உலகக் கோப்பை ஹாக்கி: பெல்ஜியத்திடம் வீழ்ந்த இந்தியா; 8-வது இடத்துடன் நிறைவு!

கடைசி விநாடி வரை போராடியும் பெனால்டி ஷூட்-அவுட்டில் தோல்வியைத் தழுவிய இந்திய ஹாக்கி அணி.
இந்திய ஹாக்கி - Hockey World Cup
men indian hockey team - இந்திய ஹாக்கி
Updated on

லகக் கோப்பை ஹாக்கி தொடரில் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய ஆடவர் அணி, 7-வது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியத்தை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நிர்ணய நேரத்தில் இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்த நிலையில், பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்தியா 3-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரை 8-வது இடத்துடன் நிறைவு செய்தது.

பெல்ஜியத்தின் வாவ்ரே நகரில் நடைபெற்ற இந்த 7-வது மற்றும் 8-வது இடத்துக்கான ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் அபிஷேக் இந்தியாவுக்கு முதல் கோலைப் பெற்றுத் தந்தார். ஆனால் சொந்த மண்ணில் விளையாடிய பெல்ஜியம் அடுத்தடுத்து அழுத்தம் கொடுத்து, ரோமன் டுவெகோட் மற்றும் ஹியூகோ லபோஷேர் ஆகியோரின் கோல்கள் மூலம் 2-1 என முன்னிலை பெற்றது.

இந்திய கோல் கீப்பர் சூரஜ் கர்கேரா முக்கியமான பல சேவ்களை செய்து அணியை போட்டியில் நிலை நிறுத்தினார். பின்னர் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் தனது சிறப்பான பெனால்டி கார்னர் மூலம் 31-வது நிமிடத்தில் கோல் அடித்து 2-2 என சமன் செய்தார். இதனால் ஆட்டம் மீண்டும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. நான்காவது கால் பகுதியில் நிக்கோலஸ் டி கெர்பல் பெல்ஜியத்துக்கு மீண்டும் முன்னிலை கொடுத்தார்.

இந்தியா கடைசி வரை போராடினாலும் நேரம் வேகமாக நகர்ந்தது. வெற்றியை நோக்கி பெல்ஜியம் நகர்ந்துகொண்டிருந்த நிலையில், ஆட்டம் முடிவடைய வெறும் 26 விநாடிகள் மட்டுமே இருந்தபோது இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. அந்த வாய்ப்பை ஹர்மன்ப்ரீத் சிங் அற்புதமாக கோலாக்கி 3-3 என சமநிலையை ஏற்படுத்தினார். இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் நடத்தப்பட்டது.

இந்தப் போட்டியில் ஹர்மன்ப்ரீத் சிங்கின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இரண்டு கோல்களை அடித்த அவர், அணியை மீண்டும் மீண்டும் ஆட்டத்துக்குள் கொண்டு வந்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் அவரது மொத்த கோல் எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது. இந்திய அணியின் தாக்குதல் ஆட்டத்தில் அவரது அனுபவமும் தலைமைத்துவமும் முக்கிய பங்கு வகித்தது.

அதே நேரத்தில், ஷூட்-அவுட்டில் கிடைத்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த முடியாதது இந்திய அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், வலுவான பெல்ஜியம் அணிக்கு எதிராக கடைசி வரை சமமாகப் போராடியது குறிப்பிடத்தக்க சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டம் வீரர்களின் மனஉறுதியையும் போராட்ட குணத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியது.

இதையும் படியுங்கள்:
உலகக்கோப்பை ஹாக்கி 2026: 51 ஆண்டு கால கனவை நனவாக்குமா இந்தியா?
இந்திய ஹாக்கி - Hockey World Cup

ஷூட்-அவுட்டில் இந்தியாவுக்கு ஷிலானந்த் லக்ரா, தில்ப்ரீத் சிங், அபிஷேக் ஆகியோர் கோல் அடித்தனர். ஆனால் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் சுக்ஜீத் சிங்கின் முயற்சிகளை பெல்ஜியம் கோல் கீப்பர் வின்சென்ட் வனாஷ் தடுத்தார். பெல்ஜியம் தரப்பில் அலெக்சாண்டர் ஹென்றிக்ஸ், ரோமன் டுவெகோட் உள்ளிட்டோர் வாய்ப்புகளை கோல்களாக மாற்றினர்.

