விண்வெளியில் ஒரு புதிய அதிசயம்: பூமியை விட 23 மடங்கு எடைகொண்ட 'மெகா எர்த்' GJ523b கண்டுபிடிப்பு!

சூரிய மண்டலத்திற்கு வெளியே அடர்த்தி மிகுந்த பாறை கிரகத்தை கண்டறிந்து அசத்தியுள்ளனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.
மெகா எர்த் - Mega Earth exoplanet
மெகா எர்த் - Mega Earth exoplanetImage credit - Gemini
Updated on

வானவியல் விஞ்ஞானிகள் ஒரு அசாதாரணமான கிரகத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது பூமியைப் போல அடர்த்தியாக நமது சூரிய மண்டலத்திற்கு வெளியில் உள்ளது. இதனுடைய பெயர் GJ523b.

இது பூமியைப்போல இரண்டரை மடங்கு அகலமானது. அதே சமயம் நமது பூமியில் உள்ள பொருள்திணிவைப் போல 23 மடங்கு அதிகமான அளவில் இது உள்ளது. இப்படிப்பட்ட பூமியைப் போன்ற கிரகத்தை மெகா எர்த் – பிரம்மாண்டமான பூமி என்று சொல்வது வழக்கம்.

இதைப் பற்றிய விரிவான விவரங்களை விஸ்கான்ஸின் மேடிஸன் பல்கலைக்கழகம் (Wisconsin-Madison University) வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய மாக்ஸ் க்ராஃப்ட், “இப்படிப்பட்ட அடர்த்தி அதிகமான கிரகங்கள் பல உள்ளன. ஆனால் அவை பூமி மற்றும் புதன் போல சின்னச்சின்ன பாறைகளைக்கொண்ட கிரகங்களாகும். இதுவோ பூமியைப்போல இரண்டரை மடங்கு பெரிதாக உள்ளது” என்கிறார்.

அரிஜோனாவில் உள்ள கிட் பீக் நேஷனல் ஆப்ஸர்வேடரியில் உள்ள 3.5 மீட்டர் டெலஸ்கோப்பினால் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் குறுக்களவு அகலம் பூமியைப் போல இரண்டரை மடங்கு அதிகமாகவும் பொருள்திணிவு பூமியைப் போல 23.5 மடங்கு அதிகமாக இருப்பதையும் குழு கண்டுபிடித்தது.

ஒரு கன அங்குலத்திற்கு126.82 கிராம் அடர்த்தி கொண்டதாக இது உள்ளது.

இது தனது நட்சத்திரத்தை ஒருமுறை சுற்றுவதற்கு 17.75 நாட்களாகிறது. இதனுடைய வயதோ என்றால் 1700 லட்சம் வருடங்களாகும்.

பொதுவாக இப்படிப்பட்ட அதிக அடர்த்தி உள்ள கிரகங்கள் அதிக வாயுவளம் உள்ளதாக இருக்கும் போது இது அப்படி இல்லாமல் இருக்கிறது!. ஏன் இங்கு இப்படி வாயு அதிகம் இல்லை என்று விஞ்ஞானிகள் ஆராய ஆரம்பித்துள்ளனர். இரண்டு கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதினால் இப்படி ஏற்பட வாய்ப்பு உண்டு அல்லது இயல்பாகவே மிக கனமான வளிமண்டலம் இருந்திருக்கக்கூடும் என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.

‘இப்படிப்பட்ட பிரம்மாண்டமான கிரகத்தைப் பற்றி கருத்துக்களை ஊகிப்பது சரியாக இருக்காது’ என்று கூறும் மாக்ஸ் க்ராஃப்ட், “இப்படி இன்னும் பத்தாயிரம் பூமிகளை நாம் பார்க்கப் போவதில்லை. ஆனால் இருபது அல்லது முப்பது கிரகங்கள் இருந்தாலேயே போதும். இவை பற்றி சரியான கருத்து நமக்கு உருவாகும்” என்கிறார்.

இவரது கண்டுபிடிப்பு அஸ்ட்ரானமிகல் ஜர்னல் இதழுக்குத் தரப்பட்டுள்ளது.

மெகா எர்த் - Mega Earth exoplanet
மெகா எர்த் - Mega Earth exoplanetImage credit - Gemini

நமது பூமியைப் பற்றிய சில முக்கிய அடிப்படைத் தகவல்கள் இவை:

சூரிய மண்டலத்தில் ஐந்தாவது பெரிய கிரகம் நமது பூமி.

மிக முக்கியமான விஷயம் என்னவெனில் நமக்குத் தெரிந்தமட்டில் மனிதன் உயிர் வாழும் சூழலைக் கொண்டுள்ள ஒரே கிரகம் இதுதான்.

சூரியனிலிருந்து இதன் சராசரி தூரம் 149,600,000 கிலோமீட்டர். (92,960,000 மைல்கள்)

சூரியனை ஒரு முறை சுற்ற இது எடுத்துக் கொள்ளூம் காலம் 365.256 நாட்கள்.

இதன் ஆரம் 6378 கிலோமீட்டர் (3963 மைல்கள்)

இதன் பரப்பு 510064,472 சதுரகிலோமீட்டர்

இதன் பொருள்திணிவு 5.972 × 1024 கிலோ.

இதையும் படியுங்கள்:
இரவு வானின் பிரகாசமான அதிசயம்: சிரியஸ் நட்சத்திரத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்!
மெகா எர்த் - Mega Earth exoplanet

இதன் சராசரி அடர்த்தி ஒரு கன அங்குலத்திற்கு 5.51 கிராம்.

இது தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம் 23 மணி 56 நிமிடம் 4 விநாடிகள்.

இது சாய்ந்திருக்கும் டிகிரி 23.44

பூமி தன்னைச் சுற்றி லேசான ஒரு வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது.இதில் 78 சதவிகித நைட்ரஜனும் 21 சதவிகித ஆக்ஸிஜனும் உள்ளது.

மிக மிக முக்கியமான விஷயம் என்னவெனில் பூமியில் மனிதன் உயிர் வாழத்தேவையான நீர் உள்ளது.

சூரியனிடமிருந்து மிகச் சரியான தூரத்தில் இது அமைந்துள்ளதால் இது மனிதன் உயிர் வாழத் தேவையான சூழ்நிலையைத் தருகிறது.

இப்படி இன்னும் ஏராளமான அரிய குணாதிசயங்களை பூமி கொண்டுள்ளதாலேயே மனிதனுக்காக ஏற்பட்ட அபூர்வ கிரகம் இது என்பது நிச்சயமாகிறது.

இதேபோல இன்னொரு பூமி இருந்தால், அது ஒரு அரிய விஷயம்தானே!

இதையும் படியுங்கள்:
விண்வெளிக்கு போன முதல் மீன்... நாசாவின் இந்த சீக்ரெட் சோதனை உங்களுக்கு தெரியுமா!
மெகா எர்த் - Mega Earth exoplanet

இந்த கட்டுரையைப் படிப்பதன் மூலம், விண்வெளியில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 'GJ523b' என்ற மெகா எர்த் கிரகத்தின் தனித்துவமான இயற்பியல் பண்புகள், அது எவ்வாறு உருவாகியிருக்கக் கூடும் என்ற விஞ்ஞானிகளின் கணிப்புகள் மற்றும் நமது பூமிக்கும் இதற்கும் உள்ள வித்தியாசங்களை நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்வீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com