ஜூலை -1 சர்வதேச பழ தினம்- பழங்கள் சாப்பிடுவதற்குப் பின்னால் இத்தனை விஷயங்களா? இது தெரியாம போச்சே!
பொதுவாக பழங்கள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஆனால் பழங்களை எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்பது தான் பலருக்கும் தெரியாத விஷயம்.
பழங்களை எப்போதும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தான் நல்லது என்கிறார்கள் நிபுணர்கள். சாப்பிடுவதற்கு முன்பு பழங்களை சாப்பிடுவது நல்லதா? அல்லது சாப்பிட்ட பிறகு சாப்பிடுவது நல்லதா என லண்டன் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டதில் தெரிய வந்த உண்மை.
சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும் போது, உணவானது பழத்தினால் கிடைக்கும் பலன்களை தடுத்து விடுகிறது. மேலும் ஒரு வேளை நீங்கள் சாப்பிட்ட உணவு கெட்டுப் போயிருந்தாலோ, புளித்துப் போயிருந்தாலோ பழமும் அதனுடன் சேர்ந்து அமிலமாக மாறி வயிறு உப்பும். பழத்தின் சத்து அனைத்தும் வீணாகி விடுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சில பழங்களை சாப்பிட்டால் வாந்தி வருகிறது, சில பழங்களை சாப்பிட்டால் வயிறு உப்பி விடுகிறது, சில பழங்களை சாப்பிட்டால் டாய்லெட் போக தூண்டுகிறது என்று பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதற்கு காரணம் சாப்பிட்ட பிறகு பழங்களை சாப்பிட்டதால் தான். இந்த நிலை பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது ஏற்படுவது இல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும், உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், உற்சாக மனநிலை ஏற்படும், உடல் எடை அதிகரிக்காது. பழங்களை ஜூஸாக சாப்பிட்டால் பிரஷ்ஷாக குடியுங்கள். மெதுவாக உமிழ்நீர் கலந்து சாப்பிடுங்கள். பழங்களை வேக வைத்து சாப்பிட கூடாது. இதனால் சத்துக்கள் போய்விடும். பழங்களை பழங்களாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது தான் என்றும் சிறந்தது.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மற்ற உணவுகளை தவிர்த்து விட்டு பழங்கள் மற்றும் ஜூஸ் மட்டுமே சாப்பிடுவதன் மூலம் உடல் முழுவதும் சுத்தமாகும். இதனால் கை, கால், முகம் என் உடலின் அனைத்து பகுதிகளிலும் பளபளப்பு கூடும் என்பதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பழ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக பழங்களில் வைட்டமின்கள், தேவையான தாதுக்கள் அடங்கியிருக்கின்றது. ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு நன்மைகள் உண்டு . ஆரோக்கியத்தினை அதிகமாக அளிக்கும் பழங்கள் நமது உணவில் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறைவாக பழம் சாப்பிட்டால் ஆரோக்கிய பிரச்சினை ஏற்படும். வயது வந்தவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு கப் பழங்கள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகின்றது. உணவில் எவ்வளவு பழங்கள் சேர்க்கிறோமோ அந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பழங்களை தொடர்ந்து சாப்பிடுவது இதய நோய், நீரிழிவு, அல்சைமர் நோய், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. ஒவ்வொரு நாளும் 2 கப் பழங்கள் சாப்பிடுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் நீண்ட ஆயுளையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறலாம். சில பழங்கள் மனச்சோர்வின் அபாயத்தை குறைக்கின்றது. பெர்ரிகள் மனநிலையை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.
நீங்கள் எவ்வளவு பழங்களைச் சாப்பிடுகிறீர்களோ, உங்கள் கண் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்குமாம். 6 மாத குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய பழங்கள் ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா, பப்பாளி, அவகோடா, பீச், கிவிப்பழம் .
பழங்கள் குறைவாக சாப்பிட்டால், நார்ச்சத்து குறையும். எப்பொழுதும் அசைவம் சாப்பிடுபவர்கள், ஆப்பிள், கிவி, பெர்ரி போன்ற பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்களில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் இவை வீக்கத்தை தடுப்பதுடன், உடலில் நீரேற்றத்தை ஊக்குவிக்கவும் செய்கின்றது.
நீர்ச்சத்து அதிகமாக கொண்ட தர்பூசணியை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கக்கூடாது. ஏனெனில் இவை செரிமான பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட வாழைப்பழத்தினை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் ரத்த அழுத்தத்தின் அளவு கூடுமாம். இதே போன்று ஆப்பிள் பழத்தினை சாப்பிட்ட உடனே தண்ணீர் பருகினால், செரிமானத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
பழங்களில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஒளிரச் செய்வதுடன், முகப்பரு மற்றும் சருமத்தில் உலர்ந்த புள்ளிகளையும் குறைக்கின்றது. சரிவிகித அளவில் பழங்களை உட்கொண்டால் தெளிவான, மென்மையான சருமம் கிடைப்பதுடன் வயதாவதையும் தடுக்கின்றது. சருமத்தில் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கிறது.
சூரியன் மறைவுக்கு பின்னர் தவிர்க்க வேண்டிய 6 பழங்கள்.. சாப்பிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா? சிட்ரஸ் பழங்கள் ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை செரிமான பிரச்சினைகள் ஏற்படுத்தும், வாழைப்பழம் தூக்கத்தை கெடுக்கும், தர்ப்பூசணி குளிர்ச்சியை அதிகரிக்கும், திராட்சை செரிமான பிரச்சினைகள் ஏற்படுத்தும் என்கிறார்கள்.