வயது 40 ஆகி விட்டதா ? அப்ப இதை படிங்க முதல்ல.....!

வயது 40 ஆகி விட்டதா ? அப்ப இதை படிங்க முதல்ல.....!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on
  • 40 வயதிற்கு பின் ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் சருமம், கூந்தல் எனஎல்லாமுமே மாறுபடும். கூந்தல் வளர்ச்சி இன்னும் அதிகமாக பாதிக்கப்படும்.

  • 40 வயதிற்கு மேல் கூந்தலை கவனமாக பராமரிக்க வேண்டும்.

  • 40 வயதிற்கு பின் ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் இளமையாக இருந்த போதுஇருந்த கூந்தலின் பளபளப்பு, போஷாக்கு இப்போது கிடைக்காது. அதற்கு நீங்கள்செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்களை பார்க்கலாம்.

  • பழைய சிறிய பிளாஸ்டிக் சீப்பு உபயோகித்தால் அதனை இனி தொடாதீர்கள்.

  • நல்ல தரமான பெரிய பற்கள் கொண்ட சீப்பினால் சீவும்போது ரத்த ஓட்டம்தூண்டப்படுகின்றன. இதனைக் கொண்டு சீவும்போது கூந்தலும் பளபளப்பாகும்.

  • அடிக்கடி தலைக்கு குளிப்பதால் இயற்கை எண்ணெய் சுரப்பது தடைபடும். இதனால் அதிக முடி உதிர்தல் பொடுகு ஆகியவை உண்டாகும்.

  • ஆகவே தலைக்கு குளிப்பதற்கு பதிலாக ட்ரை ஷாம்பு இப்போது கடைகளில்கிடைக்கும். அதனை வாங்கி ஸ்ப்ரே செய்தால் கூந்தல் தலைக்கு குளித்ததுபோலவே அடர்த்தியாக காணப்படும். ஸ்கால்ப்பில் பாதிக்காது.

  • ஷவரில் அதிக நேரம் நின்று தலைக்கு குளிக்கும்போது கூந்தல் அதிகம் உடையவாய்ப்புகள் உண்டு. அதோடு முடிக் கற்றைகளும் பலமிழக்கும். ஆகவே அதிகநேரம் ஷவரில் குளிப்பதை தவிருங்கள்.

  • கூந்தல் பலம் பெற ஆர்கானிக் கெரட்டின் கண்டிஷனர் பயன்படுத்தலாம்.இந்த சத்துக்கள் எல்லாம் கூந்தலின் வளர்ச்சிக்கு தேவையானவை.

  • 40 களில் இவற்றிற்கு முக்கியதுவம் கொடுங்கள். புரதம்- மீன், நட்ஸ், பீன்ஸ் ஜிங்க் – இறைச்சி, பீன்ஸ், இரும்பு – கீரை, பேரிச்சம்பழம், உலர் பழங்கள். மீன், பயோடின்- முட்டை, ராஸ் பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி, செலினியம் – முட்டை மஞ்சள் கரு, பிரேசில்நட்ஸ் இந்த சத்துக்கள் எல்லாம் கூந்தலின் வளர்ச்சிக்கு தேவையானவை.

  • தயிரில் ஊற வைத்த வெந்தயமும் கூந்தலுக்கு நல்லது செய்யும்.நட்ஸ், பேரீச்சம்பழம், மீன் மற்றும் வைட்டமின் பி அதிகமுள்ள உணவுகளை தினமும்உணவில் சேர்த்துக் கொள்வது நீளமான கூந்தலுக்கு வழி செய்யும்.

  • கூந்தலுக்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டியதும் அவசியம். எந்நேரமும்கூந்தலைக் கோதிக் கொண்டும், வாரிக் கொண்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும்போது பின்னல் போட்டு தொந்தரவு செய்யாமல் விட்டுவிட வேண்டும்.

  • கூந்தல் வளர்ச்சியில் உணவுக்கு மிக முக்கிய பங்குண்டு. கறிவேப்பிலையும்கீரைகளும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

logo
Kalki Online
kalkionline.com