இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. 1996 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்குப் பிறகு பாகிஸ்தான் முதல் முறையாக ஐ.சி.சி நிகழ்வை நடத்துவதால் இந்தப் போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்படி போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.60 கோடியாகும். இது கடந்த போட்டியை விட 53 சதவீதம் அதிகம்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என்பது மினி உலகக் கோப்பை என்றும் அழைக்கப்படும் நாக் அவுட் போட்டியாகும், இது 1998-ம் ஆண்டு ஐசிசியால் தொடங்கப்பட்டது. இந்தக் கட்டுரையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலைப் பார்ப்போம். இவர்கள் உலகின் வெற்றிகரமான பந்து வீச்சாளர்கள்.
நியூசிலாந்தின் கைல் மில்ஸ் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளர் ஆவார். அவர் (2002 - 2013) 15 போட்டிகளில் 24.10 ஸ்ட்ரைக் ரேட்டில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்கா 16 போட்டிகளில் விளையாடி மொத்தம் 25 விக்கெட் வீழ்த்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
முரளிதரன் 17 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 24 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளார்.
16 போட்டியில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய வீரர் பிரட்லி மொத்தமாக 22 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
5-வது இடத்தை ஆஸ்திரேலிய வீரர் மெக்கராத் மற்றும் ஆண்டர்சன் பகிர்ந்து உள்ளார். இவர்கள் இருவரும் 12 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட் வீழ்த்தி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
காலிஸ் 17 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் டில்லியான் 7 போட்டிகளில் விளையாடி 19 விட்கெட்டுகளை வீழ்த்தி 8-வது இடத்தில் இருக்கின்றார்.
9-வது இடத்தை இலங்கை வீரர் வாஸ் மற்றும் நியூசிலாந்து வீரர் டேனியல் விக்டோரியும் பிடித்துள்ளனர். இலங்கை வீரர் வாஸ் 16 போட்டிகளில் விளையாடி 18 விட்கெட்டுகளையும், நியூசிலாந்து வீரர் டேனியல் விக்டோரி 17 போட்டிகளில் விளையாடி 18 விட்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.