

பழங்காலத்தில் உணவுப் பொருட்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க மக்கள், பனிக்கட்டிகள் அல்லது இயற்கையான குளிர்ந்த இடங்களைப் பயன்படுத்தினர். வணிகரீதியான இதன் மாதிரிகள் 1870-களில் அறிமுகப்படுத்தப்பட்டு, 1940-களில் நவீன வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகள் பொதுவானவையாக மாறின.
ஜேக்கப் பெர்கின்ஸ் என்பவர் 1834-ல் முதல் வேலை செய்யும் ஆவி அழுத்தம் கொண்ட குளிர்விக்கும் அமைப்பை உருவாக்கினார். ஜான் கோரி என்பவர் 1844-ல் முதல் நடைமுறைக்கு உகந்த குளிர்சாதனப் பெட்டியைக் (refrigerator history) கண்டுபிடித்தார். ஆரம்பகால குளிர்சாதனப் பெட்டிகள் பெரியதாகவும் விலை உயர்ந்ததாகவும் இருந்ததால், அவை வணிக இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
எஸ். லீப்மேனின் சன்ஸ் நிறுவனம் 1870-ல் ஒரு மதுபான ஆலையில் முதல் வணிக ரீதியான குளிர்சாதனப் பெட்டியை நிறுவியது. கெல்வினேட்டர் என்னும் நிறுவனம் 1918-ல் தானியங்கி கட்டுப்பாடுகளுடன் கூடிய முதல் குளிர்சாதனப் பெட்டியை அறிமுகப்படுத்தியது. ஃபிரிட்ஜிடேர் 1923-ல் முதல் ஒருங்கிணைந்த குளிர்விக்கும் அலகை அறிமுகப்படுத்தியது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளின் வெகுஜன உற்பத்தி தொடங்கியது. மேலும் ஃப்ரீஸர்கள் பொதுவானவையாக மாறின. ஆரம்பகால குளிர்சாதன பெட்டிகள் பெரியதாகவும் விலை உயர்ந்ததாகவும் இருந்ததால், அவை ஆரம்பத்தில் வணிக இடங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டன.
குளிர்சாதனப் பெட்டி (Refrigerator) நமக்கு உணவுப்பொருள்கள், மருந்துகள் ஆகியவற்றை குளிர்வித்து பாதுகாக்க உதவுகின்றது. இது மின்சாரத்தால் இயங்கும் ஒரு வீட்டு உபயோக சாதனமாகும். இது உள்ளே இருக்கும் வெப்பத்தை வெளியேற்றி, வெப்பம் உள்ளே செல்லாதவாறு வெப்பம் கடத்தாப் பெட்டியாகச் செயல்படுகிறது.
குளிர்சாதனப் பெட்டிகளில் வெவ்வேறு வகைகள் உள்ளன, அவை தானியங்கி டீஃப்ராஸ்டிங், குளிர்ந்த நீர், பனிக்கட்டி டிஸ்பென்சர்கள் போன்ற பல நவீன அம்சங்களைக் கொண்டுள்ளன. குளிர்சாதனப் பெட்டி ஒரு வெப்பம் கடத்தாப் பெட்டியாகும். இதன் குளிரூட்டும் அமைப்பு வெப்பத்தை வெளியேற்றி பொருட்களைக் குளிர்விக்கிறது.
நாம் நம் வீட்டு குளிர்சாதனப் பெட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும். இதன் வெப்பம் வெளியேறுவதைத் தடுக்க குளிர்சாதனப் பெட்டியின் வெளிப்புறத்தை பிளாஸ்டிக் அல்லது துணியால் மூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டிகளின் ஓரங்கள் சூடாக உணரப்படுவது இயல்பான ஒன்று ஆகும். அதனால், இதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. இது இதன் குளிரூட்டும் செயல்முறையால்தான் வெப்பத்தை வெளியேற்றுவதால் ஏற்படுகிறது. இன்றைய குளிர்சாதனப் பெட்டிகளில் தானியங்கி டீஃப்ராஸ்டிங், குளிர்ந்த நீர் மற்றும் பனிக்கட்டி டிஸ்பென்சர்கள் போன்ற பல நவீன அம்சங்கள் உள்ளன.
குளிர்சாதனப் பெட்டியின் மேல் உள்ள காந்தங்கள் பொதுவாக அலமாரியின் கதவு மற்றும் ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் விளம்பரச் செய்திகளைப் பிடித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பலவிதமான காந்தங்கள் உள்ளன. அவை பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. குளிர்சாதனப் பெட்டி காந்தங்கள், காந்த ஸ்டிக்கர்கள், தனிப்பயன் காந்த உறைகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளுடன் இணைக்கப்பட்டுள்ள காந்தங்கள் போன்றவை பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.
தற்காலங்களில் காந்த ஸ்டிக்கர்கள், புகைப்படங்கள், பட்டியல்கள், குறிப்புகள் போன்றவை குளிர்சாதனப் பெட்டியின் மேற்பரப்பில் ஒட்டப்படுகின்றன. உதாரணமாக, அலங்கார காந்த உறைகள் குளிர்சாதனப் பெட்டியுடன் இணைக்கப்பட்டுள்ள காந்தங்கள் குளிர்சாதனப் பெட்டி தயாரிப்பாளர்கள் அதன் மேலே பலவிதமான காந்தங்களை இணைக்கலாம். அதன் குளிரூட்டும் அமைப்பில் குறுக்கிட்டு, அதிக மின்சாரத்தை நுகரச் செய்கிறது என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் உலா வருகின்றன.
ஃபிரிட்ஜின் கதவு சரியாக மூடப்படாமல் போவதற்கும், அதன் செயல்திறன் குறைவதற்கும் இந்தக் காந்தங்களே காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தக் கூற்றுகளில் உண்மையில்லை என்று நிபுணர்கள் திட்டவட்டமாக கூறுகின்றனர்.
ஃபிரிட்ஜ் மேக்னட்கள் சராசரியாக 5 மில்லிடெஸ்லா (millitesla) காந்தப்புலத்தை மட்டுமே கொண்டுள்ளன. ஆனால், ஒரு மின்னணு சாதனத்தைப் பாதிக்க குறைந்தது 1,000 மில்லிடெஸ்லா வலிமை தேவைப்படும் நிலையில் இவை ஃபிரிட்ஜின் மின்சார பாகங்களையோ அல்லது அதன் செயல்திறனையோ பாதிக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது அல்ல என்று கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தின் ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் ஃபிரிட்ஜின் குளிரூட்டும் அமைப்பு என்பது கம்ப்ரசர் மற்றும் குளிர்பதன வாயு மூலம் செயல்படுகிறது. இதற்கும் ஃபிரிட்ஜின் வெளிப்புறத்தில் ஒட்டப்படும் காந்தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் இந்தக் காந்தங்களால் ஃபிரிட்ஜின் மோட்டார் அல்லது அதன் செயல்திறனில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
நம் வீட்டுக் குளிர்சாதனப் பெட்டியின் செயல்திறன் அதன் தயாரிப்பாளரின் வழிகாட்டுதலின்படி பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது நீண்டகாலம் நல்லமுறையில் இயங்கும்.