50MP கேமராவுடன் இந்தியாவிற்கு வந்த Motorola Razr Fold... நம்ப முடியாத தள்ளுபடி விலையைப் பாருங்க!

இந்திய சந்தையில் பிளிப்கார்ட் சலுகையுடன் அதிரடியாக விற்பனையைத் தொடங்கியுள்ள புதிய மோட்டோரோலா ரேசர் ஃபோல்ட் மற்றும் மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் மாடல்களின் முழுமையான விவரங்கள்.
Motorola Razr Fold
Motorola Razr Fold
Updated on

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது ஃபோல்டபிள் (Foldable) போன்களின் மோகம் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இந்த ட்ரெண்டில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில், Motorola நிறுவனம் தனது புதிய பிரீமியம் மாடல்களான மோட்டோரோலா ரேசர் ஃபோல்ட் (Motorola Razr Fold) மற்றும் அதனுடன் சேர்த்து மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் (Moto Buds 2 Plus) ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. 

இந்த சாதனம் மொபைல் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிநவீன வடிவமைப்பு, சக்திவாய்ந்த பிராசஸர் என பல ஆச்சரியமூட்டும் அம்சங்களுடன் களமிறங்கியுள்ள இந்த புதிய கேட்ஜெட்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பிரம்மாண்டமான டிஸ்ப்ளே!

டிஸ்ப்ளே மற்றும் வடிவமைப்பைப் பொறுத்தவரை இந்த போன் பார்ப்பதற்கு வேற லெவலில் இருக்கிறது. இதில் 8.1 இன்ச் அளவிலான 2K எக்ஸ்ட்ரீம் அமோலெட் (2K Extreme AMOLED) மெயின் டிஸ்ப்ளே மற்றும் 6.6 இன்ச் அளவிலான வெளிப்புற டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 6200 நிட்ஸ் உச்சகட்ட பிரைட்னஸ் இருப்பதால், கொளுத்தும் கோடை வெயிலில் கூட உங்களின் போன் ஸ்கிரீன் மிகத் தெளிவாகத் தெரியும். 

மேலும், Pantone நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Blackened Blue மற்றும் Lily White ஆகிய கண்கவர் வண்ணங்களில் இது கிடைக்கிறது. திரையின் பாதுகாப்பிற்காக கொரில்லா Gorilla Glass Ceramic 3 வசதியும், தண்ணீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்க IP48 மற்றும் IP49 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நிம்மதியைத் தருகிறது.

செயல்திறன் & பிரத்யேக AI அம்சங்கள்!

இந்த மாபெரும் ஸ்மார்ட்போனில் லேட்டஸ்ட் Snapdragon 8 Gen 5 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. இது லேட்டஸ்ட் Android 16 இயங்குதளத்தின் அடிப்படையில் Hello UI உடன் இயங்குகிறது. இதில் Catch Me Up 2.0, Pay Attention மற்றும் Global Search போன்ற பல பிரத்யேக AI தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
மணிக்கு 82 கி.மீ வேகம்... அதிவேக சார்ஜிங்... புதிய பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி கொடுத்த ‘TVS iQube S’!
Motorola Razr Fold

புகைப்படப் பிரியர்களுக்கான ஸ்பெஷல் கேமரா!

புகைப்படப் பிரியர்களுக்காகவே சோனி லிடியா (Sony LYTIA) சென்சார்களுடன் கூடிய 50MP ட்ரிபிள் கேமரா செட்டப் இதில் உள்ளது. இந்த கேமரா அமைப்பு உலகப் புகழ்பெற்ற DXOMARK Gold Label தரவரிசையைப் பெற்றுள்ளது இதன் தரத்திற்கு ஒரு சிறந்த சான்றாகும். மேலும் 6000mAh திறன் கொண்ட ஒரு பெரிய பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் இருப்பதால் சார்ஜ் தீர்ந்துவிடும் என்ற கவலையே உங்களுக்கு வேண்டாம்.

மோட்டோ பட்ஸ் 2 பிளஸ்!

இதனுடன் வெளிவந்துள்ள மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் (Moto Buds 2 Plus) இயர்பட்ஸ் நிச்சயம் இசைப் பிரியர்களைக் கவரும். இதில் 11 மிமீ டைனமிக் டிரைவர்கள் மற்றும் ANC வசதி உள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் நாற்பது மணி நேரம் வரை தொடர்ச்சியாகப் பாடல்களைக் கேட்டு மகிழலாம். வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பும் இதில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
வெறும் ரூ.9,499 விலையில் 6000mAh பேட்டரி மற்றும் 5ஜி வசதி.. HMD போனின் மெகா ஆஃபர்!
Motorola Razr Fold

விலை மற்றும் பிளிப்கார்ட் ஆஃபர்கள்!

மோட்டோரோலா ரேசர் ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மாடல் அசல் விலை ரூபாய் 1,49,999 ஆக இருந்தாலும், வங்கித் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் மூலம் இதை ரூபாய் 99,999 என்ற விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்கிக்கொள்ளலாம். 16 ஜிபி ரேம் மாடலை ஆஃபர் போக ரூபாய் 1,09,999 விலையிலும், FIFA Edition ரூபாய் 1,19,999 விலையிலும் வாங்கலாம். மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் இயர்பட்ஸை ரூபாய் 1,000 சிறப்பு தள்ளுபடியுடன் வெறும் ரூபாய் 4,999க்கு வாங்க முடியும்.

ஒரு பிரீமியம் ஃபோல்டபிள் போனை வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு இருப்பவர்களுக்கு இந்த புதிய மோட்டோரோலா மாடல் மிகச்சிறந்த ஒன்றாகும்.

logo
Kalki Online
kalkionline.com