ஃபிஃபா உலகக்கோப்பை 2026: கால்பந்து ரசிகர்களின் மனதை வென்ற 10 அசத்தல் வீரர்கள்!

மெஸ்ஸி, எம்பாப்பே முதல் ரோட்ரி வரை உலகக்கோப்பையில் முத்திரை பதித்த நட்சத்திரங்களின் தொகுப்பு!
உலகக்கோப்பை வீரர்கள் - Top Football Players
உலகக்கோப்பை வீரர்கள் - Top Football Players
Updated on

2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் 48 நாடுகள், 1248 வீரர்கள் மத்தியில் ரசிகர்களை கவர்ந்த 10 வீரர்களின் சாதனைகள் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. எம்பாப்பே தொடர்ந்து இரண்டாவது கோல்டன் பூட், மெஸ்ஸியின் இறுதி உலகக் கோப்பை பயணம், ஸ்பெயினின் இரண்டாவது பட்டம், ரோட்ரி, உனாய் சைமன், ஹாலண்ட், குபார்சி, கேப் வெர்டே வீரர்களின் சாதனைகள் விரிவாக சொல்லப்படுகின்றன.

லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவுக்கு எதிரான 32 சுற்றுப்போட்டியில், கேப் வெர்டே- அணியின் சிட்னி லோபஸ் கப்ரால் (Sidny Lopes Cabral) ஆட்டம் தொடங்கிய 103-வது நிமிடத்தில் அடித்த அதிர்ச்சியூட்டும் கர்லிங் ஷாட் (curling shot) உலகக் கோப்பையின் மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கிலியான் எம்பாப்பே (Kylian Mbappé) உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர். பிரான்ஸ் தேசிய அணியின் கேப்டனாக இருக்கும் இவர், நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை தட்டிச் சென்றார்.

இவர், 8 போட்டியில், 10 கோல் அடித்தார். 4 அசிஸ்ட்களை செய்தார்.இதனையடுத்து அதிக கோல் அடித்தவருக்கான 'கோல்டன் பூட்' விருதை தொடர்ந்து 2வது முறையாக (2022, 2026) தட்டிச் சென்றார். இவ்விருதை இரண்டு முறை பெற்ற முதல் வீரர் இவரே.

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lional Messi) அர்ஜென்டினா அணிக்காக ஃபிஃபா உலகக் கோப்பை 2026-ல் விளையாடி தனது உலகக் கோப்பை பயணத்தை நிறைவு செய்துள்ளார். உலகக்கோப்பை 2026 ல் அர்ஜென்டினா அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். இத்தொடரில் மொத்தம் 8 கோல்களை அடித்து, 4 கோல்களுக்கு உதவினார் (Assists). இத்தொடரின் முடிவில் வழங்கப்படும் ஃபிஃபாவின் 'படைப்பாற்றல் விருது' (Creativity Award) தரவரிசையில் பிரான்ஸின் மைக்கல் ஒலிஸேவிடம் வெறும் 0.03 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார்

உலகக் கோப்பை வரலாற்றில் மாற்று வீரராக களமிறங்கி நாக்அவுட் சுற்றில் இரண்டு முறை அணியின் வெற்றிக்கான கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஸ்பெயின் அணி வீரர் மிகேல் மெரினோ (Mikel Merino) பெற்றுள்ளார்.

உலகக்கோப்பை வீரர்கள் - Top Football Players
உலகக்கோப்பை வீரர்கள் - Top Football PlayersAI Image

நடப்பு ஃபிபா உலகக் கோப்பை காலிறுதி சுற்று பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் இடையே பரபரப்பான கட்டத்தை எட்டி, போட்டி சமநிலையில் நீடித்தது. ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு செல்லும் எனத் தோன்றிய வேளையில், மாற்று வீரராக களமிறங்கிய மிகேல் மெரினோ 88-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலைப் பதிவு செய்து 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.

2026 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில், ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை 1–0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, தங்களின் இரண்டாவது உலகக் கோப்பையை வென்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகக்கோப்பை கால்பந்து: ரசிகர்களாகிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 8 முக்கிய உண்மைகள்!
உலகக்கோப்பை வீரர்கள் - Top Football Players

போட்டி மிகவும் கடினமாகவும், இரு அணிகளும் தாக்குதலில் பலவீனமாகவும் இருந்த நிலையில், கூடுதல் நேரத்தில் (Extra Time) மாற்று வீரராக வந்த ஃபெரான் டோரஸ் (Ferran Torres) ஸ்பெயின் வெற்றிக்கான அந்த ஒற்றை கோலை அடித்தார். இந்த கோல், ஸ்பெயினுக்கு உலகக் கோப்பை பட்டத்தை உறுதிசெய்தது. இந்த கோலே ஸ்பெயின், 2-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவியது.

