

2026 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 1248 வீரர்கள் விளையாடினார்கள்.அதில் 310 பேர் சொந்த நாட்டை விட்டு விட்டு பிற நாடுகளுக்கு விளையாடினார்கள். அதில் குரோவாசியா நாட்டு அணிக்காக மட்டும் அதிகபட்சமாக 25 வெளிநாட்டு வீரர்கள் களம் கண்டனர். அடுத்ததாக மெக்சிகோ அணிக்காக 20 பேர் விளையாடினார்கள். இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக பிரெஞ்சு நாட்டில் பிறந்த 99 விளையாட்டு வீரர்கள் விளையாடினார்கள். அதில் 23 பேர் மட்டுமே தனது சொந்த நாட்டிற்காக விளையாடினார்கள்.
உலகக்கோப்பை சாதனைகள்:
தென் ஆப்ரிக்கா, பிரேசில், கொலம்பியா, பனாமா, ஆஸ்திரியா, சுவீடன், செக் குடியரசு, சவூதி அரேபியா எனும் 8 நாடுகள் மட்டுமே எந்த நாட்டின் வீரர்களையும் கடன் வாங்காமல். முழுக்க முழுக்க தனது சொந்த மண்ணில் பிறந்த வீரர்களை மட்டுமே பயன்படுத்தியது.
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தென் கொரியா 'ஆசியாவின் புலி' என்ற அடைமொழியுடன் களம் கண்டது. 'ஆசியாவின் சிங்கங்கள் ' என்ற அடைமொழியுடன் களம் கண்ட அணி எது தெரியுமா? ஈராக் அணிதான்.
முதல் உலகக் கோப்பை நடைபெற்ற 1930லிருந்து 1960களின் இறுதிவரை கறுப்பு ஷூக்களையே வீரர்கள் முதன்மையாகப் பயன்படுத்தினார்கள். 1970களில் வெள்ளை, வெளிர் நிறத்திலான ஷூக்கள் அறிமுகமாயின. 1990களில் கால்பந்து ஷூக்களின் புரட்சிக் காலம். 1998 உலகக் கோப்பையில் பிரேசில் வீரர் ரொனால்டோ நசாரியோ வெள்ளி நிறத்தில் நீல நிறக் கோடுகள் வரையப்பட்ட ஷூவை அணிந்து விளையாடினார்.
அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, ‘ஃபேஷன் ஸ்டேட்டஸ்’ ஆனது. அதைத் தொடர்ந்து ஆரஞ்சு, பச்சை, நியான் போன்ற நிறங்களில் ஷூக்கள் பிரபலமாகின. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த உலகக் கோப்பையில் பல அணி வீரர்கள், முதல் முறையாக‘பிங்க் ஷூ’ அணிந்து விளையாடினார்கள்.
லயோனல் மெஸ்ஸி,தொழில்முறை கால்பந்து சாதனைகளில் மிக உயர்ந்த இடத்தில் திகழும் வகையில், நம்பமுடியாத கோல் அடிக்கும் சாதனைகள், கிளப் சாதனைகள் மற்றும் உலகக் கோப்பை வெற்றிகள் என40-க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ கின்னஸ் உலக சாதனைப் பட்டங்களைத் தன்வசம் கொண்டுள்ளார்.
அதில் குறிப்பாக ஃபிஃபா 2026 உலகக் கோப்பையில் ஆஸ்திரியாவுக்கு எதிரான ஜூன் 17 அன்று நடந்த போட்டியில் மட்டுமே ஒரே நாளில் 4 புதிய கின்னஸ் உலக சாதனைகளை படைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
உலகக் கோப்பை அரங்கில் 28 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தான் விளையாடிய உலகக் கோப்பை போட்டிகளில் 18 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். உலகக் கோப்பை மைதானங்களில் மொத்தம் 2,489 நிமிடங்கள் விளையாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் கே பிரிவுக்கான லீக் ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக போர்ச்சுகல் களம் கண்டது. இப்போட்டி தொடங்கிய ஆறாவது நிமிடத்திலேயே ரொனால்டோ ஒரு கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலையை தேடித் தந்தார்.