இறுதியில் பெல்ஜியம் 4-3 என்ற கணக்கில் ஷூட்-அவுட்டில் வெற்றி பெற்று 7-வது இடத்தைப் பிடித்தது. இந்தியா 8-வது இடத்தில் தொடரை நிறைவு செய்தது.

இந்த போட்டியின் மற்றொரு முக்கிய அம்சம் இந்திய அணியின் பெனால்டி கார்னர் வாய்ப்புகளாகும்.. ஆட்டம் முழுவதும் பெல்ஜியம் பாதுகாப்பு வீரர்கள் இந்தியாவின் தாக்குதல்களை கட்டுப் படுத்த முயன்றனர்... இருப்பினும் இந்திய வீரர்கள் தொடர்ந்து கோல் வாய்ப்புகளை உருவாக்கினர்.

இந்திய ஹாக்கி - Hockey World Cup
women indian hockey team

குறிப்பாக கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங்கின் பெனால்டி கார்னர் முயற்சிகள் அணிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தன. அவர் அழுத்தமான சூழ்நிலையிலும் நிதானமாக விளையாடி இரண்டு முக்கியமான கோல்களை பதிவு செய்தார்.

கடைசி நிமிடங்களில் இந்திய அணி காட்டிய வேகம் ரசிகர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது.. வெற்றி கிடைக்காமல் போனாலும் ஆட்டத்தின் இறுதிவரை போராடிய விதம் இந்திய அணியின் மன உறுதியை வெளிப்படுத்தியது.. குறிப்பாக போட்டி முடிவதற்கு சில விநாடிகளே இருந்த நிலையில் சமன் கோலை அடித்தது இந்திய வீரர்கள் எளிதில் விட்டுக்கொடுக்கவில்லை என்பதைக் காட்டியது.

இந்த உலகக் கோப்பை அனுபவம் இந்திய அணிக்கு பல முக்கியமான பாடங்களை வழங்கி உள்ளது. சர்வதேச அளவில் வலுவான அணிகளுக்கு எதிராக விளையாடும் போது சிறிய தவறுகள் கூட முடிவை மாற்றிவிடும். குறிப்பாக ஷூட் - அவுட் போன்ற அழுத்தமான தருணங்களில் வீரர்களின் மனநிலையும் துல்லியமும் மிகவும் முக்கியம்.

இளம் வீரர்களுக்கு கிடைத்த இந்த அனுபவம் எதிர் காலப் போட்டிகளில் நிச்சயம் உதவும்.

இந்திய ஹாக்கி ரசிகர்கள் பதக்கத்தை எதிர்பார்த்திருந்த நிலையில் எட்டாவது இடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.. இருப்பினும் அடுத்தடுத்த சர்வதேச தொடர்களில் இந்த அணியின் திறமைகள் மேலும் மேம்படும் என்று நம்பிக்கை உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஒரு காலத்தில் எப்படி இருந்த டீம்...இன்னைக்கு அவங்க நிலைமைய பார்த்தீங்களா?
இந்திய ஹாக்கி - Hockey World Cup

தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு பலவீனங்களை சரி செய்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவதே இந்த அணியின் அடுத்த இலக்காக இருக்கும்.

பதக்கப் போட்டியில் இடம்பெற முடியாத நிலையிலும், கடைசி நொடிவரை இந்திய வீரர்கள் போராடியது பாராட்டுக்குரியது. குறிப்பாக 26 விநாடிகள் மட்டுமே இருந்தபோது ஹர்மன்ப்ரீத் அடித்த சமன் கோல் ஆட்டத்தை பரபரப்பான ஷூட்-அவுட்டுக்கு எடுத்துச் சென்றது. வெற்றி கைவிட்டாலும், போராட்ட குணத்தை வெளிப்படுத்திய இந்திய அணி அடுத்த போட்டிகளில் வலுவாக திரும்ப வேண்டிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நடைப்பெற்ற உலகக் கோப்பை பெண்கள் பிரிவில் இந்திய அணி ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஐந்தாவது இடம் பெற்று சாதனை படைத்தது.

logo
Kalki Online
kalkionline.com