நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் பழைய புகைப்படங்கள் நிச்சயம் இருக்கும். அவை வெறும் காகிதங்கள் அல்ல; பல வருடங்களுக்கு முந்தைய பொன்னான நினைவுகளையும், விலைமதிப்பற்ற கதைகளையும் தன்னுள் தாங்கி நிற்கும் பொக்கிஷங்களாகும். குறிப்பாக, நம்மை விட்டுப் பிரிந்த அன்புக்குரியவர்களின் புகைப்படங்கள் விலைமதிப்பற்றவை.
ஆனால், காலம் செல்லச் செல்ல இந்தப் புகைப்படங்கள் மங்கிப் போவது, கீறல்கள் விழுவது, நிறம் மாறுவது அல்லது கிழிந்து போவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. கவலை வேண்டாம், இன்றைய AI தொழில்நுட்பம் இந்தப் பழைய புகைப்படங்களை மீண்டும் புத்தம் புதியதாக மாற்றுவதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தின் உதவி!
முன்பெல்லாம் பழுதடைந்த புகைப்படங்களைச் சரிசெய்ய வேண்டும் என்றால், பெரிய புகைப்பட ஸ்டுடியோக்களுக்குச் சென்று அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால், இன்று உங்கள் வீட்டில் இருந்தபடியே AI கருவிகளின் மூலம் இதை மிக எளிதாகச் செய்துவிட முடியும்.
இதற்கென பல நவீனக் கருவிகள் இருந்தாலும், தற்போது மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் ChatGPT இதில் சிறந்ததாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் உங்கள் தாத்தா பாட்டி காலத்து கறுப்பு வெள்ளைப் படங்களைக் கூட இயற்கையான வண்ணப் படங்களாக எளிதாக மாற்ற முடியும்.
பழைய புகைப்படங்களை சரிசெய்யும் முறை!
சாட்ஜிபிடி மூலம் புகைப்படங்களைப் புதுப்பிக்கப் பெரிய தொழில்நுட்ப அறிவு எதுவும் தேவையில்லை. முதலில் சாட்ஜிபிடி தளத்தைத் திறந்து, நீங்கள் சரிசெய்ய விரும்பும் பழைய புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு, அந்தப் புகைப்படம் எப்படி மாற வேண்டும் என்பதை ஒரு சிறிய வாக்கியமாக ஆங்கிலத்தில் டைப் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
உதாரணமாக, படத்தில் உள்ள கீறல்கள் மற்றும் தூசிகளை நீக்கி, முகங்கள் தெளிவாகத் தெரியுமாறு மாற்றுங்கள் என்று கட்டளையிடலாம்.
(Restore this old family picture and remove all kinds of scratch marks, dust marks, creases, stains, and faded sections. Every individual must be recognised from his/her facial expressions, hairstyles, clothing, background, and overall appearance. This restoration should maintain its historical authenticity. No artificial changes should be made to any face.)
இந்த Prompt கொடுத்த்த சில விநாடிகளில் ஏஐ கருவி புகைப்படத்தைச் சரிசெய்து உங்களுக்குத் தரும். அதில் உங்களுக்கு முழுத் திருப்தி இல்லை என்றால், மேலும் என்ன மாற்றங்கள் வேண்டும் என்று மீண்டும் கட்டளையிடலாம். உங்களுக்குத் திருப்தியான முடிவு கிடைத்ததும், அந்தப் புதிய புகைப்படத்தை நீங்கள் எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
சரியான Prompts வழங்கும் முறை!
புகைப்படத்தின் நிலையைப் பொறுத்து நீங்கள் வெவ்வேறு விதமான Prompt-களை வழங்கலாம்.
முழுமையாக மங்கிய புகைப்படத்திற்கு, "Improve the clarity of this old family photo by reducing grain, correcting mild blur, and enhancing visible details. Preserve each person's original facial structure, age, expression, skin texture, and hairstyle. Keep the result realistic and faithful to the source. Avoid excessive sharpening, plastic-looking skin, or inventing details that cannot be recovered." என்று கேட்கலாம்.
கறுப்பு வெள்ளைப் படத்திற்கு நிறம் சேர்க்க, "Colourise this black-and-white family photograph using natural, historically plausible colours. Add realistic tones to skin, hair, clothing, and surroundings while preserving the original lighting, composition, and expressions. Keep the colours subtle and believable for the photo's era. Avoid oversaturation, exaggerated contrast, and changes to anyone's identity." என்று கட்டளையிடலாம்.
பழைய புகைப்படங்களைப் புதுப்பிக்கும்போது, அதன் அசல் தன்மை மாறாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். இந்த ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் குடும்பத்தின் பொக்கிஷமான பழைய புகைப்படங்களுக்குப் புதிய உயிர் கொடுங்கள்.