

டோக்கியோ, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, கேப்டன் ஹர்மன் பிரீத் சிங் தலைமையில், ஜெர்மனி உள்ளிட்ட 16 அணிகளுடன் உலகக்கோப்பை பட்டத்தை நோக்கி புறப்படுகிறது. டி பிரிவில் உள்ள இந்தியா, ஆகஸ்ட் 15ல் வேல்ஸை எதிர்கொள்கிறது.
1974ல் நான்காவது இடம் பெற்ற பெண்கள் அணி, கேப்டன் சலீமா டே டெ வழிநடத்தலில் முதல் பட்டத்தை குறியாகக் கொண்டு களமிறங்குகிறது.
16ஆவது உலகக்கோப்பை ஆண்கள், பெண்கள் ஹாக்கி திருவிழா பெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் ஆகஸ்ட் (15 - 30) வரை நடக்க இருக்கிறது. இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கியில் ஒலிம்பிக்கில் 8 முறை தங்கம் வென்ற இந்திய அணி உலகக்கோப்பையில் பெரிதாக சாதிக்கவில்லை.
1971 உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் மூன்றாவது இடமும், 1973 உலகக்கோப்பையில் இரண்டாவது இடமும் பெற்றது. 1975ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியால் அதற்குப் பின் சோபிக்க முடியவில்லை.
2018 ல் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் ஆறாவது இடமும் 2023 ல் ஒன்பதாவது இடமும் இந்திய அணி பிடித்தது. 2021ல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும், 2024ல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலும் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்திய பயிற்சியாளரின் கருத்து:
உலகக் கோப்பையை இந்தியா வென்று 51 ஆண்டுகளான நிலையில் இந்த முறை சாதிக்க தயாராக உள்ளோம். ட்ராக் - பிளிக் ஸ்பெஷலிஸ்ட் கேப்டன் ஹர்மன் பிரீத் சிங் அனுபவ மந்தீப் சிங், ஜூக்ராஜ் உள்ள நிலையில், "வீரர்கள் பதட்டமான கட்டத்தில் கூலாக செயல்பட்டால் வெற்றியை வசப்படுத்தலாம்" என இந்திய பயிற்சியாளர் கிரெய்க் புல்டன் கூறியுள்ளார்.
ஆண்கள் ஹாக்கி பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, இந்தியா ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள் நான்கு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்றுள்ளது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 தனது முதல் சவாலில் வேல்ஸ் அணியை இந்தியா ஆம்ஸ்டல்வீன் வாகனர் அரங்கில் எதிர்கொள்கிறது.
இந்திய அணி உலகக்கோப்பையில் சாதிக்க முடியாததற்கு பல காரணங்கள் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜூட் பெலிக்ஸ் கூறியுள்ளார். இயற்கையான புல் களத்தில் இருந்து திடீரென செயற்கை இழையிலான களத்திற்கு மாற்றியதால் இந்திய வீரர்களின் ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஹாக்கி விளையாட்டில் ஆக்ரோசமாக சாகசம் நிகழ்த்தி வரும் இந்திய வீரர்கள் செயற்கை புற்களத்தில் கொஞ்சம் தடுமாறினர். ஆனால் ஐரோப்பிய அணியினரோ தங்களை விரைவாக பக்குவப்படுத்திக் கொண்டதால் சாதிக்க முடிந்தது. இந்திய அணியின் தற்காப்பு பகுதியும் பலவீனமாக பல போட்டிகளில் இருந்ததால் கடைசி தருணங்களில் எதிரணிகள் எளிதாக கோலடித்து வெற்றி பெற்றன.
இந்திய அணி பெரும்பாலும் `பெனால்டி கார்னர்` கோல் அடிப்பதையே சார்ந்து இருப்பதால் இந்திய அணியால் சாதிக்க முடியவில்லை. ஃபீல்டு கோல் அடித்து அசத்தும் மற்ற அணிகளை போல இந்திய மத்திய களவீரர்கள் சாமர்த்தியமாக பந்தை பெற்று முன்கள வீரர்களுக்கு கோல் அடிக்க உதவவேண்டும்.
உலகக்கோப்பை தொடரில் தற்காப்பு பகுதியில் பலமாக இருந்தால் சாதிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தோல்விக்கான காரணங்களை பட்டியலிடுகிறார்.
பெண்கள் அணி
இந்திய ஹாக்கி பெண்கள் அணி சலீமா டே டெ தலைமையில் முதல் முறையாக உலகக்கோப்பை வெல்லும் ஆசையில் களமிறங்குகிறது. 1974 ஆம் ஆண்டு இந்திய பெண்கள் ஹாக்கி அணி உலகக்கோப்பை தொடரில் நான்காவது இடம் பெற்றதே சிறந்த செயல்பாடாக இருந்தது. பெண்கள் அணியின் கேப்டன் சலீமா கூறும்போது உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்ப்போம் என்று கூறியுள்ளார்.
இந்திய ஹாக்கி பெண்கள் அணி கேப்டன் கூறியதுபோல உலகக் கோப்பை தொடரில் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் 51 ஆண்டு ஏக்கத்தை தீர்க்கவேண்டும் என்பது அனைத்து இந்திய எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தக் கட்டுரையைப் படிப்பதன் மூலம் 2026 உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் வெற்றி வாய்ப்புகள், கடந்து வந்த வரலாற்றுச் சவால்கள் மற்றும் தற்போதைய அணியின் பலம்-பலவீனங்கள் குறித்த துல்லியமான பார்வையை வாசகர்கள் பெற முடியும்.