23 வது உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணியின் 19 வயதான பாவ் குபார்சி( Pau Cubarsi), 2026 பிபா உலகக் கோப்பை தொடரின் 'சிறந்த இளம் வீரர்' விருதை வென்றுள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் 'சிறந்த இளம் வீரர்' விருதை வென்ற மிகவும் இளம் வீரர் இவரே. உலகக் கோப்பையில் 3 ஆட்டங்களில் வெறும் 5 தவறான பாஸ்களை மட்டுமே செய்துள்ளார். குபார்சி, மொத்தம் 294 பாஸ்களில் 289 பாஸ்களை 98.3% என்ற நம்ப முடியாத துல்லிய விகிதத்துடன் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

2026 பிஃபா உலகக் கோப்பை தொடரில் உருகுவே அணிக்கு எதிராக, கேப் வெர்டே வீரர் கெவின் பினா (Kevin Pina) 30.8 மீட்டர் தூரத்திலிருந்து ஒரு நேர்த்தியான கோலை அடித்து உலகக் கோப்பையின் மிக நீண்ட தூர கோலாகப் பதிவு செய்தார். வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக கின்னஸ் உலக சாதனை படைத்த மிக நீண்ட தூர கோல் (96.01 மீட்டர் / 105 கெஜம்) டாம் கிங் (Tom King) என்பவரால் 2021-ல் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2026 உலகக் கோப்பையில் ரோட்ரி (Rodri )ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டனாக 753 முறை 94 சதவிகித துல்லியத்துடன் இந்த உலகக் கோப்பையில் பந்தை பாஸ் (Pass) செய்திருக்கிறார். பந்தை 910 முறை தொட்டிருக்கிறார். 1083 முறை அழுத்தம் கொடுத்தல், பந்தைத் தடுத்தல், பாஸ் செய்தல் என தொடர் முழுவதும் சிறப்பாக பங்காற்றி சாதனை படைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
எதுவும் நிரந்தரமில்லை!- உலகக்கோப்பை கால்பந்து நாயகர்களின் கண்ணீர் மல்க வைக்கும் வாழ்க்கை பாடங்கள்!
உலகக்கோப்பை வீரர்கள் - Top Football Players

அதிலும் 116 முறை இறுதிப்போட்டியில் ரோட்ரி பந்தை தொட்டிருந்ததோடு, 26 முறை பந்தை எதிரணி வீரரிடம் இருந்து மீட்டிருந்தார். அவர் கோல் எதுவும் அடிக்கவில்லை என்றாலும், இதன் காரணமாகவே அவருக்கு நடப்பாண்டு உலகக் கோப்பை போட்டியில் தங்கப் பந்து வழங்கப்பட்டது.

இந்த உலகக்கோப்பையில் எட்டு போட்டிகளில் ஒரு கோல் மட்டும் விட்டுக் கொடுத்த ஸ்பெயினின் கோல் கீப்பர் உனாய் சைமன் (Unai Simon) கோல்டன் கிளவ் விருதை வென்றார். சைமன் ஏழு போட்டிகளில் கோல்கள் விட்டுக் கொடுக்கவே இல்லை. காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணிக்கு எதிராக மட்டும் ஒரே ஒரு கோலை விட்டுக் கொடுத்திருந்தார்.

கடந்த இரண்டு உலகக் கோப்பைகளிலும் ஸ்பெயின் கோல்கீப்பர் சிமோன் தொடர்ச்சியாக 519 நிமிடங்கள் கோல் வாங்காமல் இருந்துள்ளார். அதாவது, இந்தக் காலகட்டத்தில் எந்த எதிரணியும் அவருக்கு எதிராக கோல் அடிக்கவில்லை.

நடப்பு உலகக் கோப்பையில் நாக்-அவுட் சுற்றில், பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நார்வே அணி தனது வரலாற்றில் முதல் முறையாக உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. இந்த வரலாற்று வெற்றிக்குக் காரணம், எர்லிங் ஹாலண்டின் (Erling Haaland) இரண்டு பிரம்மாண்ட கோல்கள். ஆட்டம் முழுவதும் ஹாலண்ட் பந்தை அதிகம் தொடவே இல்லை. பிரேசில் பாக்ஸிற்குள் வெறும் நான்கு முறை மட்டுமே பந்தை தொட்டிருக்கிறார்.

ஆனால், அந்த சில தொடுதல்களே ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. 79-வது நிமிடம் வரை கோலின்றி இழுபறியாகச் சென்ற ஆட்டத்தில், ஒரு அருமையான ஹெட்டர் மூலம் முதல் கோல் அடித்து மௌனத்தைக் கலைத்தார் ஹாலண்ட்.

அடுத்த 11 நிமிடங்களில், பாக்ஸிற்கு வெளியே இருந்து அவர் அடித்த ஒரு புல்லட் ஷாட், கோல் வலையைத் துளைத்தது. 12 முறை கோல் அடிக்கும் முயற்சியில் 7 கோல்களை நடப்பு உலகக் கோப்பையில் பதிவு செய்துள்ளார் ஹாலண்ட்.

இந்தத் தொகுப்பை வாசிப்பதன் மூலம் 2026 உலகக்கோப்பைத் தொடரின் முக்கிய தருணங்கள், சிறந்த வீரர்களின் தனிநபர் சாதனைகள் மற்றும் ஆட்டத்தின் போக்கை மாற்றிய கோல்கள் குறித்த முழுமையான புரிதலையும் சுவாரஸ்யமான கால்பந்து தகவல்களையும் நீங்கள் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com