தையல் வேகத்தின் உச்சம்! ஜப்பானின் 'கன்சாய் மெஷின் ஸ்பெஷல்'

தையல் உலகில் பல்வேறு இயந்திரங்கள் உற்பத்தி வேகத்தையும் அழகையும் தீர்மானிக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக 'கன்சாய் மெஷின்' (Kansai Machine) கருதப்படுகிறது.
Kansai Sewing Machine
Kansai Sewing Machine
Published on

'கன்சாய்' என்றால் தையல் உலகில் ஜப்பானில் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு தொழில்துறை தையல் மெஷின் (Kansai Special brand) என்பதே பொருள். இது பல ஊசிகளுடன், மிக வேகமாகவும், நயமுடனும் தைக்கும் சிறப்பு இயந்திரமாகும். தையல் உலகில் பல்வேறு இயந்திரங்கள் உற்பத்தி வேகத்தையும் அழகையும் தீர்மானிக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக 'கன்சாய் மெஷின்' (Kansai Machine) கருதப்படுகிறது. ஜப்பானில் தயாரிக்கப்படும் இந்த சிறப்பு மெஷின், துணி உற்பத்தித் துறையில் வேகத்திற்கும் நயத்திற்கும் அடையாளமாக விளங்குகிறது.

கன்சாய் மெஷின் என்றால் என்ன?

'கன்சாய் ஸ்பெஷல்' (Kansai Special) என்பது ஜப்பானிய தொழில்துறை தையல் மெஷின் நிறுவனம். இதன் இயந்திரங்கள் ஒரே நேரத்தில் பல ஊசிகள் (2, 3, 4 அல்லது அதற்கு மேல்) கொண்டு தைக்கும் திறன் கொண்டவை. இது குறிப்பாக நீளும் துணிகள் (knitted fabrics) மற்றும் உள்ளாடைகள், டி-ஷர்ட்கள், ஸ்போர்ட்ஸ் உடைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

கன்சாய் மெஷின் வகைகள்:

கன்சாய் மெஷின்களில் பல வகைகள் உள்ளன.

Flat Seam Machine: இரு துணிகளை சமமாக இணைக்க தைக்கும்.

Cover Stitch Machine: டி-ஷர்ட் கால், கை மற்றும் கீழ் வாய் தையலுக்கு.

Multi-Needle Machine: ஒரே நேரத்தில் பல வரிசை தையல் செய்ய உதவும்.

Elastic Attachment Machine: உள்ளாடைகளில் எலாஸ்டிக் பொருத்துவதற்கு.

Binding Machine: துணியின் ஓரம் சீராக முடிக்க பயன்படும்.

இதையும் படியுங்கள்:
நிலவு துரு பிடிக்கிறதாமே!
Kansai Sewing Machine

கன்சாய் மெஷின் சிறப்புகள்:

மிகுந்த வேகம் மற்றும் துல்லியம். தையல் மிக வலுவானது மற்றும் அழகான முடிப்புடன் இருக்கும். துணி இழுவை ஏற்பட்டாலும் தையல் கிழிவதில்லை. தொழில்துறை அளவிலான உற்பத்திக்கு ஏற்றது.

பயன்பாடுகள்: டி-ஷர்ட்கள், ஜெர்சி, உள்ளாடைகள், குழந்தை உடைகள், ஸ்போர்ட்ஸ் டிரஸ்கள் போன்றவற்றில் பெரிதும் பயன்படுகிறது. பல ஊசிகளின் ஒரே நேர தையல் மூலம் நேரம் மிச்சம் மற்றும் நிறைவு தரம் மேம்பாடு கிடைக்கிறது. தையல் தொழிலில் நவீன தொழில் நுட்பத்தின் சிறந்த உதாரணமாக கன்சாய் மெஷின் விளங்குகிறது. வேகம், துல்லியம் மற்றும் அழகு ஆகிய மூன்றையும் ஒருங்கே இணைக்கும் இந்த மெஷின், துணி உற்பத்தி உலகில் நம்பகமான துணைவனாக திகழ்கிறது.

இதையும் படியுங்கள்:
மின்னலும் இடியும் பயங்கரமானது! விபரீத விளையாட்டு வேண்டாம் மக்களே!
Kansai Sewing Machine

'பீடா தையல்' என்றால் என்ன?

பீடா தையல் என்பது பொதுவாக தையல் மெஷினில் செய்யப்படும் ஒரு வகை வலுப்படுத்தும் தையல் (Reinforcement stitch) ஆகும். அதாவது, துணியின் கீழ் பக்கம் அல்லது விளிம்பில் (border area) மெஷின் மூலம் வலுவாக ஒரு கூடுதல் கோடு போட்டு தைக்கும் முறை. இதை சிலர் 'பீடா போடுதல்' என்றும் சொல்வார்கள்.

பீடா தையலின் நோக்கம்: துணியின் விளிம்புகள் உருகாமல் அல்லது சிதையாமல் இருக்க. கச்சா தையல் பகுதியில் வலிமை கூட்ட. சில வடிவங்களில் (பாவாடை ஓரம், ஜாக்கெட் சிங்கிள் லைன், பேண்ட் முடிவுகள்) அழகிற்காகவும் போடப்படும்.

இதையும் படியுங்கள்:
ஒரே நேரத்தில் உயிருடனும் உயிரில்லாமலும் ஒரு பூனை! விஞ்ஞான உலகையே குழப்பிய கதை!
Kansai Sewing Machine

பீடா தையலின் முறை: துணியின் ஓரத்தை மடித்து மெஷின் பீடத்தின் அருகே வைக்க வேண்டும். மெஷினின் அழுத்த பீடம் (Presser foot) மூலம் துணியை பிடிக்க வேண்டும். மெஷின் ஊசியை நேராகப் போட்டு ஒரு சீரான ஓர் கோடு தையல் போட வேண்டும். இதன் மூலம் துணி அழகாகவும் வலுவாகவும் இருக்கும்.

சில இடங்களில் 'பீடா தையல்' என்பதைக் அழகுக்கான வரித் தையல் (Decorative edge stitch) என்றும் குறிப்பிடுவர். 'பீடா தையல்' என்பது துணியின் விளிம்பில் சீராகவும் வலுவாகவும் போடப்படும் மெஷின் வரித் தையல் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com