ஒலிம்பிக்கிற்கு நேரடி தகுதி.!! வில்வித்தையில் ஒரே நாளில் 2 தங்கம் வென்ற இந்திய வீரர்கள்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிக்கு நேரடி தகுதி பெற்று இந்திய விளையாட்டில் புதிய வரலாறு.!
வில்வித்தை தங்கம்
Asian Games
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி ஜப்பானில் உள்ள நகோயா நகரில் தொடங்கியது. அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 43 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய வீரர்கள் ஆசிய போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து சாதனைப் படைத்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களைக் குவித்தனர். இதன் தொடர்ச்சியாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையில் அதிரடி காட்டி வருகின்றனர்.

இதன்படி இன்று (செப்டம்பர் 30) ஒரே நாளில் வில்வித்தை பிரிவில் 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது இந்தியா.

இதையும் படியுங்கள்:
தண்ணீர் பஞ்சத்தில் இருந்து தப்புமா சென்னை.! 5 டிஎம்சி நீர் மட்டுமே மிச்சம்.!
வில்வித்தை தங்கம்

மகளிர் தனிநபர் பிரிவில் ஒரு தங்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரு தங்கமும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இன்று அதிகாலையில் நடந்த மகளிர் காம்பவுண்ட் வில்வித்தைப் போட்டியில், 238-234 என்ற புள்ளிக் கணக்கில் சீன அணியைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றது இந்தியா.

தங்கம் வென்ற இந்திய அணியில் சிகிதா தனிபார்த்தி, ஜோதி சுரேகா வென்னம், மற்றும் பிரித்திகா பிரதீப் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

வில்வித்தைப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கத்தை வென்ற சில மணி நேரங்களிலேயே அடுத்த தங்கப் பதக்கத்தையும் வேட்டையாடியுள்ளது இந்தியா. இம்முறை கலப்பு இரட்டையர்கள் பிரிவில் பதக்கத்தை தன்வசமாக்கியது இந்தியா.

இதையும் படியுங்கள்:
​'டக்'கென எகிறிய தங்கம் விலை: ஆடிப்போன நடுத்தர வர்க்கம்.! இன்றைய விலை நிலவரம்.!
வில்வித்தை தங்கம்

வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் சிகிதா தனிபார்த்தி - சாஹில் இணை முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றனர். அரையிறுதிப் போட்டியில் தாய்லாந்து அணியை 156-155 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி வென்றது. வெறும் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டியில் 158-157 என்ற புள்ளிக் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தினர் இந்திய வீரர்கள்.

வில்வித்தையில் ஏற்கனவே இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்றது இரட்டிப்பு மகிழ்ச்சியாகும். இந்த இரண்டு போட்டிகளிலும் தங்கம் வெல்ல சிகிதா தனிபார்த்தி முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இவருக்கு ஒரே நாளில் கிடைத்த 2வது தங்கம் இதுவாகும். காலையில் மகளிர் காம்புண்ட் அணிகள் பிரிவிலும், தற்போது கலப்பு இரட்டையர் பிரிவிலும் அவர் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார்.

ஒலிம்பிக் பேட்டிக்கு நேரடி தகுதி:

ஆசிய போட்டியில் வென்றதன் மூலம் 2028-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் காம்பவுண்ட் வில்வித்தை பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் பிரிவுக்கு நேரடியாக தகுதி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com