

நான் சின்ன வயசுல இருந்தே வீட்டு மொட்டை மாடியில இருந்தோ, இல்ல நைட் டைம்ல ஹைவேஸ்ல டிராவல் பண்ணும்போதோ மொபைல் டவர் மேல இருக்குற இந்த ரெட் கலர் லைட்டை அப்பப்போ பாப்பேன். ஆனா, அது எதுக்குன்னு பெருசா என்னைக்கும் ஆழமா யோசிச்சது இல்லை; சும்மா ஏதோ டவர் இருக்குற அடையாளத்துக்காகவோ, இல்ல அழகுக்காகவோ வச்சிருக்காங்கனு தான் நினைச்சேன்.
ஆனா, தேடிப் பார்த்தப்போதான் தெரிஞ்சது இது நம்ம தலைக்கு மேல இயங்குற ஒரு பெரிய ஏவியேஷன் சேஃப்டி சிஸ்டம்னு (Aviation safety) எனக்கு புரிஞ்சுது. இந்த லைட் என்னமோ ரோட்டல நடக்கிற நமக்காக இல்லைங்க, வானத்துல பறக்குற பிளைட்ஸ், ஹெலிகாப்டர்களோட பாதுகாப்புக்காக வச்சிருக்காங்க. இருட்டு, பனிமூட்டம், மழை நேரங்கள்ல இந்த ஹெயிட்டானா டவர்கள் ‘பிளைட் ஓட்ற பைலட்டுகளுக்கு’ பெரிய ஆபத்தா முடியலாம்.
அதனாலதான் உலகத்துல இருக்குற எல்லா இடத்துலயும் இருக்குற ஏவியேஷன் அத்தாரிட்டிஸ் (Aviation authorities) எல்லாரும் உயரமான பில்டிங் மற்றும் டவர்கள்ல இந்த மாதிரி ‘வார்னிங் லைட்ஸ்’ வைக்கிறத கட்டாயமாக்கியிருக்காங்க.
மத்த கலர விட ஏன் ரெட் கலர மட்டும் சூஸ் பண்றாங்க?: ஏன்னா, ‘ரெட் கலர்’ லைட் இருட்டுல ரொம்ப தூரத்துக்கு தெளிவா தெரியும். அதேசமயம் பைலட்டுகளோட கண்ணை ரொம்ப கூச வைக்காது. நைட்ல மத்த ஏரியா லைட்ஸ்ல இருந்து இது தனித்துவமா பளிச்சுனு தெரியும்.
அமெரிக்காவோட Federal Aviation Administration (FAA) கைடுலைன்ஸ்படி, இந்த டவர் லைட் செட்டப்ல ‘ரெட் கலர்’ லைட்ஸ் ரொம்ப முக்கியமா இருக்கு. இதுல பல பேருக்கு தெரியாத ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, இந்த லைட்டை டவரோட டாப்ல மட்டும் வைக்க மாட்டாங்க. ரொம்ப உயரமான டவர்கள்ல ‘வெவ்வேறு உயரத்துல’ இந்த லைட்ஸை செட் பண்ணுவாங்க. அப்போதான் தூரத்துல இருந்து பார்க்கும்போது அந்த டவரோட ஒரிஜினல் ஹைட்டும், ஷேப்பும் பைலட்டுக்கு கரெக்டா புரியும். நைட்ல ரெட் கலர் யூஸ் பண்ணினாலும், பகல் நேரங்கள்ல சில
டவர்கள்ல ‘கேமரா பிளாஷ் மாதிரி விட்டு விட்டு எரியுற’ நல்லா பளிச்சுனு இருக்குற ‘ஒயிட் கலர்’ ஸ்ட்ரோப் லைட்ஸும் (Strobe Lights) யூஸ் பண்ணுவாங்க . இதுக்கு பேரு டூயல் (Dual) லைட்டிங் சிஸ்டம்னு சொல்லுவாங்க.
அதேபோல கமர்ஷியல் பிளைட்ஸ் ரொம்ப உயரத்துல பறந்தாலும், ஹெலிகாப்டர்கள், அப்புறம் இந்த விவசாயத்துக்கு மருந்து தெளிக்கிற குட்டி பிளைட்ஸ் மற்றும் ‘வெள்ள நிவாரணம் கொடுக்குற (Rescue) பிளைட்ஸ்’ எல்லாமே ரொம்ப கம்மியான ஹைட்டுல தான் பறக்கும்.
அவங்களுக்கு இந்த லைட்ஸ் ரொம்பவே ஹெல்ப்பா இருக்கும். ஏவியேஷன் ரூல்ஸ்படி 200 அடிக்கு கம்மியா இருக்குற பில்டிங் கூட பிளைட் ரூட்டுக்கு ஆபத்தா இருந்தா, அங்கயும் இந்த லைட் வைக்கச் சொல்லுவாங்க. இப்ப வர்ற மாடர்ன் டவர்கள்ல நம்ம கண்ணுக்குத் தெரியாத இன்ஃப்ராரெட் (Infrared) லைட்ஸ் கூட இருக்குமாம்.
பைலட்டுகள் அவங்களோட நைட்-விஷன் கண்ணாடி வழியா இத ஈஸியா கண்டுபிடிச்சிடுவாங்க. சுருக்கமா சொன்னா, அந்த ரெட் லைட்ஸ் சும்மா அழகுக்காக இல்லைங்க, அது வானத்துல நடக்குற இல்ல நடக்கக்கூடிய ஆக்சிடென்ட்ஸா தடுத்து பைலட்டுகளுக்கு ரூட் காட்டுற ஒரு சூப்பர் சேஃப்டி சிஸ்டம்.
இனிமேல் நைட்ல இந்த லைட்டை பார்த்தா இந்த விஷயம் உங்களுக்கு ஞாபகம் வரும். உங்களுக்கு இந்த விஷயம் எல்லாம் கேக்குறதுக்கு புதுசா இருந்தா உங்க பிரண்ட்ஸ் குரூப்புக்கும் இந்த மேட்டர மறக்காம ஷேர் பண்ணிடுங்க.
(Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான அறிவியல் மற்றும் விமானப் போக்குவரத்து தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ ஏவியேஷன் வழிகாட்டிகளைப் பார்ப்பது நல்லது.)