
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 15 பேர் கொண்ட மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்ததுள்ளது.
அந்த அணியில் 5 இந்திய டி20 அணி வீரர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அதே சமயம் ஐந்து வீரர்கள் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா, ரமன்தீப் சிங், விஜயகுமார் வைசாக், அவேஷ் கான் மற்றும் யாஷ் தயாள் ஆகிய ஐந்து பேரும் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் துணை கேப்டனாக அக்ஷர் பட்டேலும், முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனும் நியமிக்கப்பட்டுள்ளார்.
முகமது ஷமி கடைசியாக நவம்பர் 2023-ல் ஐசிசி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக இடம்பெற்றார், பின்னர் கணுக்கால் அறுவை சிகிச்சை மற்றும் முழங்கால் பிரச்சினைகளுக்குப் பிறகு அவர் அணியிலிருந்து வெளியேறினார். காயத்தில் இருந்து மீண்ட முகமது ஷமி 14 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.
ரிஷப் பந்த் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் அணியில் இடம்பெறவில்லை, சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் விக்கெட் கீப்பிங் பொறுப்புகளை ஏற்க உள்ளனர். சிட்னி டெஸ்டின் போது முதுகுவலியால் அவதிப்பட்ட ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததால் இங்கிலாந்து டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற பெரிய பெயர்களை விட்டுவிட முடிவு செய்ததால் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு சில கடினமான தேர்வுகளை மேற்கொண்டது. 5 டெஸ்ட்கள் அடங்கிய பார்டர்-கவாஸ்கர் டிராபிக்குப் பிறகு முழுமையாக குணமடைய, அவர்களுக்கு ஓய்வு அளிக்க தேர்வாளர்கள் முடிவு செய்ததாக ஒரு அறிக்கை கூறுகிறது.
ஜனவரி 22-ம்தேதி முதல் கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே மற்றும் மும்பையில் ஐந்து டி20 போட்டிகளில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் வருகிற 22-ந் தேதியும், 2-வது போட்டி சென்னையில் 25-ந் தேதியும், 3-வது போட்டி ராஜ்கோட்டில் 28-ந் தேதியும், 4-வது போட்டி புனேயில் 31-ந் தேதியும், 5-வது மற்றும் கடைசி போட்டி மும்பையில் பிப்ரவரி 2-ந் தேதியும் நடக்கிறது.
இந்தத் தொடரைத் தொடர்ந்து நாக்பூர், கட்டாக் மற்றும் அகமதாபாத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறும். ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2025 க்கு முன்னதாக இந்தியாவின் ஒரே ஒருநாள் போட்டிகள், பிப்ரவரி 19-ம்தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்க உள்ளது.
இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரெல், ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் (துணை கேப்டன்), ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்.