செஸ் விளையாட மேக்ஸ் தெரியணுமா? சயின்ஸ் என்ன சொல்லுது பாருங்க!

முதல் நாளே எதிரிக்கு டஃப் கொடுக்கும் சூப்பர் செஸ் டிப்ஸ்!
செஸ் விளையாட்டு - Chess Science
செஸ் விளையாட்டு - Chess Science
A.N.ராகுல்

A.N.ராகுல், பொறியியல் பட்டதாரி. கல்கி ஆன்லைன் அறிமுகப்படுத்திய வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர். தமிழின் மீதுள்ள ஆர்வத்தால் எழுத்துத் துறையில் இணைந்த இவர், பொழுதுபோக்கு மற்றும் பொது அறிவு சார்ந்த பயனுள்ள தகவல்களைத் தாய்மொழியில் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்குத் தொகுத்து வழங்கி வருகிறார்.

Updated on: 

இதுக்கு பின்னாடி இருக்குற சயின்ஸ் மேட்டரை நாம முதல்லயே ரொம்ப தெளிவா பார்த்துடலாம். ஏன்னா, நான் இந்த கேமை ரீசண்டாதான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். அதனால இதப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும்!

இப்போ ரீசண்டா வந்த 'ஜெயிலர் 2' படத்துல கூட நம்ம ‘மூர்த்தி அண்ணா’ வர்ற ஒரு செஸ் காமெடி சீன் வரும், ஞாபகம் இருக்கா? சுராஜ் வெஞ்சாரமூடு கூட நம்ம மூர்த்தி அண்ணா ஆடுற அந்தக் காமெடியான கேம பார்த்துட்டு, ‘செஸ் விளையாட சும்மா ஏதோ பெரிய கணக்கு புலியா இருக்கணும், இல்லனா நம்மள முட்டா பீஸுனு நினைச்சிருவாங்கனு’ நீங்க நினைச்சா அது தப்பு பாஸ்!

அங்க எப்படி மூர்த்தி அண்ணா லாஜிக்கே இல்லாம 100% கான்ஃபிடன்ஸோட காய்களை நகர்த்தி தியேட்டரையே சிரிக்க வச்சாரோ, அதேபோல் செஸ்ஸையும் கான்ஃபிடன்டா நம்ம ஸ்டைல்ல ஈஸியா கத்துக்கலாம்!

நம்ம FIDE EDU வெப்சைட்ல சொல்றபடி, ஃபர்ஸ்ட் நாள் ‘எந்த ஒரு கஷ்டமான மேக்ஸ் பார்முலாவும்’ தெரியாமலே ஒரு முழு கேமையும் உங்களால செம கான்ஃபிடன்டா செஸ் விளையாட்டு விளையாட முடியும். செஸ்ங்கிறது வெறும் மேக்ஸ் மட்டும் இல்ல. அது நம்ம கண்ணால நல்லா உத்து பாக்குற பவர், அப்புறம் டக்குனு முடிவெடுக்குற திறமைகளச் சார்ந்துதான் இருக்கு!

செஸ்ஸுக்கும், மேக்ஸுக்கும் பெரிய சம்பந்தம் இல்லனு சயின்டிஃபிக்கா நிரூபிச்சிருக்காங்க. அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தோட PubMed மற்றும் Frontiers in Psychology ரிசர்ச் டேட்டாபடி பார்த்தா, செஸ் விளையாடுறது நம்ம மூளையோட கவனம், மெமரி, மற்றும் பிளானிங் (Planning) பவரைத்தான் ஸ்ட்ராங்கா மாத்துமாம்.

இந்த சயின்ஸ் ரிப்போர்ட்படி, செஸ் பிளேயர்ஸோட மூளை ரொம்ப ஆக்டிவா வேலை செஞ்சு, அவங்களோட விஷுவல் (Visual) திறமையையும், லாஜிக்கல் திங்கிங்கையும் வேற லெவலுக்குக் கொண்டு போயிடுமாம்.

செஸ் விளையாட்டு - Chess Science
செஸ் விளையாட்டு - Chess Science

இதனாலதான் ஒருத்தர் தன்னோட ஃபர்ஸ்ட் டேல கூட எக்ஸ்பீரியன்ஸ் பிளேயருக்கே செம டஃப் கொடுக்கமுடியும்! ஏன்னா புதுசா வர்றவங்க எந்த ஒரு பிரச்னையும் இல்லாம ரொம்ப வித்தியாசமா விளையாடி ஆச்சரியப்படுத்துவாங்களாம். ஆனா, செஸ் மேஜிக் என்ன தெரியுமா?

இந்தப் பிரபஞ்சத்துல இருக்குற அணுக்களைவிட செஸ் கேம்ல வரக்கூடிய, இல்ல பண்ணக்கூடிய மூவ்களோட(Move) சான்சஸ் ரொம்ப ரொம்ப அதிகம்!.

ஃபர்ஸ்ட் நாள்ல நம்மளால சிப்பாய் நேரா போறது, குதிரை எல் ஷேப்ல தாண்டுறது, மந்திரி கிராஸா போறது, யானை நேராப் போவதும், ராணி எல்லா பக்கமும் சுத்துறது, ராஜா எப்படி நகருதுனு ஈஸியா கத்துக்க முடியும். ஆரம்பத்துல உங்க ராஜாவைப் பாதுகாக்குறது, செக்மேட் பண்றதுதான் மெயின் டார்கெட். கேம் ஸ்டார்ட் பண்ணும்போது செஸ் போர்டோட (Board) சென்டர் கட்டங்களை உங்க கண்ட்ரோல்ல கொண்டுவர பாருங்க.

இதையும் படியுங்கள்:
புது வீடு கட்ட போறீங்களா? முதல்ல இந்த சோதனையை செய்யலைனா பட்ஜெட் எகிறிடும்!
செஸ் விளையாட்டு - Chess Science

ஒரே காயைத் திரும்பத் திரும்ப நகர்த்தாம, ஒவ்வொரு மூவ் பண்றதுக்கு முன்னாடியும் உங்க காய் எதுவும் வெட்டுப்பட போகுதான்னு அலர்ட்டா செக் பண்ணிக்கோங்க. சுருக்கமா சொன்னா, செஸ்ங்கிறது வெறும் விளையாட்டு இல்ல, அது நம்ம உடம்புக்கும், மனசுக்கும் ஒரு நல்ல எனர்ஜி தர பக்கா மைண்ட் கேம்.

இனிமேல் நீங்க செஸ் விளையாடும்போது இந்த சயின்ஸ் மேட்டரை மனசுல வச்சுக்கோங்க. இது நம்ம மூளையை செம ஷார்ப்பா மாத்துறது மட்டும் இல்லாம, லைஃப்ல நல்ல முடிவுகளை எடுக்கவும் நமக்கு கத்துக்கொடுக்கும்.

சோ, இந்த வாரம் உங்க வீட்ல இருக்குற எல்லாரையும் ஒண்ணா சேர்த்து உட்கார வச்சு ஒரு சூப்பர் செஸ் மேட்ச் போடுங்க. உங்க எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்ததுனு மறக்காம மத்தவங்களுக்கும் ஷேர் பண்ணுங்க!.

இதையும் படியுங்கள்:
உங்க பெட்ஸ் (Pets) ஏசி ரூம்ல இருந்தும் ஸ்ட்ரெஸ்ஸா இருக்கா? வெளிவராத அதிர்ச்சி உண்மைகள்!
செஸ் விளையாட்டு - Chess Science
logo
Kalki Online
kalkionline.com