கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாகும். கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸுக்கு உறவினர்கள், நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து பரிமாறுவார்கள். இந்த கிறிஸ்துமஸில் உங்கள் விருந்தினர்களுக்கு சைவ அறுசுவையான உணவுகளை வழங்குங்கள். கிறிஸ்துமஸ் விருந்தில் என்ன உணவு பரிமாறலாம் என்று யோசிக்கிறீர்களா? வாங்க.. இந்த அற்புதமான கிறிஸ்துமஸ் உணவுகளைப் பற்றி பார்க்கலாம். கிறிஸ்துமஸ் மிஸ் ஆயிடுச்சா? no worries... நியூ இயர்க்கு செஞ்சு ஜமாய்க்கலாம்!
இந்த சிறிய சாண்டா சீஸ் கேக்குகள் கிறிஸ்துமஸ் தினத்திற்கான சிறந்த இனிப்பு ஆகும். வேகவைத்த சீஸ்கேக், சாக்லேட்-ஒய் பிஸ்கட் பேஸ் மற்றும் ஸ்ட்ராபெரியின் கலவையில் இது மிகவும் சுவையானதாக இருக்கும்.
ஹாட் சாக்லேட் ஷாட்கள், சாக்லேட்டின் சுவையை அனுபவிக்க உதவும் சிறிய, கிரீமி, மற்றும் சக்திவாய்ந்த பானங்கள். மது அல்லாத கிறிஸ்துமஸ் பானமாக, உருகிய சாக்லேட், பால் காபி மற்றும் சர்க்கரையுடன் செய்யப்பட்ட இந்த சாக்லேட் ஷாட்களை விருந்தினருக்குப் பரிமாறலாம்.
நீங்கள் எப்போதாவது இதை ருசித்திருந்தால், இனிப்பு சீஸ் பால் உங்களுக்கு பிடித்த கிறிஸ்துமஸ் விருந்து உணவு யோசனையாக மாறும். இது உங்கள் விருந்தினருக்கு நிச்சயம் பிடித்தமானதாக இருக்கும். இந்த இனிப்பு சீஸ் பால் செழுமையாகவும், கிரீமியாகவும், கடிக்கும் போது பஞ்சுபோல் மென்மையாகவும் இருக்கும்.
இந்த உணவு சைவ விருந்தினர்களுக்கு ஏற்றது. ஒவ்வொரு துண்டை நீங்கள் சுவைக்கும் போதும் உள்ளே உள்ள கிரீம் உங்கள் வாயில் உருகும். hasselback sweet potatoes சாப்பிட்டால் அதற்கு நீங்கள் அடிமையாகி விடுவீர்கள். உண்மையிலேயே இது எளிதாக செய்யக்கூடிய சுவையான டிஷ் ஆகும். இது உங்கள் விருந்தினர்களை பிரமிக்க வைக்கும்.
புருஷெட்டா ஸ்நாக்ஸ் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இதை செய்வது மிகவும் சுலபம். வறுக்கப்பட்ட, வெண்ணெய் ரொட்டியின் மேல் சரியான கலவையில் தக்காளி, துளசியை சேர்த்து பரிமாறப்படும் சிறந்த உணவாகும்.
இது மிகவும் பிரபலமான கிறிஸ்துமஸ் ரெசிபிகளில் ஒன்றாகும். கிறிஸ்துமஸ் ஈவ் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தில் மேஜையில் இந்த இனிப்பு கண்டிப்பாக இருக்கும். மின்ஸ் பை இல்லாமல் கிறிஸ்துமஸ் முழுமையடைந்ததாக உணரமுடியாது. இது உலர்ந்த பழங்கள், ஆப்பிள்கள் மற்றும் பிராந்தி ஆகிய கலவையால் செய்யப்படுகிறது.
இந்த நோ-பேக் ஸ்ட்ராபெரி சீஸ் கேக்குடன் கிறிஸ்துமஸ் மதிய உணவை இனிப்புடன் முடிக்கவும். அதன் அசாத்தியமான சுவை உங்களை மேலும் ஏங்க வைக்கும்.
பாஸ்தா, காய்கறிகள் கொண்டு செய்யப்படும் இந்த சாலட் கிறிஸ்துமல் விருந்திற்கு மிகவும் ஏற்ற உணவாகும். அனைவரும் விரும்பும் இந்த உணவை செய்வது மிகவும் எளிது.
கிறிஸ்துமஸ் விருந்திற்கு ஆரோக்கியமான உணவை தேர்வு செய்ய நினைத்தால் இது ஏற்றதாகும். குழந்தைகளுக்கு இந்த உணவு மிகவும் பிடிக்கும்.
இது கிறிஸ்துமஸ் விருந்து மற்றும் சிறந்த பார்ட்டி ஸ்டார்டர்களுக்கு ஏற்ற உணவாகும். பசியுள்ள இளைஞர்களின் வயிறை நிரப்பும் சிறந்த உணவாகவும் இது விளங்குகிறது.