சமுதாயத்தின் ஆதாயங்கள் மற்றும் சுமைளை பகிர்ந்து கொள்வோம்!

பிப்ரவரி 20: உலக சமூக நீதி நாள்!
World Day of Social Justice
World Day of Social Justice
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

உலகம் முழுவதும் 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20 ஆம் நாளன்று, ‘உலக சமூக நீதி நாள்’ (World Day of Social Justice) கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக, வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது.

சமூக நீதி (Social Justice) என்ற கருத்தாக்கமானது தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள சமமான நியாயமான உறவைக் குறிக்கிறது. சமூக வேறுபாடுகளை பொதுவாக, பொருளாதாரப் பரவல், தனிப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சமூக செல்வாக்கின் மூலம் கணிக்கலாம். மேற்கத்திய நாடுகள் மற்றும் பழமையான ஆசிய நாடுகளில் சமூக நீதி என்ற கருத்தாக்கமானது தனி நபர்களின் சமூக செயல்பாடுகளுக்குத் தேவையானவற்றைப் பூர்த்தி செய்து, பாகுபாடற்ற நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்துவதாகும். தற்காலத்தில் உலகளாவிய பல சமூக அமைப்புகள் சமூகப் பெயர்ச்சிக்கான தடைகளை உடைத்து, சமூகப் பாதுகாப்பை உண்டாக்கி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கலைக்கிறது./

சமூக நீதி மூலம் ஒரு சமூகத்தில் உள்ள அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களின் உரிமையையும் கடமையையும் உறுதி செய்து, சமுதாயத்தின் ஆதாயங்கள் மற்றும் சுமைகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. வரி, சமூகக் காப்பீடு, பொது உடல்நலவியல், பொதுக்கல்வி, பொதுப்பணி, தொழிலாளர் சட்டம், சந்தை ஒழுங்காணையம் போன்ற நிறுவனங்களில் வளங்களையும், வாய்ப்புகளையும் பகிர்ந்து கொள்ளமுடிகிறது.

இந்தியாவில், சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் பட்டியல் பழங்குடி அமைச்சகம் போன்ற அமைச்சகங்கள் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் உட்படச் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு சமூகநீதியையும் நலத்திட்டங்களையும் செயல்படுத்துகிறது. சாதி, மொழி, மதம், பால், வசிப்பிடம், பொருளாதார சூழல், உடல் ஊனம் போன்ற முறைகளில் வேலைவாய்ப்பு மற்றும் கல்விவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, கல்விக்கு உதவித் தொகை போன்ற பல திட்டங்கள் செயற்பாட்டில் உள்ளன.

இதையும் படியுங்கள்:
தனி மனித உரிமை காக்கும் 'ஹேபியஸ் கார்பஸ் மனு', 'கேவியட் மனு'...
World Day of Social Justice

உலக சமூக நீதி நாளின் முக்கியத்துவம் என்பது, அனைத்து தேசிய மற்றும் பன்னாட்டு கொள்கைகளில் சமூக நீதியை மேம்படுத்துவதை முதன்மைக் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதே. இந்தக் கோட்பாட்டின் ஆதரவாளர்கள், சமூக நீதியை முதன்மைப்படுத்தி, பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்கள் மிகவும் இணைந்து செயல்பட உதவுகிறது என்று வாதிடுவதன் மூலம் ஆதரவைப் பெற்றுள்ளனர். சமூக நீதியை மையத்தில் வைப்பதற்கு, கண்ணியமான வேலை மற்றும் வேலை வாய்ப்புகள், சமூக பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நியாயமான உலகமயமாக்கல் நிகழ்ச்சி நிரலை ஊக்குவிப்பது, அத்துடன் நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் நேர்மறையான சமூக உரையாடல்கள் தேவை என்று தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஆண் சிங்கங்களே! பெண்களுக்கு உங்கள பிடிக்கணுமா? 'சாணக்ய நீதி' சொல்வதை தெரிஞ்சுக்கோங்க!
World Day of Social Justice

2025 ஆம் ஆண்டுக்கான உலக சமூக நீதி நாள், “உள்ளடக்கத்தை மேம்படுத்துதல்: சமூக நீதிக்கான இடைவெளிகளைக் குறைத்தல்” (Empowering Inclusion: Bridging Gaps for Social Justice) என்பதைக் கருப்பொருளாக கொண்டுள்ளது. சமூக மேம்பாட்டுக்கான இரண்டாவது உலக உச்சி மாநாட்டிற்கு (WSSD2) உலகம் தயாராகி வரும் நிலையில், இந்த ஆண்டு நிகழ்வு சிறப்பான முக்கியத்துவம் பெறுகிறது.

logo
Kalki Online
kalkionline.com