கால்பந்து மைதானங்களை அதிரவைத்த உலகக் கோப்பை பாடல்கள்: ஷகீரா முதல் 2026 'டாய் டாய்' வரை!

FIFA World Cup tracks - கால்பந்து பாடல்கள்
FIFA World Cup tracks - கால்பந்து பாடல்கள்
Updated on

கால்பந்து பாடல்கள் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் தோன்றின. மைதானங்களில் வீரர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தவும், எதிரணி வீரர்களை சோர்வடையச் செய்யவும் ரசிகர்களால் உருவாக்கப் பட்டவையே இந்தப் பாடல்கள் 1880-களில் எளிமையான கோஷங்களாக தொடங்கியவை, பின்னர் பிரபலமான இசை, பாடல்களின் மெட்டுகளுடன் இணைக்கப்பட்டன. 1960-களில் பாப் இசையின் தாக்கம் கால்பந்து மைதானங்களுக்குள் நுழைந்தது. துள்ளல் கால்பந்து பாடல்களும் அறிமுகமானது.

1930 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் தொடங்கின. ஆனால், 1990ஆம் ஆண்டுக்குப் பிறகே அனைத்துலகக் கால்பந்துச் சம்மேளனமான FIFA இதற்கான அதிகாரபூர்வ பாடல்களை வெளியிடத் தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த உலகளாவிய தொடருக்குத் தனிப் பாடல்கள் உருவாயின.

உலக அளவில் சாதனை படைத்த புகழ்பெற்ற கால்பந்து பாடல்கள்:

கடந்த காலங்களின் மிகவும் பிரபலமான உலகக் கோப்பை பாடல்களின் தொகுப்பு:

1990 (இத்தாலி): "அன் எஸ்டேட் இத்தாலினா" - கியானா நன்னினி, எடோர்டோ பென்னாடோ

1994 (அமெரிக்கா): "குளோரிலாண்ட்" - டரில் ஹால்.

1998 (பிரான்ஸ்): "தி கப் ஆஃப் லைஃப்" - ரிக்கி மார்ட்டின்

2002 (கொரியா/ஜப்பான்): "பூம்" - அனஸ்டேசியா

2006 (ஜெர்மனி): "தி டைம் ஆஃப் அவர் லைவ்ஸ்" - இல் டிவோ, டோனி பிராக்ஸ்டன்

2010 (தென் ஆப்பிரிக்கா): "வாக்கா வாக்கா " - ஷகீரா

2014 (பிரேசில்): "வி ஆர் ஒன் " - பிட்புல், ஜெனிபர் லோபஸ், கிளாடியா லீட்

2018 (ரஷ்யா): "லிவ் இட் அப்" - நிக்கி ஜாம், வில் ஸ்மித், ஈரா இஸ்டிரெபி

2022 (கத்தார்): "ஹய்யா ஹய்யா " - டிரினிடாட் கார்டோனா, டேவிட், ஆயிஷா இதில் சில உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றன. ரிக்கி மார்ட்டின் (Ricky Martin) ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பைக்காகப் பாடிய மிகப்பிரபலமான பாடல் "தி கப் ஆஃப் லைஃப்" (The Cup of Life / La Copa de la Vida) ஆகும். 1998 பிரான்ஸ் உலகக் கோப்பைக்காக உருவாக்கப்பட்ட இது துள்ளல் இசைப்பாடல், உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.1998 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து (FIFA World Cup France '98) பாடலில் வரும் "கோ, கோ, கோ! அலே, அலே, அலே!" (Go, go, go! Ale, ale, ale!) என்ற வரிகள் மிகவும் பிரபலம்.

இதையும் படியுங்கள்:
வலுவான இந்திய அணி வளர்ந்து வரும் அயர்லாந்திடம் சரணடைந்தது ஏன்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
FIFA World Cup tracks - கால்பந்து பாடல்கள்

உலகெங்கிலும் உள்ள 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இசை தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய இரு மொழிகளிலும் இப்பாடல் வெளியானது.இப்பாடல் ரிக்கி மார்ட்டினை அனைத்துலக நட்சத்திரமாக மாற்றியது.

