நாம் குடிக்கும் தண்ணீர் பாட்டில் மூடியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

ஒவ்வொரு நிற மூடியும் பாட்டிலில் உள்ள நீரின் தரத்தை எப்படி வெளிப்படுத்துகிறது?
தண்ணீர் பாட்டில் - water bottle guide
தண்ணீர் பாட்டில் - water bottle guide
எஸ்.மாரிமுத்து

எஸ்.மாரிமுத்து, தனது மனைவி எம்.வந்தாவுடன் இணைந்து கடந்த 15 ஆண்டுகளாகப் பல இதழ்களில் கதைகள், கட்டுரைகள், நகைச்சுவைத் துணுக்குகள், ஆன்மீகம், சமையல் சார்ந்த படைப்புகளை எழுதி வருகிறார். தற்போது இவர்களின் படைப்புகள் கல்கி ஆன்லைனிலும் வெளியாகின்றன. இருவரும் கல்கி குழுமத்தின் பல வருட வாசக எழுத்தாளர்கள்.

Updated on: 

தண்ணீர் பாட்டில்களில் மூடிகள் வெவ்வேறு நிறங்களில் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? இது வெறும் டிசைன் அல்லது அழகுக்காக மட்டுமல்ல அதன் பின்னால் மிகப்பெரிய அறிவியல் உள்ளது.

கடைகளில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களின் மூடிகள் வெள்ளை, பச்சை, கருப்பு, நீலம் என வெவ்வேறு நிறங்களில் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இது வெறும் டிசைனுக்காகவோ அல்லது அழகுக்காக செய்யப்படுவது கிடையாது.

இது அந்த பாட்டிலில் உள்ள தண்ணீரின் வகை அதன் சுத்திகரிப்பு முறை ஆகியவற்றை குறிக்கும். உலகளாவிய தரக்கட்டுப்பாடு அடையாளம் ஆகும். தண்ணீர் மூடிகளின் வகையை பொறுத்து, அது எந்த வகையான தண்ணீர் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

நீல நிறம்: கடைகளில் மிகவும் பரவலாக கிடைக்கும் தண்ணீர் பாட்டில்களின் மூடிகள் நீல நிறத்திலேயே இருக்கின்றன. இதன் உள்ளே இருப்பது சுத்திகரிக்கப்பட்ட குடிநீராகும்.

ஒரு நிலத்தடி நீரானது தலைகீழ் சவ்வூடு பரவல் மூலம் காய்ச்சி வடிக்கப்பட்டு புற ஊதாக்கதிர்கள் மூலம் அசுத்தங்கள் நீக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டதை குறிக்கிறது. இதில் மனித உடலுக்குத்தேவையான தாதுக்கள் செயற்கையாக சேர்க்கப்பட்டிருப்பதை அறியலாம்.

வெள்ளை நிறம்: வெள்ளை நிற மூடிகளைக் கொண்ட பாட்டில்கள் பொதுவாக காய்ச்சி வடித்த தண்ணீர் அல்லது குறிப்பிட்ட சுத்திகரிப்புக்கு உட்பட்ட நீரை குறிக்கிறது.

இதில் அசுத்தங்கள் மட்டுமின்றி இயற்கையான தாதுக்களும் முழுமையாக நீக்கப்பட்டு இருக்கும்.

இது குடிக்க பயன்படுவதைவிட ஆய்வகங்கள், மருத்துவமனைகள், வாகனங்களின் பேட்டரிகள், நீராவி அயர்ன்கள் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சில நிறுவனங்கள் சாதாரண குடிநீருக்கும் இந்த நிறமுடைய பயன்படுத்துவார்கள். சில நிறுவனங்கள் சாதாரண குடிநீருக்கும் இந்த நிற மூடிகளை பயன்படுத்துவது உண்டு.

பச்சை நிறம்: பச்சை நிறம் இயற்கையை குறிப்பது போன்றது ஆகும். இயற்கை மலை ஊற்றுகள், நிலத்தடி நீர் நிலைகள் பனிப்பாறைகளில் இருந்து உருகி வரும் நீர் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்படும் நீரின் பாட்டில் களுக்கு பச்சை நிற மூடிகள் பொருத்தப்படுகின்றன.

தண்ணீர் பாட்டில் - water bottle guide
தண்ணீர் பாட்டில் - water bottle guide

இந்த செயற்கையாக சுத்திகரிக்கப்படாமல் இயற்கையான முறையில் வடிகட்டப்பட்டு உடலுக்கு நன்மை பயக்கும் கால்சியம், மெக்னீசியம் ,போன்ற தாது உப்புக்களுடன் பாட்டிலில் அடைக்கப்படுகிறது.

கருப்பு நிறம்: இப்போது கருப்பு நிற பாட்டில்கள் பிரபலமாக உள்ளது. பொதுவாக ஆல்கலைன் நீருக்கு கருப்பு நிற மூடிகள் பயன்படுத்தப்படுகிறது.

இதில் தண்ணீரின் PH அளவு சாதாரணத்தை விட அதிகமாக இருக்கும். இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் அதிகப்படியான தாதுக்கள் நிறைந்துள்ளது .

விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் நீறேற்றத்திற்காக இந்த வகை குடிநீரை பயன்படுத்துகிறார்கள். இது சாதாரண பாட்டில்களை காட்டிலும் மிக விலை உயர்ந்ததாகும்.

சிவப்பு நிறம்: சிவப்பு நிற மூடிகள் கொண்ட பாட்டில்களில் அடைக்கப்படும் தண்ணீர் சோடா அல்லது கார்பனேற்றப்பட்ட தண்ணீரை குறிக்கிறது. இதில சாதாரண தண்ணீருக்குப் பதிலாக சற்று சுவையூட்டப்பட்ட அல்லது வாயு நிரப்பப்பட்ட தண்ணீரை குறிப்பதற்காக சிவப்பு நிற மூடிகள் பயன்படுத்தப் படுகின்றன.

இதையும் படியுங்கள்:
வறண்ட பாலைவனங்களிலும் சொற்ப நீரைக் கொண்டு உயிர்வாழும் ஸ்பிரிங்பாக் மான்!
தண்ணீர் பாட்டில் - water bottle guide

பெரும்பாலான சர்வதேச மற்றும் முன்னணி நிறுவனங்கள், இந்த வண்ண குறியீட்டு முறையை சரியாக பின்பற்றி வருகின்றன.

அனைத்து உள்ளூர் நிறுவனங்களும் இதை கட்டாயமாக பின்பற்றுவது இல்லை. சில நேரங்களில் பிராண்டின் வடிவமைப்புக்கு ஏற்றவாறு வெவ்வேறு வண்ணங்களை பயன்படுத்துகின்றன.

எனவே பாட்டிலில் உள்ள லேபிளின் விபரங்கள் படித்து பார்த்து வாங்குவது மிகவும் பாதுகாப்பானது.

ஏதோ ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி குடிப்பைதை விட அதன் தரத்தை பார்த்து வாங்கி குடிக்கவேண்டும். எந்த நிற மூடியுள்ள பாட்டில் தண்ணீர் வாங்கி குடிக்க வேண்டும் என்பதே தெரிந்துகொண்டு வாங்கி குடிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பகலில் தூங்கி இரவில் விழிக்கும் விசித்திர தாவரங்கள்!
தண்ணீர் பாட்டில் - water bottle guide
logo
Kalki Online
kalkionline.com