப்பினால், குறிப்பிட்ட பொது மையத்தை நோக்கி விண்முகில் சுருங்க தொடங்குவதால் மெதுவாக அடர்த்தி அதிகரிக்கிறது; அழுத்தமும் கூடுகிறது; வெப்பநிலை உயர்கிறது. சில நூறு ஆண்டுகளில் வெப்பநிலை சில ஆயிரம் டிகிரி அளவு உயரும்.

மைய அழுத்தம் நிறை ஈர்ப்பு ஆற்றலை ஈடுகட்டும் அளவுக்கு அதிகரித்த  பின் விண்முகில் சுருங்குவதால் நிற்கும். இந்நிலையில் விண்மீன் உருவாக தொடங்குகிறது. இந்த சுருக்கம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு தொடரும் போது விண்மீனின் வெப்பநிலை ஒரு கோடி டிகிரி வரை உயரும். உயர் வெப்பநிலையில் ஹைட்ரஜன் அணுக்கருக்கள் பிணைந்து ஹீலியமாக மாறுகிறது.

அணுக்கரு பிணைவின்போது ஆற்றல் அதிக அளவு வெளிப்படுகிறது. இந்நிகழ்வு பலகோடி ஆண்டுகளுக்கு ஆற்றலைத் தந்து முழுமையான விண்மீனாக தோற்றமளிக்க செய்கிறது. விண்மீன்கள் பெரும்பாலும் கூட்டமாகவே பிறக்கின்றன.  சில இரட்டையாகவும், சில சூரியனைப்போல் குடும்ப கோள்களுடனும் பிறக்கின்றன.

விண்மீன்களின் நிறமும் வயதும்: இரவில் வானில் விண்மீன்கள் வெவ்வேறு நிறங்களில் ஒளிர்வதைக் காணலாம். அவற்றின் நிற வேறுபாட்டை அறிய நிறக் குறிப்பு எண் பயன்படுத்தப்படுகிறது ‘சைரஸ்' என்பது சுழி நிறக்குறிப்பு எண்ணுடைய ஒரு வெள்ளை விண்மீன். நிறக்குறிப்பு எண் 0.81 பெற்ற சூரியன் ஒரு மஞ்சள் நிற விண்மீன். 1.5 நிறக்குறிப்பு எண் கொண்ட ‘அன்ட்ராரஸ்' சிவப்பு நிற விண்மீன் ஆகும். நிறமாலையின் துணையுடன் ஆராய்ந்து விண்மீன்களின் நிறம், வயது, அளவு, செல்லும் திசை, வேகம் ஆகியவற்றையும் அவற்றில் அடங்கியுள்ள தனிமங்களையும் அறிய முடிகிறது.

விண்மீன்களின் ஆயுள்: நிறை வெப்ப ஆற்றல்களை பொறுத்து  விண்மீன்களின் ஆயுள் அமையும். விண்மீனின் நிறை இரு பங்காக அதிகரித்தால் ஆயுள் நான்கில் ஒரு பங்காக குறையும். அளவும், நிறையும் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும். சூரியன் நடுத்தர அளவுடைய விண்மீன். இதன் ஆயுள் சுமார் 10000 மில்லியன் ஆண்டுகள் ஆகும். சூரியன் இதுவரை பாதி ஆயுளை இழந்துள்ளது.

விண்மீன்கள் - Birth of stars
விண்மீன்கள் - Birth of stars

விண்மீன்களின் வகைகள்

1.சிவப்பு ராட்சசன்: சூரியன் அல்லது அதற்கு மேலான நிறையுடைய விண்மீன்கள் முதலில் விண்முகில் சுருங்குவதால் உருவாகி மையக்கருவில் நிகழும் அணுக்கரு பிணை வால் ஹைட்ரஜன் எரிந்து தீர்ந்ததும், மையக்கரு சுருங்கும். அப்போது விண்மீனின் மேலடுக்கு வெளிப்புறம் விரியும். உருவில் மிகப்பெரியதாக மாறும். நிறமும் சிவந்து காணப்படும். இவ்வகை விண்மீன்  சிவப்பு ராட்சசன் எனப்படும்.

2.வெள்ளைக் குள்ளன்: சிவப்பு  ராட்சசனின் மேலடுக்கு விரிவடையும்போது மையக்கரு தொடர்ந்து சுருங்கும். அழுத்த மிகுதியால் மையக் கருவில் வெப்பநிலை உயரும். இக்கட்டத்தில் மேலடுக்கு வெடித்து வெளிப்புறமாக வளையம்போல் விரிவடையும். இதனை நோவா வெடிப்பு என்பர். நோவா வெடிப்பிற்குப் பின் இவ்விண்மீன் வெள்ளைக் குள்ளன் எனப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உறைபனியை விரட்டும் சுப்பீரியர் ஏரி: பழத்தோட்டங்களை வாழவைக்கும் இயற்கை விந்தை!
விண்மீன்கள் - Birth of stars

3.நியூட்ரான் விண்மீன்கள்:  சுருங்கிய விணமீனின் மையக்கரு வெப்பம் சுமார் 60 கோடி டிகிரியை எட்டும். அப்போது ஏற்படும் அணு வினையால் வெப்பம் அதிகரித்து 500 கோடி டிகிரியை அடையும். இந்நிலையில்  நியூட்ரினோக்கள் உருவாகின்றன.

வெப்பம் 600 கோடி டிகிரியை அடையும்போது இவ்விண்மீனின் அணுக்கருவில், புரோட்டான் களுடன் எலக்ட்ரான்கள் அழுத்தப் பட்டு நியூட்ரான் களாக மாறும். இந்நிலையில்  விண்மீனில் வெறும் நியூட்ரான்கள் மட்டுமே இருப்பதால் இவ்விண்மீன் நியூட்ரான் விண்மீன் எனப்படும்.

4.கருப்புத் துளை: நியூட்ரான்  விண்மீன்களின் நிறை  குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால், நிறையீர்ப்பினால் மேலும் சுருங்கிக்  கருப்புத்துளை உண்டாகும். கருப்புத் துளைக்கு ஈர்ப்பு ஆற்றல் மிக அதிகம். இதிலிருந்து ஒளி கூட விடுபட முடியாது.

இதையும் படியுங்கள்:
45 அடி டைனோசருக்கு வெறும் 3 அடி கை ஏன்? ஷாக்கிங் உண்மை இதோ!
விண்மீன்கள் - Birth of stars