அடிதூள்.!! ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணிக்கு வெண்கலப் பதக்கம்.!

ஆசிய விளையாட்டு 2026: மகளிர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம்!
வெண்கலப் பதக்கம்
Asian Games
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி ஜப்பானில் உள்ள நகோயா நகரில் தொடங்கியது. அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 43 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.

நேற்று (செப்டம்பர் 30) ஒரே நாளில் இந்தியா 5 தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம் பதக்கப் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 1) ஸ்குவாஷ் போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

அனாஹித் சிங், சமீனா ரியாஸ், தன்வி கன்னா மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் அடங்கிய மகளிர் ஸ்குவாஷ் அணி 3-ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

இதையும் படியுங்கள்:
சேப்பாக்கம் மைதானத்தில் தமிழக கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு பிரம்மாண்ட கௌரவம்.!
வெண்கலப் பதக்கம்

ஸ்குவாஷ் மகளிர் அணியின் அரையிறுதிச் சுற்றில் இந்திய மகளிர் அணி, பலம் வாய்ந்த ஹாங்காங் மகளிர் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 1-2 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி கடுமையாக போராடித் தோல்வியடைந்து. இருப்பினும் 3வது இடத்தைப் பிடித்ததால், இந்திய மகளிர் அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இந்திய மகளிர் அணியில் அனுபவம் மிக்க மூத்த வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீராங்கனை அனாஹித் சிங், சமீனா ரியாஸ் மற்றும் தன்வி கன்னா ஆகியோருடன் இணைந்து இந்தப் பதக்கத்தை வென்றார்.

இளம் வீராங்கனைகளுடன், அனுபவம் நிறைந்த வீராங்கனை இணைந்து விளையாடியதால் பதக்கத்தை வெல்ல முடிந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
ரூ.5,000 சரிவு.! முதல் நாளே இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி விலை.!
வெண்கலப் பதக்கம்

​அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக லீக் சுற்றுகளில் சீனா, ஜப்பான் மற்றும் ஈரான் உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தியது இந்தியா. அதோடு தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்து இந்திய மகளிர் அணி காலிறுதி மற்றும் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் ஸ்குவாஷ் விளையாட்டில் இந்தியா தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. குறிப்பாக இளையோர் மற்றும் மூத்த வீராங்கனைகளின் கூட்டணியில் இந்திய அணி மீண்டும் ஒரு சர்வதேச பதக்கத்தை வென்றிருப்பது மகிழ்ச்சியான விஷயமாகும்.

20வது ஆசிய விளையாட்டுகள் போட்டித் தொடரில் இந்தியா 10 தங்கம், 21 வெள்ளி மற்றும் 30 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 61 பதக்கங்களுடன் 8-வது இடத்தில் உள்ளது.

இந்தப் பதக்கப் பட்டியலில் 277 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 200 பதக்கங்களுடன் ஜப்பான் 2-ம் இடத்திலும், 103 பதக்கங்களுடன் தென்கொரியா 3-ம் இடத்திலும் உள்ளன.

logo
Kalki Online
kalkionline.com