ஷகீரா மற்றும் ஜான் ஹில் இணைந்து எழுதிய வாகா வாகா (Waka Waka) பாடலானது, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2010 ஃபிஃபா உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வப் பாடலாக, 7 மே 2010 அன்று எபிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது . ஷகீரா, ஃபிரெஷ்லிகிரவுண்ட் (Shakira ft. Freshlyground )2010 தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு பாடிய 'வாகா வாகா' பாடல் YouTube இல் 3.9 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற வரலாற்றின் மிக வெற்றிகரமான உலகக் கோப்பை பாடலானது. ஆப்பிரிக்க மண்ணில் நடந்த முதல் போட்டியின் உணர்வை இப்பாடல் பிரதிபலித்தது.

FIFA World Cup tracks - கால்பந்து பாடல்கள்
FIFA World Cup tracks - கால்பந்து பாடல்கள்

கவர்ச்சிகரமான பாப் இசையையும் பாரம்பரிய ஆப்பிரிக்க இசையையும் இது இணைத்தது. ஆப்பிரிக்காவின் கலாச்சாரத்தை உலகிற்கு பறைசாற்றிய இந்த பாடல், உலகின் மிகப்பெரிய கால்பந்து கீதமாக மாறியது.

பிட்புல், ஜெனிபர் லோபஸ், கிளாடியா லைட் (Pitbull ft. Jennifer Lopez & Claudia Leitte) 2014 ம் ஆண்டு பாடிய' வி ஆர் ஒன் - ஒலே ஒலா (We Are One - Ole Ola) 'பாடல் பிரேசிலின் திருவிழா கொண்டாட்டத்தை உலகிற்குக் கொண்டுவந்தது.அதே ஆண்டில் வெளியான ஷகீராவின் "லா லா லா" பாடலிலிருந்து இதற்குப் பலத்த போட்டி இருந்தது.எனினும் 2014 போட்டிகளின் அதிகாரபூர்வ பாடலாகவே அது விளங்கியது.

2026 உலகக் கோப்பையை அதிரவைக்கும் புதிய கால்பந்து பாடல்கள்:

ஃபிஃபா 2026 அதிகாரப்பூர்வ பாடல் 'Dai Dai'உலகப் புகழ்பெற்ற பாடகி ஷகிரா மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த பர்னா பாய் இணைந்து 'Dai Dai' என்ற பாடலைப் பாடியுள்ளனர். அஃப்ரோபீட்ஸ் மற்றும் லத்தீன் இசையின் கலவையான இப்பாடல், "தோல்வியே வலிமை" என்ற கருத்தை மையமாக வைத்து உருவானது. கால்பந்து புகழ் ஷகிரா, 2010 'வாக்கா வாக்கா' (Waka Waka) மற்றும் 2014 'லாலாலா' (La La La) பாடல்களுக்குப் பிறகு பாடிய மூன்றாவது உலகக் கோப்பை பாடல் இதுவாகும்.

இதையும் படியுங்கள்:
பெண் வீராங்கனைகள் பிரசவத்திற்கு பிறகும் விளையாடலாம்: ஐசிசி வெளியிட்ட அசத்தல் 6R திட்டம்!
FIFA World Cup tracks - கால்பந்து பாடல்கள்

'டாய்..டாய்' என்ற இத்தாலிய சொற்றொடருக்கு 'வாருங்கள் அல்லது முன்னேறிச் செல்லுங்கள்' என அர்த்தம். இது, ஊக்கம் அளிக்க பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) வெளியிட்ட செய்தியில்,'ஷகிரா, பர்னா பாய் இணைந்து உலகின் இசை ஆற்றலை ஒன்றிணைத்துள்ளனர். கால்பந்து கலாசாரம், ஒற்றுமையின் துடிப்பான கொண்டாட்டமாக 'டாய்... டாய்' பாடல் அமைந்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் குழந்தைகளின் கல்வி நிதிக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றை மாற்றியமைத்த மறக்க முடியாத இசையின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வதுடன், சர்வதேச அளவில் கால்பந்து கலாசாரம் எவ்வாறு மக்களின் ஒற்றுமையைக் கொண்டாடுகிறது என்ற அரிய ஞானத்தையும், 2026-ன் புதிய உலகளாவிய இசைப் போக்கைப் பற்றிய தெளிவான பார்வையும் உங்களுக்குக் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com