0 கோல்... 0 அசிஸ்ட்... ஆனாலும் ஸ்பெயின் கேப்டன் ரோட்ரிக்கு தங்கப் பந்து கிடைத்தது எப்படி?

மெஸ்ஸியை முந்தி உலகக்கோப்பையின் சிறந்த வீரர் விருதை ரோட்ரி தட்ட தூக்கிய பின்னணி!
தங்கப் பந்து - Rodri Spain Captain
தங்கப் பந்து - Rodri Spain Captain
Updated on

2026 பிஃபா உலகக்கோப்பை இறுதியில் அர்ஜென்டினாவை 1-0 என வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது. தொடரில் ஒரே ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்த ஸ்பெயின் அணியின் இந்த சாதனையில் டிஃபென்சிவ் மிட்ஃபீல்டர் ரோட்ரியின் பங்கு முக்கியமானது. ரோட்ரி ஃபிஃபா பவர் ரேங்கிங் தடுப்பாட்டக்காரர்களில் 8.23 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

கோல், அசிஸ்ட் எதுவும் இல்லாதபோதும், 753 துல்லியமான பாஸ், 910 பந்துத் தொடுதல், 1083 அழுத்தம், 49 டூயல்ஸ் வெற்றி, 83,802 மீட்டர் ஓட்டம் போன்ற புள்ளி விவரங்கள் அவரை “Midfield Masterful” என ஃபிஃபா தொழில்நுட்பக் குழுவால் தங்கப் பந்து விருதுக்கு தேர்வு செய்ய வைத்தன. இவர் இத்தொடர் முழுவதும் தான் பங்கேற்ற போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

ஒரு அசிஸ்ட் கூட செய்யவில்லை. எதிரணியினரை கோல் அடிக்க விடாமல் தடுப்பதும், சக அணி வீரர்களுக்கு எதிரணியின் வீரர்களை கடந்து பந்தை பாஸ் செய்யும் 'டிஃபென்சிவ் மிட் ஃபீல்டர்' வேலையை ரோட்ரி கணக்கச்சிதமாக செய்துள்ளார்.

அதனால்தான் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ரோட்ரிக்கு ஃபிஃபா தொழில் நுட்பக் குழு“ மிட்ஃபீல்ட் மாஸ்டர்ஃபுல் - Midfield Masterful” என வர்ணித்து தங்கப்பந்து விருதை ரோட்ரிக்கு வழங்கியுள்ளது. கோல்கள் அடிப்படையில் தங்கப் பந்து விருது வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரோட்ரி 753 முறை 94 சதவிகித துல்லியத்துடன் இந்த உலகக் கோப்பையில் பந்தை பாஸ் (Pass) செய்திருக்கிறார். பந்தை 910 முறை தொட்டிருக்கிறார். 1083 முறை அழுத்தம் கொடுத்தல், பந்தைத் தடுத்தல், பாஸ் செய்தல் என தொடர் முழுவதும் சிறப்பாக பங்காற்றி சாதனை படைத்துள்ளார். அதிலும் 116 முறை இறுதிப்போட்டியில் ரோட்ரி பந்தை தொட்டிருந்ததோடு, 26 முறை பந்தை எதிரணி வீரரிடம் இருந்து மீட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்:
ஃபிஃபா உலகக் கோப்பையை உலுக்கிய அரசியல் சதி: முசோலினி முதல் டிரம்ப் வரை அம்பலமாகும் ரகசியங்கள்!
தங்கப் பந்து - Rodri Spain Captain

அதில் 18 முறை முழுமையாகவும், 4 முறை இறுதிப் போட்டியில் பந்தை மீட்டிருந்தார். இரு அணியினருக்கு சாதகமாக இருக்கும் பந்தை தன் வசப்படுத்தும் டூயல்சை (Duels) தரையில் 38 டூயல்ஸையும், காற்றில் (aerial) 11 முறை என மொத்தம் ரோட்ரி 49 முறை வென்றிருந்தார்.

உடல் மற்றும் திறன் அடிப்படையில் ரோட்ரி உலகக் கோப்பை முழுவதும் 83,802 மீட்டர் ஓடி இருக்கிறார். கோல் அடிக்கும் வாய்ப்பை (Chances) ரோட்ரி 11 முறை மட்டுமே உருவாக்கியுள்ளார். இது அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியை விட குறைவுதான்.

ரோட்ரி மிட்ஃபீல்டிலும் டிஃபென்ஸிலும் தன்னைச் சுற்றி சூழ்நிலையை கட்டுக்குள் வைத்திருந்தார். இதனால் அவர் கோல் அடிக்காததை பிஃபா கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

தங்கப் பந்து - Rodri Spain Captain
தங்கப் பந்து - Rodri Spain Captain

ரோட்ரி இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் ஒருமுறை மட்டுமே ஆட்டநாயகன் விருது பெற்றிருக்கிறார். மெஸ்ஸி ஐந்து முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். ஆனாலும் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி வீரரான ரோட்ரிக்கு தங்கப் பந்து விருது வழங்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சி அடைந்த இவ்வேளையில் விளையாட்டிலும் அந்த தொழில்நுட்பத்தை வைத்து ஒவ்வொரு வீரரின் செயல்பாடுகளை பிஃபா அருமையாக கண்காணித்துள்ளது.

அந்த வகையில் தங்கப் பந்து விருது வீரரின் செயல்பாட்டை அடிப்படையாக வைத்து ஒரு கோல் கூட அடிக்காத ஒரு அசிஸ்ட் கூட செய்யாத ஸ்பெயின் வீரர் ரோட்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஸ்பெயின் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
உலகை ஆளும் கால்பந்து: எளிய விதிகளும் பலரும் அறியாத சுவாரசிய வரலாறும்!
தங்கப் பந்து - Rodri Spain Captain

கால்பந்து போட்டிகளில் புள்ளிவிவரங்கள் (Data & Analytics) எவ்வாறு ஒரு வீரரின் உண்மையான திறமையைக் கணித்து விருதுகளைத் தீர்மானிக்கின்றன என்பதைத் தெளிவாக அறிந்துகொண்டு, விளையாட்டுப் பகுப்பாய்வில் புதிய தெளிவைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com