உலகக்கோப்பை கால்பந்து வரலாறு... யாரும் அறியாத 8 விசித்திரமான உண்மைகள்!

FIFA World Cup facts, - கால்பந்து வரலாறு
FIFA World Cup facts, - கால்பந்து வரலாறு
Updated on

இதுவரை 22 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்துள்ளது. அவற்றில் நிகழ்ந்த சில (கால்பந்து வரலாறு) சுவாரஸ்யமான விஷயங்களின் தொகுப்பு இங்கே ...

உலகக் கோப்பை வரலாற்றில் 1970 மற்றும் 2002 ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி அந்த இரு உலகக் கோப்பைகளிலும் ஓர் ஆட்டத்தில் கூட தோற்கவில்லை . இதேபோல் 1930 - ல் சாம்பியன் பட்டம் வென்ற உருகுவேயும்,1938 -ல் கோப்பையை வென்ற இத்தாலியும் ஓர் ஆட்டத்தில் கூட தோற்கவில்லை.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டு நிமிட நேரம் மட்டுமே களத்தில் இறங்கி ஆடியவர் என்ற பெருமை ஒரே ஒரு வீரருக்கு மட்டுமே உண்டு. அவர் தான் அர்ஜென்டினா அணியைச் சேர்ந்த மார்சிலோ டிரோபியான். இவர் 1986 ம் ஆண்டு மெக்சிகோ உலகக் கோப்பை போட்டியில் மேற்கு ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்கி இரண்டு நிமிடங்கள் மட்டுமே விளையாடினார்.

மரியோ ஜார்ஜ் லோபோ ஜகல்லோ (Mário Jorge Lobo Zagallo, 1931 - 2024) என்பவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார். கால்பந்து வரலாற்றில் உலகக் கோப்பையை நான்கு முறை வென்ற ஒரே நபர் என்ற பெருமைக்குரியவர். இவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் நான்கு அணிகளுக்கு பயிற்சியாளராய் இருந்துள்ளார். அந்த அணிகள் பிரேசில், குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

1994 ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியைத் பார்ப்பதற்கு பரீட்சைகளைத் தள்ளி வைக்கவேண்டும் என்று பத்தாம் வகுப்பு மாணவர்கள் பங்களாதேஷ் தேர்வு அதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்தார்கள். அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளாமல் தேர்வு வைத்தார்கள். 100 பேர் பரீட்சை எழுத வேண்டிய இடத்தில் 12 பேர்தான் பரீட்சை எழுத வந்தார்கள் அதிலும் 7 பேர் ஒரு வார்த்தை கூட எழுதாமல் ஃபுட்பால் படம் வரைந்து வைத்த விட்டு எழுந்து போனார்களாம்.

1938 ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பிரேசிலுக்கு எதிரான முக்கியமான அரையிறுதிப் போட்டியில் பெனால்டி கிக் அடிக்கும்போது, இத்தாலிய கால்பந்து நட்சத்திரமான கியூசெப்பே மியாசாவின் கால்சட்டையின் எலாஸ்டிக் அறுந்து, அவரது கால்சட்டை கணுக்கால் வரை இறங்கியது.

அவர் நிற்காமல், ஒரு கையால் கால்சட்டையின் இடுப்புப் பட்டையைப் பிடித்துக்கொண்டு, பந்தை பிரேசில் கோல்கீப்பரை நோக்கி வேகமாக உதைத்தார். அந்தச் சூழ்நிலையைக் கண்டு கோல்கீப்பர் மிகவும் சத்தமாகச் சிரித்ததால் பந்தைக் காப்பாற்ற முடியவில்லை. இதன் மூலம் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இத்தாலியின் இடத்தை அவர் உறுதி செய்தார்.