இந்த கோலின் மூலம், கால்பந்து வரலாற்றிலேயே 6 வெவ்வேறு உலகக்கோப்பைத் தொடர்களில் கோல் அடித்த உலகின் முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை 41 வயதான ரொனால்டோ தன்வசப் படுத்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக 2006, 2010, 2014, 2018 மற்றும் 2022 ஆகிய ஐந்து உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையை அவர் ஏற்கனவே தன் வசம் வைத்திருந்தார்.
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக 2026 உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸி [Lionel Messi] (அர்ஜென்டினா), கைலியன் எம்பாப்பே [Kylian Mbappe] (பிரான்ஸ்) மற்றும் எர்லிங் ஹாலண்ட் [Erling Haaland] (நார்வே) ஆகியோர் தலா 7 கோல்கள் அடித்து கோல்டன் பூட் [Golden Boot] பந்தயத்தில் முன்னிலையில் இருந்தனர். இறுதியில் 10 கோல்களை அடித்த எம்பாப்வே கோல்டன் புட் பெற்றார்.
கால்பந்து உலகக் கோப்பையில் 3,000-ஆவது கோல் அடித்தவராக ஆர்ஜென்டீன இளம் வீரர் என்ஜோ ஃபெர்னான்டஸ் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஆர்ஜென்டீன அணி எகிப்து அணியை 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றது.
கடைசி 15 நிமிஷங்களில் 3 கோல்கள் அடித்த ஆர்ஜென்டீனா த்ரில் வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் 90 நிமிஷங்களில் இரு அணிகளுமே 2-2 என சமநிலையில் இருந்தது. பின்னர், ஸ்டாப்பேஜ் நேரத்தில் 90+2ஆவது நிமிஷத்தில் லொடாரோ மாட்ரினெஸ் அடித்த பந்தை என்ஜோ ஃபெர்னான்டஸ் தனது தலையினால் அசத்தலான கோல் அடித்தார்.
உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று போட்டிகள் (நாக்-அவுட் சுற்றுகள்), 3-வது சுற்று போட்டிகள் முடிந்து, காலிறுதி போட்டிகள் நடந்தன. இதில், 4 அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு .அர்ஜென்டினா, பிரான்ஸ், ஸ்பெயின் , இங்கிலாந்து அணிகள் முன்னேறின.
இதன் மூலம் கால்பந்து தரவரிசைப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்திருக்கும் அணிகள், முதல்முறையாக ஒரே நேரத்தில் உலகக்கோப்பையின் அரையிறுதிக்கு தகுதிபெற்று வரலாறு படைத்தது. பிபா தரவரிசையில் பிரான்ஸ் முதலிடத்திலும், ஸ்பெயின் 2வது இடத்திலும், அர்ஜென்டினா 3வது இடத்திலும், இங்கிலாந்து 4வது இடத்திலும் இருந்தது.
2024 மார்ச் முதல் இதுவரை ஆடியுள்ள 37 போட்டிகளில் ஸ்பெயின் அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. நேஷன்ஸ் லீக், யூரோ கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர் என்று தொடர்ந்து வெற்றிக்கு மேல் வெற்றியை பெற்று வருகிறது.
இதற்கு முக்கிய காரணமானவர் பயிற்சியாளர் லூயிஸ் டி லா புவென்டே (Luis de la Fuente). முன்னாள் கால்பந்து வீரனான இவர் தனது அமைதியான மற்றும் நவீன கால உத்திகள் மூலம் ஸ்பெயின் தேசிய அணியை உலக அரங்கில் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். இந்த உலகக் கோப்பையில் அவர் பங்கேற்றபோது அவரின் வயது 65 என்பது குறிப்பிடத்தக்கது.