94 ஆண்டுகளுக்கு முன்பே மிரட்டிய இந்தியா - மறக்க முடியாத வரலாற்றுத் தருணங்கள்!

இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக விளையாடிய இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுக்கள் அணி டெஸ்டுக்கள் பற்றி காண்போம்.
India-Pakistan held October 16, 1952
India-Pakistan held October 16, 1952image credit-timesnownews.com
வாசுதேவன்

எழுதுவதின் மேல் இருக்கும் ஆர்வம் காரணமாக, பல ஆண்டுகளாக என் பெயரிலும் ( வாசுதேவன் ), புனை பெயரிலும் ( மஞ்சுதேவன் ) (Pen name. Manjudevan) எழுதி வருகிறேன். பல்வேறு பத்திரிகைகளில் எனது படைப்புக்கள் வந்துள்ளன. பணி நிமித்தம் கர்நாடகா, தமிழ் நாடு, மேற்கு வங்காளம், குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் வேலை செய்யும் பொழுது, பல்வேறு மக்களை சந்திக்கவும், பழகவும் கிடைத்த வாய்ப்புக்கள், பெற்ற அனுபவங்கள் எழுத உதவுகின்றன

Updated on: 

25 மார்ச் 2026 பதிவில் (94 ஆண்டுகளுக்கு முன்பே மிரட்டிய இந்தியா -மறக்க முடியாத வரலாற்று தருணங்கள்!) இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக விளையாடிய இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுக்கள் அணி டெஸ்டுக்கள் பற்றி பார்த்தோம்.

இங்கு அடுத்த மூன்று அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்டுக்கள் பற்றி காண்போம்.

01. சுதந்திர இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றியே பாகிஸ்தானுக்கு எதிராக! (1952)

டில்லியின் பிரோஸ் ஷாஸ் கோட்லா மைதானத்தில் தேதி 1952ல் அக்டோபர் 16 முதல் 18 நடைபெற்ற டெஸ்ட்.

முதலில் ஆடிய இந்திய அணி 372 ரன்கள் குவித்தனர்.

  1. ஹேமு அதிகாரி: 81* (நாட் அவுட்)

  2. விஜய் ஹசாரே: 76

  3. குலாம் அஹ்மத்: 50

  4. பாகிஸ்தான் தரப்பில் அமீர் இலாஹி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் அணி வீரர்கள் வினு மன்காடின் சூழல் பந்துக்களை (spin bowling )எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுக்களை இழந்தனர். அவர் வீழ்த்திய விக்கெடுக்கள் 8.

இதையும் படியுங்கள்:
மூன்று நூற்றாண்டுகள்; மூன்று டெஸ்ட் போட்டிகள்; ஒரு வியக்கத்தக்க ஒற்றுமை!
India-Pakistan held October 16, 1952

விக்கெட் கீப்பர் மற்றும் துவக்க வீரர் ஹனிஃப் முஹம்மது 51 ரன்கள் எடுத்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள்.

இந்திய அணி கேப்டன் லாலா அமர்நாத் பால்லோவ் ஆன் முறையை அமுல்படுத்தினார்.

இரண்டாவது இன்னிங்சிலும் கிட்டதட்ட முதல் இன்னிங்ஸ் போன்றே ஆட்டத்தை வெளிப்படுத்தினர் பாகிஸ்தான் அணி வீரர்கள்.இந்தமுறை அந்த அணி ஆல் அவுட் 152 ரன்களுக்கு.

கேப்டன் அப்துல் கர்தார் 43 *நாட் அவுட்

இம்டியாஸ் அஹ்மத் 41

பாசல் முஹம்மது 27 ரன்கள் சேர்த்தனர்.

குலாம் அஹ்மத் 4 மற்றும் வினு மன்காட் 5 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.

வினு மன்காட் பவுலிங்

47 ஓவர்கள் 24.2

27 மெய்டன்கள் 3

52 ரன்கள் 79

8 விக்கெட்டுக்கள் 5

வினு மன்காட் தனது திறமையான பவுலிங்கால் 13 விக்கெட்டுக்கள் வீழ்த்தி எதிரணி பாகிஸ்தான் வீரர்களை திணறடித்தார்.

இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதன் முதல் டெஸ்டிலேயே ஒரு இன்னிங்ஸ் 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

பாகிஸ்தான் அணியில் இந்த டெஸ்டில் 9 அறிமுக வீரர்கள் விளையாடினார்கள். இந்த டெஸ்ட் 3 தினங்களில் முடிவடைந்தது.

02. நியூசிலாந்து அணிக்கு எதிராக அறிமுக வீரரின் சதம்! (1955)

ஹைதராபாத், பாட்டேஹ் மைதானத்தில் (தற்போது எல்.பி. சாஸ்திரி மைதானம்) 1955 நவம்பர் 19 முதல் 24 வரை நடைபெற்றது.

இந்திய அணி வீரர்கள் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்திய அணியில் மூன்று வீரர்கள் சதங்கள் எடுத்தனர்.

அதில் இரட்டை சதம் எடுத்து அசத்தியவர் பாலி உம்ரிகர். 223 ரன்கள்(26பவுண்டரிகள்)

பாலி உம்ரிகர் தான் டெஸ்ட் மேட்ச்சில் இந்திய அணி சார்பாக இரட்டை சதம் பதித்த முதல் இந்திய வீரர் ஆவார்.

விஜய் மஞ்சரேகர் 118 ரன்கள்(20 பவுண்டரிகள்)

அறிமுக வீரர் ஏ ஜி கிரிபால் சிங் 100 *நாட் அவுட்.

