தேசப் பாதுகாப்புப் படைவீரர்களைப் போற்றும் தினம்!

டிசம்பர் 7, இந்தியக் கொடி நாள்
Indian Flag Day
Indian Flag Day
Published on

ந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ம் நாளில், படை வீரர் கொடி நாளாக இந்திய அரசு மற்றும் இந்திய மாநில அரசுகள் கடைப்பிடிக்கின்றன. இந்தியா விடுதலை அடைந்த உடனேயே, அரசு தனது பாதுகாப்புப் பணியாளர்களின் நலனை நிர்வகிக்க வேண்டிய தேவை எழுந்தது. 1949ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் நாளில், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு குழு ஆண்டுதோறும் டிசம்பர் 7ம் நாளை கொடி நாளாக (Armed Forces Flag Day) அனுசரிக்க முடிவு செய்தது.

கொடி நாளைக் கடைப்பிடிப்பதன் பின்னணியில், பொதுமக்களுக்கு சிறிய கொடிகளை விநியோகித்து, அதற்கு பதிலாக நன்கொடைகளைச் சேகரிக்க வேண்டும். நாட்டிற்காகப் போராடும் ஆயுதப்படை வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களைக் கவனித்துக்கொள்வது இந்தியக் குடிமக்களின் பொறுப்பு என்று கருதுவதால் கொடி நாள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய ஆயுதப் படைகளின் கொடியானது இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கொடியைப் போன்றது. இது முதன்முதலில் 1956ல் பயன்படுத்தப்பட்டது. மேலும், சைப்ரஸ், கென்யா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட சக காமன்வெல்த் நாடுகளால் பயன்படுத்தப்படும் பிரிட்டிஷ் - இணைக்கப்பட்ட பிரதேசங்களில் பொதுவான நிறங்களைக் கொண்டதாகும்.

கொடி நாள் மூன்று அடிப்படை காரணங்களை ஊக்குவிக்க உதவுகிறது.

* போரில் உயிரிழந்தவர்களின் மறுவாழ்வு.

* பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன்.

* முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மீள்குடியேற்றம் மற்றும் நலன்.

ஆயுதப்படைகளின் கொடி நாள் நினைவேந்தல் மற்றும் கொடிகள் விநியோகம் மூலம் நிதி சேகரிப்பு: இந்தியாவின் தற்போதைய மற்றும் மூத்த ராணுவ வீரர்களுக்கு இந்தியர்கள் நன்றியையும் பாராட்டுதலை தெரிவிக்கவும், நாட்டிற்கான சேவையில் இறந்தவர்களை அங்கீகரிக்கவும் இது ஒரு நேரம் எனும் அடிப்படையில், இந்தியக் கொடி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஃபிரக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்கள் சந்திக்கும் விளைவுகள் என்னென்ன?
Indian Flag Day

இந்தியக் குடியரசின் இராணுவப் படைகள் என்பது இந்திய இராணுவம், இந்தியக் கடற்படை, இந்திய விமானப் படை மற்றும் இந்திய கரையோரப் பாதுகாப்பு படை என நான்கு தொழில் முறை சீருடை அணிந்த சேவைகளாக செயல்படுகின்றன. இந்திய ஜனாதிபதி இராணுவத் தலைமை கமாண்டராக இருக்கிறார். மேலும், இந்திய இராணுவப் படை ஒரு நான்கு நட்சத்திர இராணுவ தளபதியால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்திய ஆயுதப்படைக்குப் பல துணைப்படை அமைப்புகள் (அசாம் ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு எல்லைப்புற பாதுகாப்பு படை) மற்றும் சேவைகளிடையே உளவுத்துறை நிறுவனங்கள் துணைபுரிகின்றன.

இந்திய ஆயுதப்படைகள் மத்தியப் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையிலான மத்தியப் பாதுகாப்பு அமைச்சக (MoD) நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன. இந்திய இராணுவம் 1.3 மில்லியன் தீவிர ஊழியர்களைக் கொண்டு உலகின் 3வது மிகப் பெரிய இராணுவ சக்தியாக விளங்குகிறது.

இந்திய ஆயுதப் படைகள் 1947, 1965 மற்றும் 1971ம் ஆண்டுகளில் இந்திய - பாகிஸ்தான் போர், 1971ம் ஆண்டு கோவா படையெடுப்பு, இந்திய - சீன போர், கார்கில் போர் மற்றும் சியாச்சின் மோதல் உட்பட பல முக்கிய இராணுவ நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ஆயுதப் படையானது உலகின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றாகும்.

இதையும் படியுங்கள்:
சாப்பிட்டதும் சோடா மற்றும் குளிர்பானம் குடிப்பது ஜீரணத்திற்கு உதவுமா?
Indian Flag Day

உலகின் மிகப் பெரிய ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. தற்போது, ரஷ்யா, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இந்திய இராணுவத்திற்கு உபகரணங்கள் அளிக்கும் முதன்மை வெளிநாடுகள் ஆகும். ஏறக்குறைய 1.32 மில்லியன் செயலார்ந்த படைகளையும், 2.14 மில்லியன் இருப்புப் படைகளையும் கொண்டுள்ளது. இந்தியா, அமெரிக்க டாலர் மதிப்பில் 36.03 பில்லியன் வரை இராணுவத்திற்காகச் செலவிடுகிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.83 சதவிகிதம் ஆகும்.

இந்தியாவில், தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதியை படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்தக் கொடிநாளில், சிறிய அளவிலான கொடியைப் பெற்றுக் கொண்டு, தங்களால் இயன்ற அளவு பணத்தைக் கொடுத்து இந்தியப் படைவீரரின் குடும்பத்தினர் நல்வாழ்வுக்கு நாமும் உதவலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com