உடலை எரிக்க வேண்டாம், கரைத்துவிடலாம்! உலகையே வியக்க வைக்கும் 'நீர் தகனம்' (Aquamation)!

scotland-legalizes
scotland-legalizesImage credit: bbc.com
Updated on

ண்மையில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஸ்காட்லாந்து அரசு, பாரம்பரிய தகனம் மற்றும் அடக்கம் செய்யும் முறைக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் தகனம் (Hydrolysis) முறையை சட்டப்பூர்வமாக அனுமதித்துள்ளது. இதன் மூலம், பிரிட்டனில்  தண்ணீரில் தகனம் செய்ய அனுமதித்த முதல் நாடாக ஸ்காட்லாந்து மாறியுள்ளது.  2023-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 84 சதவீத மக்கள் நீர் தகனத்தை ஆதரித்தனர். இதனால் அரசு சட்டத்தை நிறைவேற்றியது.

இந்தச் செயல்முறையில், உடல்கள், பட்டு அல்லது கம்பளி போன்ற மக்கும் தன்மையுள்ள துணியால் போர்த்தப்பட்டு, உடலின் எடையை அளந்து, சிறப்பு இயந்திரத்தில் வைக்கப்படுகிறது. பின்னர் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு மற்றும் நீர் கலவையில் 90 நிமிடங்கள் வரை 150°C (300°F) வெப்பநிலைக்குச் சூடுபடுத்தப் படுகிறது.

இதனால் உடலின் மென்மையான திசுக்கள் கரைந்து, எலும்புகள் மட்டும் மீதமாகின்றன. அவை 120 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் சுத்தம் செய்யப்பட்டு, உலர்த்தப்பட்டு, கிரெமுலேட்டர் (Cremulator) எனும் இயந்திரத்தில் சாம்பலாக மாற்றப்படுகின்றன. தூளாக்கப்பட்ட எச்சங்கள் ஒரு கலசத்தில் உறவினர்களிடம் திருப்பி அளிக்கப்படுகின்றன.

நீர் தகனம் அமெரிக்காவின் 28 மாநிலங்களில், கனடா, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ஒருவேளை நிலா(சந்திரன்) மறைந்துவிட்டால் பூமி என்னாகும்? என்னன்ன ஆபத்துகள் வரும்?
scotland-legalizes

நீர்த்தகனம் (Aquamation), அல்கலைன் ஹைட்ரோலிசிஸ் (Alkaline Hydrolysis) என்றும் அழைக்கப்படுகிறது. இது உடலை எரியூட்டுவதற்குப் பதிலாக வெப்ப நீர் மற்றும் காரக்கரைசலைப் பயன்படுத்தி இயற்கையான சிதைவை வேகப்படுத்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த  பாதுகாப்பு முறை.இதனை அமோஸ் ஹெர்பர்ட் ஹாப்சன் (Amos Herbert Hobson) எனும் பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர்  1888-ல் உருவாக்கினார். இவர் விலங்குகளின் உடல்களை உரமாக மாற்ற இந்த முறையை உருவாக்கினார்,  இந்த முறையை முதன்முதலில் கண்டுபிடித்து காப்புரிமையும் பெற்றார்.

1888-ல் விலங்குகளுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட இது, 1990-களில் மருத்துவ ஆராய்ச்சிக்கும்,போவைன் ஸ்பாஞ்சிஃபார்ம் என்செஃபலோபதி (பைத்தியம் பிடித்த மாட்டு நோய்) நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை அப்புறப்படுத்தும் ஒரு முறையாக இந்த செயல்முறை  முதன் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

2005-ல், ஜோசப் வில்சன் (Joseph Wilson) என்பவர் மனித உடல்களை நீர் தகனம் செய்யும் முதல் இயந்திரத்தை உருவாக்கினார். மயோ கிளினிக் போன்ற நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தத் தொடங்கின. 2005 முதல் மனிதர்களுக்குப் பரவலாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது பாரம்பரிய தகனத்தைவிட 90% குறைவான ஆற்றலைப் பயன்படுத்துகிறது.

இது தற்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த மனித உடலடக்கம் செய்யும் முறையாகப் பயன்படுத்தப் படுகிறது.

2010களில் அமெரிக்காவின் பல மாநிலங்களில் இந்த முறை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. டிசம்பர் 2021-ல் காலமான, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற  தென் ஆப்ரிக்காவின் டெஸ்மண்ட் டுட்டு இந்த முறையைத் தேர்ந்தெடுத்ததால், நீர் தகனம் உலகெங்கும் செய்திகளில் இடம்பெற்றது.

இதையும் படியுங்கள்:
பூமியை 1.5 அடி உயரத்துக்கு மூடும் அளவுக்கு தங்கம்... எங்கே இருக்குனு தெரிஞ்சா உடனே கிளம்பிடுவீங்க!
scotland-legalizes

ஒரு வழக்கமான தகனச் சடங்கானது, சுமார் 320 கிலோகிராம் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான கார்பனை வெளிவிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது - கார நீராற்பகுப்பு முறையானது ஏழு மடங்கு குறைவான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்திற்கு வழிவகுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே தற்போது இந்த செயல்முறை உலகெங்கிலும் உள்ள மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது, நெருப்பு தகன முறை 3 மணி நேரத்திற்குள் முடிந்துவிடும். ஆனால், நீர் தகன முறையில் 6 மணி நேரத்திற்கு மேலாகும் மற்றும் செலவுகளும் கொஞ்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com