லேப்டாப் கேமரா சரியில்லையா.. காசு செலவு இல்லாமல் மொபைலை வெப்கேமாக மாற்றுங்கள்!

லேப்டாப்பில் உள்ள குறைந்த தர கேமராவிற்கு பதிலாக உங்கள் கையில் உள்ள ஆண்ட்ராய்டு போனை விண்டோஸ் 11 கணினியின் பிரத்யேக வெப்கேமாக பயன்படுத்தும் எளிய வழிமுறைகள்.
Android phone as webcam
Android phone as webcam
Updated on

Android phone as webcam: ஆன்லைன் மீட்டிங் அல்லது வீடியோ கால்களில் பேசும்போது லேப்டாப்பில் உள்ள கேமராவின் தரம் மிகவும் மோசமாக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்கு தீர்வு காண பலரும் தனியாக ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஒரு வெப்கேம் (Webcam) வாங்குவார்கள். ஆனால் இப்போது அதற்கான அவசியமே இல்லை. உங்கள் கையில் இருக்கும் ஆண்ட்ராய்டு மொபைல் போனை மிக எளிதாக உங்கள் Windows 11 கணினியின் வெப்கேமாக மாற்றிவிடலாம். 

இதற்காக எந்த ஒரு ஆபத்தான செயலிகளையும் தரவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. Microsoft நிறுவனம் இதற்கான புதிய வசதியை அதிகாரப்பூர்வமாகவே வழங்கியுள்ளது. இதை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

மொபைலை வெப்கேமாக மாற்றுவதன் நன்மைகள்!

ஆண்ட்ராய்டு போனை வெப்கேமாக பயன்படுத்துவதால் பல அட்டகாசமான நன்மைகள் உள்ளன. பொதுவாக லேப்டாப் கேமராக்களை விட நமது மொபைல் போன் கேமராக்கள் பல மடங்கு அதிக ரெசல்யூஷன் மற்றும் துல்லியமான தரத்தை கொண்டவை. இதன் மூலம் நீங்கள் சிறந்த வீடியோ குவாலிட்டியை பெற முடியும். மேலும் தனியாக பணம் கொடுத்து வெப்கேம் வாங்க வேண்டிய செலவு முழுமையாக மிச்சமாகும். 

லேப்டாப் கேமராக்களை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் மொபைலை நீங்கள் வயர் இல்லாமல் கனெக்ட் செய்வதால் உங்களுக்கு ஏற்றவாறு எங்கு வேண்டுமானாலும் சுலபமாக வைத்துக்கொள்ளலாம். யூடியூபில் லைவ் ஸ்ட்ரீம் செய்பவர்களுக்கு இது ஒரு அருமையான செகண்டரி கேமராவாக பயன்படும்.

இதையும் படியுங்கள்:
உஷார்: தலையணைக்கு அடியில் மொபைல் போன் வைக்கிறீர்களா?
Android phone as webcam

தேவையான விஷயங்கள்!

இந்த வசதியை பயன்படுத்த உங்கள் சிஸ்டம் Windows 11 இயங்குதளத்திலும், உங்கள் மொபைல் குறைந்தது Android 1 அல்லது அதற்கு மேம்பட்ட இயங்குதளத்திலும் இருக்க வேண்டும். மேலும் மொபைலில் உள்ள Link to Windows செயலி 1.24022.0 என்ற அப்டேட்டட் வெர்ஷனில் இருப்பது மிகவும் அவசியம்.

எப்படி கனெக்ட் செய்வது

முதலில் உங்கள் போனில் லிங்க் டு விண்டோஸ் செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதேபோல கணினியில் Link to Phone ஆப்பை திறந்து அதில் Sign in செய்ய வேண்டும். இப்போது சிஸ்டம் திரையில் ஒரு QR Code தோன்றும். உங்கள் மொபைல் ஆப் மூலம் அந்த கோடை ஸ்கேன் செய்து இரண்டு டிவைஸ்களையும் வயர்லெஸ் முறையில் இணைத்துக்கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
யூ டியூபின் புதிய அப்டேட்: இனி வீடியோ பார்த்துக்கொண்டே மற்ற வேலைகளையும் செய்யலாம்!
Android phone as webcam

இணைப்பு சரியானதும் கணினியில் Settings சென்று, Bluetooth and Devices என்ற பகுதிக்கு செல்லுங்கள். அங்கு உங்களின் ஆண்ட்ராய்டு போன் பெயர் காண்பிக்கும், அதனை கிளிக் செய்யவும். அடுத்த திரையில் யூஸ் Use device as a camera என்பதை ஆன் செய்ய வேண்டும். இறுதியாக Manage cameras ஆப்ஷனில் உங்களின் மொபைல் பெயரை தேர்வு செய்தால் மொபைல் கேமரா லேப்டாப்பில் சூப்பராக ஒர்க் ஆக தொடங்கிவிடும்.

இந்த எளிய செட்டிங்ஸ் மூலம் உங்கள் லேப்டாப் வீடியோ கால் அனுபவத்தை முற்றிலும் புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்ல முடியும். தேவையற்ற கேபிள்கள் ஏதுமின்றி மொபைலை ஒரு வெப்கேமாக மாற்றுவது உண்மையிலேயே ஒரு சூப்பரான அப்டேட் ஆகும். நீங்கள் விண்டோஸ் 11 பயனராக இருந்தால் இந்த அருமையான வசதியை உடனே ட்ரை செய்து பாருங்கள். தனிப்பட்ட பயன்பாடு மற்றும் அலுவலக பணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

logo
Kalki Online
kalkionline.com