இதையும் படியுங்கள்:
"அப்படியே ராகுல் டிராவிட் தான்..." – மகாராஜா டி20 தொடரில் கலக்கிய மகன் சமித் டிராவிட்..!
FIFA World Cup facts, - கால்பந்து வரலாறு

1954 ஃபிஃபா உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில், ஸ்பெயின் மற்றும் துருக்கி அணிகள் மோதிய ஆட்டங்கள் கால்பந்து வரலாற்றில் மிகவும் விசித்திரமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. மாட்ரிட்டில் இரு அணிகளும் ஒட்டுமொத்த கோல்களில் சமநிலையில் இருந்ததால், ரோம் நகரில் மூன்றாவது ப்ளே-ஆஃப் (Play-off) போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டமும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.பெனால்டி ஷூட் அவுட் முறை அப்போது இல்லாததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க நாணயச் சுழற்சி (டாஸ்) முறை பயன்படுத்தப்பட்டது.

ஸ்டேடியத்தில் பணிபுரிந்த 14 வயது சிறுவன் ஒருவனை கிண்ணத்தில் இரு அணிகளின் பெயரை எழுதி போட்டு ஒரு பெயரை எடுக்கச் சொன்னார்கள். அவன் குலுக்கல் முறையில் துருக்கியின் பெயரைத் தேர்ந்தெடுத்தான். இதன் மூலம், போட்டியில் மொத்தம் அதிக கோல்கள் அடித்திருந்தும் ஸ்பெயின் வெளியேறியது, துருக்கி தனது முதல் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது.

FIFA World Cup facts, - கால்பந்து வரலாறு
FIFA World Cup facts, - கால்பந்து வரலாறுAI Image

பொதுவாக எந்த ஒரு கால்பந்து போட்டியும் மைதானத்தில் கார்னர் கொடிகள் இல்லாத (Corner flags missing) நிலையில் நடைபெறாது. ஆனால், கார்னர் கொடிகள் இல்லாமல் இறுதிப் போட்டி நடைபெற்றது .1966 பிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup) கால்பந்து இறுதிப் போட்டி. லண்டன் வெம்பிளி (Wembley) மைதானத்தில் நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில், இங்கிலாந்து மற்றும் மேற்கு ஜெர்மனி அணிகள் மோதின. போட்டியின் தொடக்கத்திற்கு முன், கார்னர் கொடிகள் (Corner flags) திருடுபோனதால் கொடிகள் இன்றி இப்போட்டி நடைபெற்றது.

1930 உலகக் கோப்பையின் போது அமெரிக்கா - அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான கடுமையான அரையிறுதிப் போட்டியின் போது, காயமடைந்த அமெரிக்க வீரர் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக , அமெரிக்காவின் பயிற்சியாளரும் பிசியோ தெரபிஸ்டுமான ஜாக் கோல் (Jock Coll), ஆடுகளத்திற்குள் விரைந்தார்.

அப்போது அவர் தடுக்கி விழுந்ததில், தனது சட்டைப்பையில் வைத்திருந்த குளோரோஃபார்ம் புட்டி உடைந்து, அதிலிருந்து வெளியான கடுமையான ஆவியை சுவாசித்தார். அந்த ஆவி அவரைத் தாக்கியதால், அணியின் மருத்துவ ஊழியர்கள் தங்களது சொந்தப் பயிற்சியாளருக்கே சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:
கிறிஸ்டியானோ ரொனால்டோவால் முடியாதது, எம்பாப்பேயிற்கு சாத்தியம்: கால்பந்து உலகில் புதிய ராஜா!
FIFA World Cup facts, - கால்பந்து வரலாறு

இந்தத் தொகுப்பை வாசிப்பதன் மூலம், நீங்கள் உலகக்கோப்பை கால்பந்தின் வெறும் புள்ளி விவரங்களை மட்டும் தெரிந்துகொள்ளாமல், இதுவரை எங்கும் பேசப்படாத அதன் வேடிக்கையான மற்றும் வியப்பூட்டும் உண்மையான பக்கங்களை உணர்ந்து, உங்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு கால்பந்து நிபுணராக வலம் வர முடியும்.

logo
Kalki Online
kalkionline.com