கறுப்பு மருதாணி கோன் ஆபத்தா? இயற்கை மருதாணியின் நன்மைகள்!!

இயற்கையான மருதாணியின் அழகு மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான அறிவியல் காரணங்கள்.
மருதாணி அறிவியல் - Henna Science
மருதாணி அறிவியல் - Henna Science
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

நம் அனைவருக்குமே மருதாணி வைத்துக்கொள்ள மிகவும் பிடிக்கும். மருதாணி கைகளுக்கு அழகு தருவது மட்டுமல்ல; இயற்கையான அழகு பராமரிப்பிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆனால் இன்றைய பரபரப்பான உலகில் அதை வைத்துக்கொள்ள நேரம் இல்லாததால் கெமிக்கல் நிறைந்த மருதாணி கோன்களை உபயோகப்படுத்துகிறோம்.

ஆனால் அதைவிட இயற்கையாகக் கிடைக்கும் மருதாணி இலைகளை அரைத்து வைத்துக்கொள்வது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்தியா போன்ற வெப்பமான, வறண்ட கால நிலைகளில் செழித்து வளரும் மருதாணிச் செடிகள்.

எனவே அழகுடன் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொண்டு இயற்கையான மருதாணியை மட்டும் தேர்வு செய்வதே சிறப்பு. குறிப்பாக 'கறுப்பு மருதாணி' எனப்படும் சில பொருட்களில் சருமத்திற்கு ஒவ்வாமையை (அலர்ஜியை) ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் இருக்கலாம் என்பதால் (மருதாணி அறிவியல்) இயற்கையான மருதாணி இலைகளை பயன்படுத்துவதே சிறந்தது.

மருதாணி இலைகளில் இருக்கும் 'லாசோன்' என்ற வேதிப்பொருள்தான் சருமத்தில் படிந்து சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது.

மருதாணி இலையில் இயற்கையாகவே உள்ள இந்த லாசோன் மருதாணியை நைசாக அரைத்து எடுக்கும் போதுதான் வெளிப்படும். ஆப்பிரிக்கா, ஆசியாவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே மருதாணி வைக்கும் பழக்கம் தோன்றியது.

மருதாணி இலைகளில் உள்ள லாசோன் (Lawsone) என்ற இயற்கை நிறமி வேதிப்பொருள் மற்றும் தோலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றம்தான் கைகளில் மருதாணி வைத்ததும் நிறம் மாறுவதற்குக் காரணமாகும்.

மருதாணி அறிவியல் - Henna Science
மருதாணி அறிவியல் - Henna Science

இதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்கள்:

கெரட்டினுடன் பிணைப்பு:

மருதாணி இலைகளில் இயற்கையாகவே லாசோன் (2-hydroxy-1,4-naphthoquinone) என்ற நிறமி மூலக்கூறு உள்ளது. லாசோன் மூலக்கூறுகள் மருதாணி இலைகளை அரைக்கும் பொழுது அவற்றில் உள்ள லாசோன் என்ற நிறமி மூலக்கூறுகள் வெளிவருகின்றன. இந்த மூலக்கூறுகள் நமது சருமத்தின் மேல் அடுக்கில் (Epidermis) உள்ள கெரட்டின்(Keratin) என்ற புரதத்துடன் எளிதாக பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கின்றன.

ஆக்சிஜனேற்றம் (Oxidation):

மருதாணி வைத்து அது காய்ந்ததும் கையில் இருந்து எடுத்தவுடன் ஆரம்பத்தில் அது வெளிர் ஆரஞ்சு அல்லது இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். பின்னர் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து (ஆக்ஸிஜனேற்றம் அடைந்து) அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் படிப்படியாக அடர் சிவப்பு அல்லது பழுப்பு நிறமாக மாறுகிறது.

உள்ளங்கையில் மட்டும் ஏன் அதிக நிறம் பிடிக்கிறது தெரியுமா?

தோலின் தடிமன்:

நமது உடலின் மற்ற பகுதிகளை விட உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் தோல் அடுக்குகள் தடிமனாகவும், கெரட்டின் புரதம் அதிகமாகவும் குவிந்துள்ளன. இதனால் இப்பகுதிகளில் லாசோன் நிறமி அதிக அளவில் உறிஞ்சப்பட்டு, கையின் மற்ற பகுதிகளைவிட உள்ளங்கைகளில் மருதாணி மிகவும் கருகருவென பிடித்து மிக அடர்த்தியான நிறத்தைத் தருகிறது.

உடல் சூடு:

மருதாணி நிறமி உடலின் வெப்பத்தோடு வினைபுரியும் தன்மைகொண்டது. இயற்கையாகவே அதிக உடல் சூடு அல்லது பித்த உடம்பு உள்ளவர்களுக்கு மருதாணி மிக விரைவாகவும் அடர்த்தியாகவும் நிற மாற்றத்தைக் கொண்டு வரும். உடலின் வெப்பநிலையும், தோலின் தன்மையும்கூட இந்த நிறமாற்றத்தின் அடர்த்தியைத் தீர்மானிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
செம்பு பாத்திரத்தில் கறையா? விலையுயர்ந்த கிளீனர் தேவையில்லை... இதோ எளிய ஹேக்!
மருதாணி அறிவியல் - Henna Science

மனித உடம்பை நாடி வகையில் மூன்று வகையாக பிரிப்பார்கள்; வாதநாடி, பித்த நாடி, கபம் என்று. இதில் பித்த உடம்பு உள்ளவர்களுக்கு மருதாணி சிவப்பு நிறமாய் இல்லாமல் கருஞ்சிவப்பாய் இருக்கும். மருதாணியின் குணமே சருமத்தின் நிறத்தை அடர்த்தியாக்கி சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தை காப்பதாகும். பழங்கள் குறிப்பாக ஆப்பிளை வெட்டிய பின் கருக்க ஆரம்பிப்பதும் இதே ஆக்சிஜனேற்றத்தால்தான்.

சிலருக்கு மட்டும் மருதாணி நல்ல கரும் நிறத்தை கொடுப்பதற்கான காரணம் அவர்களின் உடல் வெப்பநிலை, சருமத்தின் தடிமன், நீரேற்றம், ஹார்மோன் அளவுகள் மற்றும் ஒவ்வொருவரின் தோல் வேதியியல் ஆகியவற்றைப் பொறுத்து கைகளில் மருதாணியின் நிறம் மாறுபடும்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் சிறுதானியங்கள்: அறிவியலும் உண்மையும்!
மருதாணி அறிவியல் - Henna Science
logo
Kalki Online
kalkionline.com