இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ்.தோனி.குறுகிய காலத்திலேயே இந்தியாவிற்கு 3 உலகக்கோப்பைகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார் தோனி. அதிரடியான பேட்டிங், வேகமான விக்கெட் கீப்பிங் திறமை மற்றும் அட்டகாசமான கேப்டன்சி என தோனியின் செயல்பாடுகள் அனைத்துமே சிறப்பாகவே இருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
சென்னை அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த தோனி தான், பல இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். இந்தப் பட்டியலில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் இருக்கிறார்கள். விக்கெட் கீப்பர்கள் பலர், தோனியைப் பார்த்து கேப்டன்களாக மாறியுள்ளனர். அப்படி ஒரு வீரரைத் தான் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
தோனியின் விக்கெட் கீப்பிங் ஸ்டைல் இன்றளவும் குறையவில்லை. தன்னால் நீண்ட நேரம் பேட்டிங் விளையாட முடியாவிட்டாலும், விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயலாற்றுகிறார்.
ஃபீல்டிங் செட் மற்றும் எதிரணி பேட்ஸ்மேன்களின் பேட்டிங் வியூகம் போன்றவற்றை கணிப்பது விக்கெட் கீப்பர்களுக்கு எளிதாக இருக்கும். இச்சூழலில் விக்கெட் கீப்பர்கள் கேப்டனாக இருந்தால், அணி வீரர்களுக்கு உரிய நேரத்தில் தகுந்த அறிவுரைகளை சொல்ல முடியும். இப்படித் தான் தோனியும் வெற்றிகரமான விக்கெட் கீப்பிங் கேப்டனாக சாதித்தார்.
தோனியைப் பார்த்து விக்கெட் கீப்பர்களாக மாறியவர்கள் பல பேர் உள்ளனர். அதேபோல் தோனியைப் பார்த்து விக்கெட் கீப்பர்கள் பலர் கேப்டன்களாகவும் செயல்பட்டிருக்கிறார்கள். இதில் முக்கியமானவர் தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜாஸ் பட்லர். இவர் ஏன் முக்கியமானவர் என்றால், இங்கிலாந்து அணிக்காக இரண்டாவது டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.
கிரிக்கெட் விளையாட்டைக் கண்டுபிடித்த இங்கிலாந்து அணி பல ஆண்டுகளாக உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்தது. இந்நிலையில் பால் காலிங்வுட் தலைமையிலான இங்கிலாந்து அணி முதன்முறையாக 2010 ஆம் ஆண்டு டி20 உலகககோப்பையை வென்றது. அதற்குப் பின் இயான் மோர்கன் தலைமையில் ஒருநாள் உலகககோப்பையை 2019 இல் வென்றது.
பிறகு மீண்டும் 2022 இல் ஜாஸ் பட்லர் தலைமையில் இரண்டாவது டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. விக்கெட் கீப்பங் பேட்டராக இங்கிலாந்து அணிக்குள் நுழைந்த ஜாஸ் பட்லர், சிறப்பாக விளையாடி பல போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
இயான் மோர்கனின் ஓய்வுக்குப் பிறகு திறமையான கேப்டனைத் தேடியது இங்கிலாந்து அணி. அப்போது ஒருசில வீரர்களுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. அதில் ஜாஸ் பட்லர் சிறப்பாக செயல்படவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிற்கு கேப்டனாக மாறினார். பல ஆண்டுகள் கேப்டனாக தலைமை தாங்கிய பட்லர், பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார்.
விக்கெட் கீப்பிங் பேட்டராக இருந்த ஜாஸ் பட்லர் கேப்டனாக ஆசைப்பட்டது கூட, இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனியை முன்னுதாரணமாக நினைத்து தான். அவரது ஆசையும் ஒரு கட்டத்தில் நிறைவேற, இங்கிலாந்து அணிக்கு ஒரு உலகக்கோப்பையையும் பெற்றுக் கொடுத்து விட்டார். பட்லர் மட்டுமல்ல பல டி20 தொடர்களில் விக்கெட் கீப்பர்கள் கேப்டன்காளாக சிறப்பாக செயலாற்றுவதற்கு இன்ஸ்பிரேஷனே தோனி தான்.