நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு குவைத் நாட்டில் தடை!

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு குவைத் நாட்டில் தடை!
Updated on

விஜய் நடித்த பீஸ்ட் படத்தை குவைத்தில் ரிலீஸ் செய்ய அந்நாடு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படம் உலகெங்கும் வருகிற 13-ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அப்படத்தில் தீவிரவாதம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், குவைத் நாட்டில் இப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக குவைத் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் சார்பாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்சன் – விஜய் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'பீஸ்ட்' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடி பூஜா ஹெக்டே. மேலும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், யோகிபாபு உடபட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பில் வெளியான இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சமீபத்தில் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் வருகிற 13-ம் தேதி பீஸ்ட் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்துக்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com