45 அடி டைனோசருக்கு வெறும் 3 அடி கை ஏன்? ஷாக்கிங் உண்மை இதோ!

வரலாற்றுக்கு முந்தைய உலகை ஆண்ட ராட்சச மிருகமான டைனோசர்களின் டி-ரெக்ஸ் கைகள் ஏன் மிகவும் சிறியதாக இருந்தன என்பதற்கான அறிவியல் பூர்வமான காரணத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
டி-ரெக்ஸ் கைகள் T rex small arms
டி-ரெக்ஸ் கைகள் T rex small arms
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

சிறு வயதில் ஜுராசிக் பார்க் டைனோசர் படங்களை பார்க்கும் போது அதன் பிரம்மாண்டம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும். அதிலும் குறிப்பாக டி-ரெக்ஸ் (T-rex) வகை டைனோசர் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருக்கும். ஆனால் அதன் கைகளை பார்த்தால் எனக்கு எப்பொழுதும் சிரிப்பு தான் வரும்.

சுமார் 45 அடி நீளமுள்ள அந்த பிரம்மாண்ட மிருகத்திற்கு வெறும் 3 அடி நீளத்தில் குட்டியான கைகள் இருந்தன. 6 அடி உயரமுள்ள மனிதனுக்கு 5 இன்ச் அளவிலான கைகள் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அதுவும் இருந்தது. இதைப்பற்றி பல முறை நான் ஆச்சரியமாக சிந்தித்து இருக்கிறேன்.

தலைக்குள் ஒளிந்திருக்கும் உண்மை!

பல காலங்களாக விஞ்ஞானிகளுக்கு இது ஒரு பெரிய குழப்பமாகவே இருந்து வந்தது. தற்போது லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இதற்கான விடையை கண்டுபிடித்துள்ளனர். ஆய்வாளர்களின் கூற்றுப்படி இவற்றின் மிகப்பெரிய வலிமையான தலையின் பரிணாம வளர்ச்சி தான் இந்த குட்டையான கைகளுக்கு முக்கிய காரணமாகும். டி-ரெக்ஸ் கைகள் ஏன் சிறியதாக மாறின என்ற நீண்ட கால மர்மம் இப்போது விலகியுள்ளது.

சுமார் 82 வகையான தெரோபாட் (Theropod) டைனோசர்களின் தரவுகளை அவர்கள் தீவிரமாக பகுப்பாய்வு செய்தனர். இதன் முடிவில் இவற்றின் மண்டையோடுகள் மற்றும் தாடைகள் வலிமையாக வளரத் தொடங்கிய போது கைகள் சுருங்க ஆரம்பித்தன என்பதை கண்டறிந்தனர். இவை வேட்டையாடுவதற்கு கைகளை பயன்படுத்துவதை படிப்படியாக குறைத்துக் கொண்டு தங்களின் வலிமையான தாடைகளை முழுமையாக நம்பத் தொடங்கின.

டி-ரெக்ஸ் கைகள் T rex small arms
டி-ரெக்ஸ் கைகள் T rex small arms

வேட்டையாடும் முறையில் ஏற்பட்ட மாற்றம்!

சுமார் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த உயிரினங்கள் மிகப்பெரிய விலங்குகளை வேட்டையாட வேண்டி இருந்தது. சுமார் 100 அடி நீளமுள்ள ஒரு பெரிய இரையை சிறிய நகங்களால் பிடிப்பது சாத்தியமற்றது. எனவே இவை தங்களின் சக்திவாய்ந்த தாடை தசைகளைப் பயன்படுத்தி இரையை கடித்துப் பிடிக்கும் வகையில் தங்களை முழுமையாக மாற்றிக் கொண்டன.

பயன்படுத்தினால் வளரும் அல்லது பயன்படுத்தாவிட்டால் சுருங்கிவிடும் என்பது இயற்கையின் ஒரு எளிய விதி. இவை வேட்டையாட கைகளை அதிகம் பயன்படுத்தாததால் காலப்போக்கில் அந்த கைகள் இயற்கையாகவே சுருங்கிவிட்டன. கார்னோடாரஸ் (Carnotaurus) போன்ற மற்ற சில டைனோசர்களுக்கும் அவற்றின் உடல் எடையுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறிய அளவிலான கைகள் இருந்ததை இந்த ஆழமான ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
Idli batter ratio: இனிமேல் கடையில் இட்லி வாங்கவே மாட்டீங்க... அவ்ளோ சாஃப்ட்டா வீட்லயே செய்யலாம்!
டி-ரெக்ஸ் கைகள் T rex small arms

பழைய ஆய்வுகள்!

இந்த புதிய கண்டுபிடிப்பு வருவதற்கு முன்பு பல விஞ்ஞானிகள் பலவிதமான விசித்திரமான காரணங்களை கூறினார்கள். கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆராய்ச்சியாளர்கள் உணவு உண்ணும் போது மற்ற டைனோசர்கள் தவறுதலாக கைகளை கடித்து விடாமல் இருக்கவே இவற்றுக்கு குட்டையான கைகள் இருந்தன என்று கூறினார்கள். இது கேட்பதற்கு சற்று வேடிக்கையாக இருந்தாலும் அன்று அது ஒரு முக்கியமான கோட்பாடாகவே பார்க்கப்பட்டது.

அர்ஜென்டினாவில் உள்ள மற்றொரு குழு இந்த சிறிய உறுப்புகள் அவற்றின் இனப்பெருக்க செயல்பாடுகளின் போது துணையை இறுக்கமாக பிடித்துக் கொள்ள உதவியாக இருந்தன என்று கூறினார்கள். மேலும் அந்த பிரம்மாண்டமான மிருகம் கீழே விழுந்தால் தரையில் இருந்து மீண்டும் எழுந்து நிற்க இந்த சிறிய கைகள் உதவியிருக்கலாம் என்றும் அவர்கள் ஆழமாக நம்பினார்கள்.

இதையும் படியுங்கள்:
வண்டிக்குள் ஹெல்மெட்டை அப்படியே வைப்பவரா? முடி உதிர்வுக்கு இதுதான் முக்கியக் காரணம்!
டி-ரெக்ஸ் கைகள் T rex small arms

பரிணாம வளர்ச்சி!

இந்த மாபெரும் உயிரினங்களை உற்று நோக்கினால் இயற்கை ஒவ்வொரு உயிரினத்தையும் அதற்கேற்ப மிகச் சரியாகவே வடிவமைக்கிறது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். மடகாஸ்கரில் வாழ்ந்த வெறும் 1.6 டன் எடையுள்ள மஜுங்காசாரஸ் (Majungasaurus) என்ற டைனோசருக்கும் இதே போன்ற பண்புகள் இருந்தன. எனவே உடலின் அளவு மட்டுமே கைகள் சுருங்குவதற்கு முக்கிய காரணம் இல்லை என்பது இதன் மூலம் மிகத் தெளிவாகப் புரிகிறது.

இந்த உயிரினங்களின் உறுதியான மண்டையோடு உருவான பிறகு தான் அவற்றின் கைகள் சுருங்கி இருக்க வேண்டும். இப்போது டி-ரெக்ஸ் கைகள் பற்றிய பல கால குழப்பம் முற்றிலும் தீர்க்கப்பட்டுள்ளது. விலங்குகளின் உயிர்வாழும் தேவைகளின் அடிப்படையில் அவற்றை வடிவமைப்பதில் பரிணாம வளர்ச்சி உண்மையிலேயே ஒரு அற்புதமான செயல்முறையாகும்.

logo
Kalki Online
kalkionline.com