சரியான அளவில் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இதனால் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு, நீண்டநாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். சரியான அளவில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?
தாகம் :-
உடலில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்தால், அடிக்கடி தாகம் ஏற்படும். தாகம் என்பது உடலில் தண்ணீர் குறைபாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று.
அடர் நிறத்தில் சிறுநீர் :-
சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வந்தால், உடலில் சரியான அளவில்தண்ணீர் உள்ளது என்று அர்த்தம். அதுவே சிறுநீரானது நல்ல அடர் நிறத்தில், கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவந்தால், உடலில் தண்ணீர் குறைவாகஉள்ளது என்று அர்த்தம்.
சோர்வு :-
உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால், உடலானது நன்கு செயல்படுவதற்குதேவையான சக்தியானது இல்லாமல், சோர்வுடன் இருக்கும். இவ்வாறு அடிக்கடிசோர்வு ஏற்பட்டால், உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது, அதிகம் குடிக்கவேண்டும் என்று பொருள்.
பசி உணர்வு :-
சிலருக்கு உடல் வறட்சி அதிகமாகி, தாகத்தையும் தாண்டி, அதிகப்படியான பசியானது ஏற்படும். இவ்வாறு அடிக்கடி பசி உணர்வு ஏற்பட்டால், அது உணவு உண்பதற்கான அறிகுறி அல்ல. மாறாக அது உடலில் வறட்சி உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆகவே இந்நேரத்தில் தண்ணீரை அதிகம் பருகவேண்டும்.
வறட்சியான சருமம் :-
உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு தான் சருமம். இந்த சருமத்திற்கு அதிகப்படியான தண்ணீரானது மிகவும் அவசியம். .
குறைவான வியர்வை :-
உடலின் வியர்வையானது தண்ணீரால் உருவானது. ஆனால் உடலில் போதியதண்ணீர் இல்லாவிட்டால், வியர்வையானது வற்றி விடும். இதனால் உடலில் உள்ளகெட்ட நீர் வெளியேற்றப்படுவது தடைபட்டு, சருமத்தை மட்டுமின்றி, உடலையும்ஆரோக்கியமற்றதாக்கி விடும்.