சத்தம் இல்லாமல் திருமணத்தை முடித்த 'இந்தியாவின் தங்க மகன்': ஹிமானி மோர் யார் தெரியுமா?

Neeraj Chopra marriage
Neeraj Chopra marriageIndia TV News
Published on

இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா முன்னறிவிப்பு எதுவும் இன்றி திருமணம் செய்துள்ளது அவரது ரசிகர்களை ஆச்சரித்தில் ஆழ்த்தியுள்ளது. ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான இந்திய ஈட்டி எறிதல் வீரர், அரியானாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, ஹிமானி மோர் என்ற பெண்ணை எளிய முறையில் திருமணம் செய்துள்ளார். நீரஜ் மற்றும் ஹிமானி திருமணம் இமாச்சல பிரதேசத்தில் நெருங்கிய உறவினர்கள் 50 பேர் முன்னிலையில் நடந்ததாக கூறப்படுகிறது.

நீரஜ் சோப்ரா, ஹிமானி மோர் திருமணம் பற்றி தகவல்கள் ஊடகங்களில் வெளிவராத நிலையில் இவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். மேலும், “இந்த தருணத்திற்கு எங்களை கொண்டு வந்த ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் நன்றி” என்று தலைப்பில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவையும் ஆசிகளையும் கேட்டனர். அவரது திடீர் திருமண அறிவிப்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், புதுமண ஜோடிக்கு விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும் வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
'No-1 Heroine' ராஷ்மிகா மந்தனா- 'நேஷனல் க்ரஷ் ஆஃப் இந்தியா' என்று கொண்டாடும் ரசிகர்கள்!
Neeraj Chopra marriage

பிரபலங்களுக்கு இணையாக பெயரையும், புகழையும் பெற்று இருக்கும் நீரஜ் சோப்ராவின் திருமண நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீரஜ் மனைவி ஹிமானிக்கு 25 வயதாகிறது. டென்னிஸ் வீராங்கனையான இவர் தற்போது அமெரிக்காவில் விளையாட்டு மேலாண்மையில் முதுகலைப் பட்டம் (மேஜர்) படித்து வருகிறார். சோனிபட்டைச் சேர்ந்த ஹிமானி சோனிபட்டில் உள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். Miranda House Delhi University-ல் பொலிட்டிக்கல் சயின்ஸ் மற்றும் உடற்கல்வியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
108 முறை இதை செய்தால் சிறப்பான பலன்களை தரும்! ஆனால்...
Neeraj Chopra marriage

2016-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற உலக ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் ஹிமானி தங்கப் பதக்கம் வென்றதாக அவர் படித்த பள்ளி இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஹிமானி 2017-ல் தைபேயில் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த திருமணம் குறித்து நீரஜ் சோப்ராவின் மாமாவிடம் விசாரித்த போது, இந்த திருமணம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததாகவும், தற்போது நீரஜ் மற்றும் அவரது மனைவி ஹிமானி இருவரும் தேனிலவுக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் கூறினார்.

இதையும் படியுங்கள்:
உடல் நச்சுகளை நீக்கும் பண்ணைக்கீரை! கிடைச்சா, மிஸ் பண்ணாதீங்க...
Neeraj Chopra marriage

பல பிரபலங்கள் ஆடம்பரமாக, பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ளும் நிலையில் இந்தியாவின் தங்க மகனாக கொண்டாடப்படும் நீரஜ் சோப்ரா மிகவும் எளிமையாக பாரம்பரிய முறையில் கிராமத்தில் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தி உள்ளது.

நீரஜ் சோப்ரா 2021-ம்ஆண்டு ஒலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கமும், 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com