கிரிக்கெட் போட்டிகளில் ஐபிஎல் தொடருக்கு இருக்கும் ரசிகர்கள் வேறு எதற்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஒன்று.
பல ஆண்டுகளாக, இந்த அணி ஏலத்தில் சில வீரர்களுக்காகப் பெரும் தொகையைச் செலவிட்டது. யுவராஜ் சிங் (2014), தினேஷ் கார்த்திக் (2015) மற்றும் கிறிஸ் மோரிஸ் (2020). ஆனால், இந்த வீரர்கள் முதல் சீசனில் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால், அவர்களை இரண்டாவது சீசனுக்குத் தக்கவைத்துக் கொள்வதில்லை.
இருப்பினும், அணியின் ஏற்ற இறக்கமான செயல்பாடுகள் இருந்தபோதிலும், லீக்கில் ஒரே ஒரு அணிக்காக விளையாடிய வீரரான விராட் கோலி மீது இந்த அணி தொடர்ந்து நம்பிக்கை வைத்திருந்தது.
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது.
2025-ல், ஆர்சிபி 14 லீக் ஆட்டங்களில் ஒன்பதில் அபாரமாக வெற்றி பெற்று, நாக்-அவுட் சுற்றுகளில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி, தங்களின் முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது. அதாவது கடந்த 17 சீசன்களில் ஒருமுறை கூட அந்த அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாத நிலையில், நீண்ட வருட காத்திருப்புக்கு பிறகு 18-வது சீசனின் ஆர்சிபி அணி (RCB) முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இது, அணிக்கு வழிகாட்டியாக செயல்பட்ட கோலியின் அசைக்க முடியாத நம்பிக்கையை உண்மையாக்கியது.
அதனை தொடர்ந்து, ஆர்சிபியின் வெற்றிக்கொண்டாட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தபோது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியதுடன் ஆர்சிபி நிர்வாகம் மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தன.
இதனையடுத்து, RCB அணியின் உரிமையாளரான லண்டனை சேர்ந்த Diageo நிறுவனம் அணியை விற்க உள்ளதாக அறிவித்த நிலையில், பல முன்னனி தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், 2026ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் புதிய ஜெர்ஸியை RCB அணி அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த முறை கோப்பையை வென்றதால், தனது ஜெர்ஸியில் ஒரு ஸ்டார் சேர்த்துள்ளது. இது தொடர்பான காணொளியை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையிலான RCB அணியில் ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் வோக்ஸ், பிரெண்டன் மெக்கல்லம், மூன் அலி, டிம் சவுதி மற்றும் பார்த்திவ் படேல் போன்ற புகழ்பெற்ற வீரர்கள் உள்ளனர்.