

சர்வதேச அளவில் கால்பந்தில் முதல் 10 இடம் பிடித்த கால்பந்து வீரர்கள்:
23 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா ஆகிய 4 அணிகளும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
கால்பந்து ஜுரம் அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ள நிலையில் தொழில்முறை கூட்டமைப்பான பிஎஃப்எஸ்ஏ சர்வதேச அளவில் டாப் 10 பட்டியலில் இடம் பெற்ற கால்பந்து வீரர்களை வரிசைப்படுத்தி உள்ளது. யார் யார் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை இப்பதிவில் தெளிவாக காண்போம்.
1. பிரான்ஸின் நட்சத்திர வீரரான கிலியின் எம்பாப்பே முதலிடம் பிடித்துள்ளார். ரியல் மேட்ரிக் கிளப் அணிக்காக 2024லிருந்து 5 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 39 போட்டிகளில் 43 கோல்கள் , 8 அசிஸ்ட் செய்து லா லிகா தொடரின் முதல் சீசனிலேயே முத்திரை பதித்தவர்.
2. பாபிலோனா அணியால் 6 வயதில் கண்டறியப்பட்டு, 15 வயதில் அறிமுகம் செய்யப்பட்டு , பாலன் டி ஆர் விருது பட்டியலில் ரன்னர் இடத்தை பிடித்து 3ஆண்டுகளாக உச்சகட்ட பார்மில் இருக்கும் ஸ்பெயின் வீரரான லாமின் யமால் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
3. ஆர்சனல் அணியால் உடல் தகுதி இல்லை என்று சிறுவயதில் நிராகரிக்கப்பட்டு, பண்டஸ்லிகா தொடரில் பேயர்ன்முனிச் அணிக்காக விளையாடி, இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் ஆல் டைம் லீடிங் கோல் ஸ்கோரராக இருக்கும் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் இப்படியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
4. 2014 ஆம் ஆண்டு விளையாடத் தொடங்கி ஃபிபா உலகக்கோப்பை, சாம்பியன் லீக் தொடர், பாலன் டி ஆர் விருதுகளை வென்ற பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பெல் 4ம் இடம் பிடித்துள்ளார். 33 கோல் 15 அசிஸ்ட் செய்து கடந்த சீசனில் ஜொலித்த இவர், பிஎஸ்ஜி அணியில் இணைந்து முழுமையாக ஃபார்வர்ட் பொசிஷனில் விளையாடி வருகிறார்.
5. பிரேசில், பார்சிலோனா அணியின் முக்கிய வீரராகவும், கடந்த சீசனில் 20 போட்டிகளில் விளையாடி 11 லா லிகா கோல்களை அடித்து தற்போது பார்சிலோனா கிளப் பணிக்காக விளையாடி வரும் பிரேசில் அணி வீரரான ராஃபின்ஹா இப்படியலில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளார்.
6. வேகத்திற்கும், ட்ரிபிளிங்கிற்கும் புகழ்பெற்று, ரியல் மேட்ரிக் அணிக்காக 18 வயதில் ஒப்பந்தம் செய்யப்பட்ட, சாம்பியன்ஸ் லீக் லா லிகா கோப்பைகளை வென்ற பிரேசில் அணியின் ஆபத்தான வீரரான வினிஷியஸ் ஜூனியர் ஆறாவது இடம் பிடித்துள்ளார்.
7. களத்தில் ஆட்டத்தை பரபரப்பாக்கி, ட்ரிபிளிங் செய்வதில் கில்லாடியான பிஎஸ்ஜி அணியின் அபாயகரமான விங்கராக இருக்கும், ஜார்ஜியா தேசிய அணிக்காக விளையாடி தன் நாட்டு அணியை தனி ஆளாக உயர்த்தி பிடித்து வரும் ஜார்ஜியா நாட்டின் கிவிச்சா க்வரத்சேலியா இப்படியலில் ஏழாம் இடம் பிடித்துள்ளார்.
8. ஜெர்மனியின் புண்டஸ்லிகா தொடரில் பேயர்ன் முனிச் அணிக்காக விளையாடி வருபவரும், 29 போட்டிகளில் 13 கோல்கள் மற்றும் 18 அசிஸ்ட் செய்து இந்த சீசனில் சிறப்பிடம் பிடித்தவராக இருக்கும் பிரான்ஸ் அணியின் மைக்கேல் ஒலிசே இப்படியலில் எட்டாம் இடம் பிடித்துள்ளார்.
9. ஸ்பெயின் அணியின் மிட் ஃபீல்டராகவும் பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வரும் பெட்ரி இப்பட்டியலில் 9வது இடம் பிடித்துள்ளார். 150 போட்டி களில் இளம் வயதில் பார்சிலோனா அணிக்காக விளையாடிய மெஸ்ஸியின் சாதனையை முறியடித்துள்ளார். மிட் ஃபீல்டரில் கட்டுப்பாடு செய்வதிலும், ட்ரிபிள் செய்து பாஸ் செய்வதிலும் இவரது ஆட்டம் தனித்தன்மை வாய்ந்தது.
10. 2022 ஆம் ஆண்டு முதல் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடி வருபவரும், 5 வயதிலேயே கால்பந்துக்குள் வந்தவரும், அதிவேகமாக சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் 30 கோல்களை அடித்து அசத்திய வரும், 48 போட்டிகளில் 55 கோல்களை அடித்து அசத்தியுள்ள நார்வே அணி வீரரான எர்லிங் ஹாலண்ட் 10வது இடம் பிடித்துள்ளார்.
உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரரான மெஸ்ஸி இப்பட்டியலில் 14வது இடத்திலும், ரொனால்டோ 15வது இடத்திலும் இருக்கின்றனர்.
இந்தத் தொகுப்பின் மூலம் சர்வதேச கால்பந்து அரங்கில் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் டாப் 10 நட்சத்திரங்களின் தற்போதைய புள்ளிவிவரங்கள் மற்றும் கிளப் ஒப்பந்தங்கள் குறித்த துல்லியமான தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற ஜாம்பவான்களை முந்தி சமகால இளம் வீரர்கள் எவ்வாறு உலகக் கால்பந்தை ஆதிக்கம் செலுத்து கிறார்கள் என்ற ஆழமான புரிதலை இது உங்களுக்கு வழங்கும்.