
மக்கள்தொகை அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. இங்கு நிறைய பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை காணப்படுகிறது. மக்கள் பல்வேறு பண்டிகைகள், நிகழ்வுகள், முக்கியமான நாட்கள் போன்றவற்றைக் கொண்டாடுகின்றனர். ஆண்டின் நான்காவது மாதமான ஏப்ரல், குறிப்பிடத்தக்க நிகழ்வுகள், நினைவு நாட்கள் மற்றும் உலகளாவிய கொண்டாட்டங்களால் நிறைந்துள்ளது. தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஏப்ரல் மாதத்தில் வரும் அனைத்து முக்கியமான நாட்களை இங்கே பார்க்கலாம்.
ஏப்ரல் 2025-ன் முக்கிய நாட்களை சுருக்கமாகக் கூறும் அட்டவணை இங்கே :
ஏப்ரல் 1 : முட்டாள்கள் தினம், ஒடிசா தினம், பார்வையின்மை தடுப்பு வாரம்
ஏப்ரல் 2 : உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம், சர்வதேச குழந்தைகளின் புத்தக தினம்
ஏப்ரல் 3 : உலக விருந்தினர் தினம்,
ஏப்ரல் 4: சுரங்க விழிப்புணர்வு தினம், சர்வதேச கேரட் தினம்
ஏப்ரல் 5 : தேசிய கடல்சார் தினம், சர்வதேச மனசாட்சி தினம்
ஏப்ரல் 6 : சர்வதேச விளையாட்டு தினம்
ஏப்ரல் 7 : உலக சுகாதார தினம்
ஏப்ரல் 8 : சர்வதேச ரோமானியர்கள் தினம்
ஏப்ரல் 9 : சர்வதேச தலையாணை சண்டை தினம்,
ஏப்ரல் 10 : உலக ஹோமியோபதி தினம், உடன்பிறந்தோர் தினம், அதாவது ‘சகோதரர்கள் தினம்’ (Siblings Day)
ஏப்ரல் 11 : தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் (National Safe Motherhood Day), உலக பார்கின்சன் தினம், தேசிய செல்லப்பிராணி தினம்
ஏப்ரல் 12 : சர்வதேச மனித விண்வெளி பயண தினம்
ஏப்ரல் 13 : ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம், பைசாகி தினம்
ஏப்ரல் 14 : தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் நினைவு தினம்
ஏப்ரல் 15 : உலக படைப்பாற்றம் மற்றும் புத்தாக்க தினம், உலக கலை நாள், பெங்காலி புத்தாண்டு
ஏப்ரல் 16 : உலக குரல் நாள்
ஏப்ரல் 17 : சர்வதேச ஹைக்கூ கவிதை நாள், உலக இரத்தப்போக்கு நோய் தினம் அல்லது உலக ஹீமோபிலியா தினம் (world hemophilia day)
ஏப்ரல் 18 : உலக பாரம்பரிய தினம், உலக அமெச்சூர் வானொளி தினம்
ஏப்ரல் 19 : உலக கல்லீரல் தினம்
ஏப்ரல் 21 : தேசிய குடிமைப் பணிகள் தினம், உலக மீன்கள் இடப்பெயர்வு தினம்
ஏப்ரல் 22 : உலக பூமி தினம்
ஏப்ரல் 23 : உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாள் அல்லது உலக புத்தக தினம், உலக ஆங்கில மொழி நாள், அனுமன் ஜெயந்தி
ஏப்ரல் 24 : தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம், சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள், ஆய்வகங்களில் உள்ள விலங்குகளுக்கான உலக தினம்
ஏப்ரல் 25 : உலக மலேரியா தினம், உலக எழுதுபொருட்கள் தினம், உலக பென்குயின் தினம்
ஏப்ரல் 26 : உலக அறிவுசார் சொத்து தினம், சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு தினம்
ஏப்ரல் 27 : உலக தபீர் தினம், உலக வடிவமைப்பு தினம்
ஏப்ரல் 28 : பணியாற்றும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உலக தினம், உலக கால்நடை தினம்
ஏப்ரல் 29 : சர்வதேச நடன தினம், ரசாயன போர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம், சர்வதேச வானியல் தினம், சர்வதேச சிற்ப தினம்
ஏப்ரல் 30 : சர்வதேச ஜாஸ்(இசை) தினம், உலக கால்நடை மருத்துவர் தினம், ஆயுஷ்மான் பாரத் திவாஸ்
- இவை ஏப்ரல் (2025) மாதத்தில் வரும் தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் ஆகும், இது பல தேர்வுகளுக்குத் தயாராகவும் உங்கள் அறிவை மேம்படுத்தவும் உதவும்.