ஊனம் உடலுக்குத்தான்; உள்ளத்துக்கு இல்லை என சாதித்துக் காட்டிய உலகப் பிரபலங்கள்

டிசம்பர் 3, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
International Day of Persons with Disabilities
Disabled person
Published on

லகில் சுமார் 1.3 பில்லியன் மக்கள் குறிப்பிடத்தக்க உடல் ஊனத்தை அனுபவிக்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் 16 சதவிகிதம் அல்லது நம்மில் 6 பேரில் ஒருவரைக் குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1992ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை தீர்மானம் டிசம்பர் 3ம் தேதியை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கொண்டாட அறிவித்தது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்கான ஆதரவைத் திரட்டுவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் என்பவர்கள் உடல், மனம், அறிவு, புலன் உணர்வு போன்ற ஏதாவது ஒன்றில் குறைபாடுகள் உள்ள நபர்கள். இவர்கள் பிறப்பால் அல்லது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் இந்த குறைபாடுகளைப் பெற்றிருக்கலாம். உடல் இயலாமை குறையுடன் உலகில் பலர் பிறக்கின்றனர். ஆனால், அதில் சிலர் மட்டுமே குறை உடலில்தான். தங்களது மனதில் இல்லை என்று சாதிக்கிறார்கள். அப்படி சாதித்த சில உலக ஆளுமைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

இதையும் படியுங்கள்:
இரண்டு முறை இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலைவர்!
International Day of Persons with Disabilities

ஜான் மில்டன் (John Milton) புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்குத் துணை புரிந்தவர். இந்தக் காலகட்டத்தில் அவருடைய கண் பார்வை பறிபோனது. உதவியாளர்களிடம் புத்தகங்களைப் படிக்கச் சொல்லி கேட்பார். படைப்புப் பணியையும் நிறுத்தவில்லை. அதன் பிறகுதான் இவரது ‘மாஸ்டர்பீஸ்’ எனப்படும் படைப்பான ‘பாரடைஸ் லாஸ்ட்’ காவியத்தைப் படைத்தார்.

லகப் புகழ் பெற்ற ஜெர்மானிய இசை மேதை ‘லுட்விக் வான் பீத்தோவன் (Ludwig Van Beethoven)’ 9 சிம்பொனி இசை வடிவங்களுக்குச் சொந்தக்காரர். ஆனால், இவர் சிறு வயது முதலே கல்லீரல் நோய், பெருங்குடல் அழற்சி, வாதநோய், சரும நோய்கள், கண், இதய பாதிப்பு, என பலவற்றால் அவதிப்பட்டு வந்தார். ஆனாலும், அவரது இசைப் பயணம் மட்டும் சீராகத் தொடர்ந்தது. 27 வயதில் அவருக்கு முற்றிலுமாக காது கேட்காமல் போனது. பல அற்புத இசை வடிவங்களையும், சிம்பொனி இசை வடிவங்களையும் உலகுக்குக் காது கேளாத நிலையில்தான் இவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெலன் கெல்லர் புகழ் பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். இள வயதிலேயே இவர் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவராவார். இருப்பினும் தன்னை போல இருப்பவர்கள் உத்வேகம் பெற பல நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவு ஆற்றியவர்.

இதையும் படியுங்கள்:
நவீன அடிமைத்தனத்தின் கோர முகங்கள்: ஒரு விழிப்புணர்வு பார்வை!
International Day of Persons with Disabilities

லூயிஸ் பிரெய்ல் பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் இவர்தான் கண்டுபிடித்தார்.

யிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த தாமஸ் ஆல்வா எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் காது கேளாத மற்றும் கற்றல் குறைபாட்டினால் அவதிப்பட்டு வாழ்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜோசப் பர்க் ஒரு அமெரிக்க நடிகர். ‘லைஃப் கோஸ் ஆன்’ என்ற தொலைக்காட்சி தொடரில் சார்லஸ் ‘கார்க்கி’ தாட்சர் என்ற கதாபாத்திரத்திற்காக அவர் மிகவும் பிரபலமானார். இவர் டவுன் சிண்ட்ரோம் குறைபாடு உடையவர். எனவே, 1994 முதல் தேசிய டவுன் சிண்ட்ரோம் சொசைட்டியின் நல்லெண்ண தூதராக இருந்து வருகிறார்.

யக்கவியலின் மூன்று விதிகள், விஞ்ஞான வரலாற்றில் மிகுந்த புகழ் பெற்றவை. இதை வழங்கியவர் இங்கிலாந்து நாட்டின் ஐசக் நியூட்டன். ‘டெஸ்லெக்ஸியா’ என்பது ஒரு கற்றல் குறைபாடாகும், இது ஐசக் நியூட்டனுக்கு இருந்தது.

இதையும் படியுங்கள்:
தாய்நாட்டுக்காக தன்னலம் பாராது உழைக்கும் வீரர்களின் வியக்க வைக்கும் வரலாறு!
International Day of Persons with Disabilities

நோபல் பரிசை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர் ஆல்ஃபிரட் நோபல் ஒரு வேதியாளர், டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். பொறியாளர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். இவர் காக்கா வலிப்பு நோயின் காரணமாக அவதிப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கர் லெனர்ட் கார்ல் பிஸ்டோரியஸ் (Oscar Leonard Carl Pistorius) தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீரர். இவருக்கு முட்டிக்கு கீழே கால்கள் இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2012 கோடைக்கால ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்கு எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, அமெரிக்க இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அந்த பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இவர் ‘மோட்டார் நியூரான் நோய்’ தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது வாழ்நாள் முழுவதும் வீல் சேரில் இருந்தே வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com