இந்திய அணி 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 498 ரன்களுடன் டிக்ளர் செய்தனர்.

நியூசிலாந்து அணி துவக்க பவுலர் ஜான்னி ஹய்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அவர்கள் பேட்டிங்கில் ஜான் குய் 102 ரன்கள் எடுத்தார்.

டோனி மச்கிப்பன் 59 ரன்கள்

ஜான்ரீட் 54 ரன்கள்

நியூசிலாந்து அணி ஆல் அவுட் 326.

இந்திய அணியின் சூழல் பந்து பவுலர் சுபாஷ் குப்தே 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பலோவ் ஆன் பெற்ற நியூசிலாந்து அணி துவக்க வீரர் பெர்ட் சட்க்லிஃப் மிகவும் அருமையான ஆட்டத்தை வெளிப் படுத்தினார். இவர் எடுத்த ரன்கள் 137 *நாட் அவுட். அடித்தது பவுண்டரிகள் 15.

45* நாட் அவுட் ரன்கள் எடுத்த ஜான் ரீடூடன் 108 ரன்கள் பார்ட்னர் ஷிப்பில் சேர்த்தார் பெர்ட் சட்க்லிஃப்.

போதிய நேரம் இன்மை காரணத்தால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 212/2 என்று இருக்கும் பொழுது டெஸ்ட் டிரா ஆனது.

இரண்டு இன்னிங்சிலும் ஒரே வீரரின் தலா 105 ரன்கள் கண்ட ஸ்ரீலங்கா, இந்தியாவின் முதல் டெஸ்ட் (1982)...

03. இன்று வரை முறியடிக்கப்படாத மெட்ராஸ் டெஸ்ட் சாதனை - இலங்கை vs இந்தியா (1982)

ஸ்ரீலங்கா, இந்திய அணிகளின் முதன் முதல்டெஸ்ட். எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைப்பெற்றது. 17- 22. செப்டம்பர் 1982.

முதலில் பேட்டிங் ஆடிய ஸ்ரீலங்கா அணி 11 ரன்களுக்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது.ராய் டயஸ், துலீப் மெண்டிஸ் ஜோடி நன்றாக விளையாடி அணிக்கு ரன்களை அதிகப்படுத்தினர்.

153 ரன்கள் பார்ட்னார் ஷிப்.

ராய் டயஸ் 60 ரன்கள்.

ஒரு சிக்ஸர், 17 பவுண்டரிகள் அடித்து 123 பந்துக்கள் எதிர்கொண்ட துலீப் மெண்டிஸ் எடுத்த ரன்கள் 105.

ரஞ்சன் மதுகல்லே 46, சோம சந்திரா டி சில்வா 49 ரன்கள்

ஸ்ரீலங்கா அணி ஆல்அவுட் 346 ரன்கள்.

இந்திய பவுலர்கள்

திலிப் தோஷி 5, கபில் தேவ் 3, மதன் லால் 2 விக்கெட்டுக்கள்.

இந்திய அணி வீரர்கள் சிறப்பான பேட்டிங் ஆடினார்கள்.

கேப்டன் சுனில் கவாஸ்கர் 155ரன்கள்.

சந்தீப் பட்டில் 114 *நாட் அவுட்

திலீப் வெங்சர்க்கார் 90

அருண் லால் 63

இந்திய அணி ஸ்கோர் 566 / 6 டிக்ளர்.

ஆஷாந்த டி மெல், சோமசந்திரா டிசில்வா தலா 2 விக்கெட்டுக்கள்.

இரண்டாவது இன்னிங்சில் மறுபடியும் ராய் டயஸ், துலீப் மெண்டிஸ் ஜோடி மிகவும் சிறப்பாக ஆடினார்கள்.

110 ரன்கள் சேர்த்தனர்.

ராய் டயஸ் 108 பந்துக்கள் எதிர்கொண்டு 18 பவுண்டரிகள் சப்போர்டுடன் 97ரன்கள் குவித்தார்.

துலீப் மெண்டிஸ் இந்த இன்னிங்சிலும் அதே 105 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் இவர் ஒருவர் மட்டும் தான் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து ஒரே மாதிரியான ஸ்கோர்( identical score in both innings) எடுத்தவர் என்ற பெருமைக்கு உரியவர்ஆவார்.

அனுர ரணசிங்கே 77

சோமசந்திரா டி சில்வா46

ஸ்ரீ லங்கா அணி394 ரன்கள் ஆல் அவுட்.

இந்திய பவுலர்கள்

கபில் தேவ் 5, திலிப் தோஷி 3, ராகேஷ் ஷுக்லா 2 விக்கெட்டுக்கள்.

வெற்றி இலக்கு 175 ரன்களை எதிர்கொண்டு இந்திய அணி பயணித்தது.

ஸ்கோர் 135/7என்ற நிலையில் டெஸ்ட் டிராவாகியது.

இதையும் படியுங்கள்:
1948ஆம் ஆண்டு... அதிக எண்ணிக்கை (12) அறிமுக வீரர்கள் கண்ட டெஸ்ட் மேட்ச்!
India-Pakistan held October 16, 1952

சந்தீப் பட்டில் 46, கபில்தேவ் 30, யாஷ்பால் ஷர்மா 31* நாட் அவுட் ரன்கள். ஸ்ரீலங்கா அணி பவுலிங் ஆஷாந்தடிமெல் 5 விக்கெட்டுக்கள்.

முடிவு: 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்தியா, ஆட்ட நேர முடிவில் 135/7 என இருந்தபோது போட்டி சமனில் (Draw) முடிந்தது.

logo
Kalki Online
kalkionline.com