பிரண்டையில் இவ்வளவு நன்மைகளா?

பிரண்டையில் இவ்வளவு நன்மைகளா?
Published on

இளம் பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை மாலைஇருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும். இப்படி ஒருமண்டலம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில்இணைந்து எலும்புகள் பலம்பெறும்.

பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல்பலம் பெறுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை தரும் .

நெய்விட்டு பிரண்டைத் தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வரவயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசி உண்டாகும்.

பிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்துச் சுண்டைக்காய் அளவு, தினந்தோறும் இரண்டு வேளை சாப்பிட ஆஸ்துமா குணமாகும்

பிரண்டை, நரம்புத் தளர்ச்சியைப் போக்குகிறது. ஆண்மையைப்பெருக்குகிறது. பசியைத் தூண்டிவிடுவதில் இதற்குத்தான் முதலிடம்.

பிரண்டைத் துவையல் மிகுந்த ருசியுள்ளது. இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும். செரிமானக் கோளாறைப் போக்கும். மலச்சிக்கலை நீக்கும். குடலில்புழு இருந்தால் அவற்றைக் கொல்லும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.

பிரண்டை உப்பை 2 - 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல்பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.

பிரண்டைத் தண்டுகளைச் சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்துக் கொதிக்கவைத்து ஒரு டம்ளர் குடித்தால் எலும்புகள் பலம் பெறும். முறிந்த எலும்பு விரைவில்கூடும். ஒரு மாதம் பிரண்டை ரசம் குடிக்கவேண்டும்.

உடலில்கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில்கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால்இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதயவால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடிசாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலிபோன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ளதேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்குகொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com