ஓன் இந்தியாவின் நீண்டகாலப் பிரதமர்களில் ஒருவர் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பியாகக் கருதப்படுபவர் மன்மோகன் சிங். இவர் வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனது 92வது வயதில் 26ம்தேதி காலமானார்.
ரத்தன் நவால் டாட்டா (Ratan Naval Tata) இந்தியாவின் மிகப் பிரபல தொழிலதிபரும் டாட்டா சன்சின் முன்னாள் தலைவருமாவார். இவர் 1990 முதல் 2012 வரை டாட்டா குழுமத்தின் தலைவராகவும் இருந்தார். அக்டோபர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை அதன் இடைக்காலத் தலைவராகவும் பணியாற்றினார். ரத்தன் நேவல் டாடா தனது 86வது வயதில் அக்டோபர் 9-ம் தேதி காலமானார்.
தனது கம்பீரமான திறமைகளால் பொதுமக்களை கவர்ந்த புகழ்பெற்ற இந்திய தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் ஹுசைன், இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் காரணமாக, டிசம்பர் 15-ம்தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் காலமானார்.
அரசியல் வட்டாரத்தில் புகழ்பெற்ற 72 வயதான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி செப்டம்பர் 12ம்தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்கு பிறகு, அவரது விருப்பப்படி மருத்துவ ஆராய்ச்சிக்காக AIIMS க்கு தானம் செய்யப்பட்டது.
இந்திய பேஷன் துறையின் முன்னோடிகளில் ஒருவரான ரோஹித் பால் தனது 63வது வயதில் நவம்பர் 1-ம்தேதி மாரடைப்பால் காலமானார். 1986-ம்ஆண்டு முதல் ஆடை வடிவமைப்பு தொழிலில் சிறந்து விளங்கிய இவர் ஆடம்பர மற்றும் பணக்கார வடிவமைப்புகளுக்கு பெயர் பெற்றவர் மற்றும் பல முன்னணி பாலிவுட் பிரபலங்களை தனது வாடிக்கையாளர்களாக பெருமைப்படுத்தினார். எப்.டி.சி.ஐ., எனப்படும் இந்திய ஆடை வடிவமைப்பு கவுன்சில் அமைப்பையும் நிறுவினார்.
பழம்பெரும் கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் தனது 72வது வயதில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிப்ரவரி 26ம்தேதி காலமானார். கஜல் உலகின் முடிசூடா மன்னன் என போற்றப்படும் இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. பங்கஜ் உதாஸ் , 'சித்தி ஆயி ஹை' மற்றும் 'அவுர் அஹிஸ்தா கிஜியே' பாடின் மூலம் மிகவும் பிரபலமானவர்.
1970கள் மற்றும் 1980களில் இந்திய இணை சினிமா இயக்கத்தை முன்னெடுத்த ஷியாம் பெனகல், டிசம்பர் 23-ம்தேதி தனது 90வது வயதில் காலமானார். எல்லையற்ற படைப்பு ஆற்றலால் ஆசீர்வதிக்கப்பட்ட ஷ்யாம் பெனகல், தனது திரை வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் தன்னை ஒரு இயக்குனராக புதுப்பித்துக் கொண்டார். திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்ட ஷியாம் பெனகல் பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
சாத் பாடல்களுக்கு பெயர் பெற்ற பீகாரைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகி, ரத்த புற்றுநோயால் ஏற்பட்ட சிக்கல்களால் நவம்பர் 5-ம் ,தேதி காலமானார். பீகார் கோகிலா என்று ரசிகர்களில் செல்லமாக அழைக்கப்பட்ட இவருக்கு பத்ம பூஷன் விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.