

பாதாம், பிஸ்தா, முந்திாி போன்ற பருப்பு வகைகள் உண்ண சுவையாக இருக்கும். ஆனால், அதன் விலையை கேட்கும்போது பணக்காரர்கள் தவிர, ஏனையோா்களுக்கு மயக்கமே வந்துவிடும். ஆனால், காலப்போக்கில் வாங்கும் திறன் கூடிய நிலையில் பலருக்கும் அது சாத்தியமான ஒரு உணவுப் பொருளாகவே மாறி விட்டது.
பொதுவாக, கடைகளில் தயாாிக்கப்படும் வெண்பொங்கல் மற்றும் வீடுகளில் தயாரிக்கப்படும் வெண்பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல், கேசரி, பாயசம், வெஜ் மற்றும் நான்வெஜ் புலாவ், பிாியாணி, இனிப்புகள், பிஸ்கட், கேக்குகள் தயாாித்தல், ஐஸ் கிரீம் மேலே பதித்து வைத்தல், மேலும் வேறு பல பதாா்த்தங்கள் தயாாிக்கவும் முந்திரி பருப்பு சோ்க்கப்படுகிறது.
முந்திாி பருப்பு மசாலா பவுடர் கலந்து வறுத்த முந்திாியும், மிளகாய் தூள், மிளகு தூள் கலந்து நெய்யில் வறுத்தும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆக, இது பயன்படுத்தப்படும் விதம், அதன் உபயோகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 23ம் நாள் தேசிய முந்திாி தினம் (National Cashew Day) கடைபிடிக்கப்படுகிறது. இந்த நடைமுறை முதலில் அமொிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது.
முந்திாி மரம் வடகிழக்கு பிரேசிலில் தோன்றியதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த நாளின் நோக்கமே முந்திரி விவசாயிகளை கெளரவப்படுத்துவதாகும். முந்திாியில் நிறைய சத்துகள் அடங்கி உள்ளன. முந்திாி என்பது போா்த்துக்கீசிய வாா்த்தையான அகாஜி என்பதிலிருந்து வந்ததாகும்.
முந்திரி இதயத்தின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. அதோடு, உடலில் வளா்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. முந்திாியில் மோனோ சாச்சுரேடட் மற்றும் பாலி அன் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இது கொலஸ்ட்ரால் அளவை குறைத்தாலும், இதய ஆரோக்கியத்திற்கு முந்திாி பயனுள்ளதாக இருந்தாலும் இதய நோயாளிகள் அதிக அளவில் அதை சாப்பிடக் கூடாது.
பொதுவாக, ஒரு முந்திரி மரத்தின் வயது அறுபது வருடங்களாகும். ஒரு முந்திாி மரம் நடப்பட்ட மூன்று வருடங்களில் மகசூல் கொடுக்க ஆரம்பிக்கும். அதிகபட்ச அறுவடைக்கு எட்டு ஆண்டுகள் ஆகலாம். முந்திரியில் எவ்வளவு ருசி, சுவை, ஆரோக்கிய விஷயங்கள் இருந்தாலும் அதை அளவோடு சாப்பிடுவதே நல்லதாகும். ஆக, இந்த நாளில் முந்திரியின் சுவை அறிந்து, அளவோடு அதை உணவில் பயன்படுத்தி வளமோடு வாழ்வதே சிறப்பான ஒன்றாகும்.