சோம்பேறித்தனத்திற்கு தங்கப்பதக்கம்! ஒலிம்பிக் வரலாற்றில் நடந்த விநோத கூத்துகள்!

குண்டான மனிதர்கள் குளத்தில் மிதக்கும் போட்டி முதல் தனியாக ஆடிய ஒத்திசைவு நீச்சல் வரை ஒரு சுவாரசிய பார்வை.
ஒலிம்பிக் விளையாட்டுகள் - Forgotten Olympic Sports
ஒலிம்பிக் விளையாட்டுகள் - Forgotten Olympic Sports
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

லிம்பிக் வரலாற்றில் இன்று மறக்கப்பட்டு போன இரண்டு விசித்திரமான ஒலிம்பிக் விளையாட்டுகள் பற்றி இந்த கட்டுரை பேசுகிறது. 1904ல் அறிமுகமான “பிளஞ்ச் ஃபார் டிஸ்டன்ஸ்” போட்டியில், வீரர்கள் கைகால்களை அசைக்காமல் தண்ணீரில் மிதந்து சென்ற தூரம் அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. குண்டானவர்களுக்கு சாதகமாக இருந்த இந்த போட்டி, காயங்கள் மற்றும் கேலிச் செய்திகளால் ஒரே முறை மட்டுமே நடத்தப்பட்டு நீக்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிகள் என்றாலே உலகத்தரம் வாய்ந்த அசாத்திய திறமைகளும், எல்லைகளைத் தொடும் ஓட்டப்பந்தயங்களும் தான் நம் நினைவுக்கு வரும்.

ஆனால், அதன் ஆரம்பக்கால வரலாற்றில், சிரிப்பை வரவழைக்கும் விதமான கேலியான விளையாட்டுகளும், ஆச்சரயத்தை வரவழைக்கும் விதமாக பல திகில் விளையாட்டுகளும் இருக்கத்தான் செய்தன. அதில் பல விளையாட்டுகள் ஆரம்பக்காலத்திலேயே நீக்கப்பட்டன என்பதும் குறிப்பிடவேண்டிய ஒன்று.

அப்படி திட்டமிடப்பட்டு, பிற்காலத்தில் நீக்கப்பட்ட இரு விளையாட்டுகள் குறித்து இப்போது பார்ப்போம்.

நீச்சல் அடிக்காமல் மிதந்து பதக்கம் வென்ற வினோத ஒலிம்பிக் விளையாட்டுகள்:

1904 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் அறிமுகமான "பிளஞ்ச் ஃபார் டிஸ்டன்ஸ்" (Plunge for Distance) என்ற விளையாட்டின் விதிமுறை மிகவும் விசித்திரமானதாக இருந்தது. ஒரு வீரர் மேடையில் இருந்து தண்ணீருக்குள் குதித்து, கை கால்களை அசைக்காமல் அப்படியே மிதக்க வேண்டும். நீச்சல் அடிக்காமல் 60 விநாடிக்குள் உந்தி அல்லது மிதந்து சென்று யார் அதிகம் தூரம் கடக்கிறாரோ அவரே வெற்றியாளர்.

இதையும் படியுங்கள்:
உலகை ஆளும் கால்பந்து: எளிய விதிகளும் பலரும் அறியாத சுவாரசிய வரலாறும்!
ஒலிம்பிக் விளையாட்டுகள் - Forgotten Olympic Sports

இதில் அமெரிக்காவின் வில்லியம் டிக்கி 62 அடி 6 அங்குலம் மிதந்து தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் வெற்றி பெற உடல் எடை அதிகமாக இருக்க வேண்டும் என்பதால், "குண்டான மனிதர்கள் குளத்தில் சோம்பேறித்தனமாக மிதக்கும் போட்டி" என்று அன்றைய செய்தித்தாள்கள் இதைக் கேலி செய்தன.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அப்போட்டி நடத்தப்பட்ட குளமானது ஒரு தற்காலிக ஏரியாகும். கை கால்களை அசைக்கக் கூடாது என்பதால் பல வீரர்கள் சிமெண்ட் சுவரில் போய் முட்டிக்கொண்டு காயப்பட்டனர். ஆகையால் ஒரே ஒருமுறை மட்டுமே ஒலிம்பிக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது.

ஒலிம்பிக் விளையாட்டுகள் - Forgotten Olympic Sports
ஒலிம்பிக் விளையாட்டுகள் - Forgotten Olympic SportsAI Image

தனிநபர் ஒத்திசைவு நீச்சல்: விமர்சனங்களால் நீக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டுகள்:

இதேபோல் மற்றொரு போட்டியும் ஒலிம்பிக் வரலாற்றில் இருந்ததை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அப்போட்டியின் பெயர் ஒத்திசைவு நீச்சல். "ஒத்திசைவு நீச்சல்" என்பது இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து தண்ணீரில் தங்களின் அசைவுகளை ஒரே சீராகச் செய்து முன்னேறுவதாகும். ஆனால், 1984 முதல் 1992 வரையிலான ஒலிம்பிக்கில் "தனிநபர் ஒத்திசைவு நீச்சல்" (Solo Synchronized Swimming) என்ற ஒரு விளையாட்டு நடத்தப்பட்டது. இப்போட்டியின் அர்த்தத்தையே யாராலும் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

"தனி ஒருவராக நீந்தும்போது, அவர் யாருடன் இணைந்து முன்னேற முடியும்?" என்ற கேள்வி எழுந்தது. அதற்கு "போட்டியிடும் வீரர்கள் பின்னணியில் ஒலிக்கும் இசையுடன் ஒத்து முன்னேற வேண்டும்" என்று ஒலிம்பிக் கமிட்டி விளக்கம் அளித்தது. அமெரிக்காவின் ட்ரேசி ரூயிஸ் போன்றவர்கள் இதில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தினாலும், இப்போட்டியின் விளக்கத்தையே யாராலும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏனெனில், இசைக்கு ஏற்றவாரு உடலை அசைக்க வேண்டுமென்றால், இது ஒருவகையான நடனம்தானே, இதற்கு ஏன் இப்படிபட்ட பெயர்? இதனை ஏன் நீரில் செய்ய வேண்டும் போன்ற விமர்சனங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து 1992ம் ஆண்டு இப்போட்டி நீக்கப்பட்டு, மீண்டும் ஜோடி போட்டிகளாகவே மாற்றினர்.

இதையும் படியுங்கள்:
ஒலிம்பிக் வரலாற்றின் கருப்புப் பக்கம்: 300 புறாக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விசித்திரக் கொடுமை!
ஒலிம்பிக் விளையாட்டுகள் - Forgotten Olympic Sports

இதுபோன்ற விசித்திரமான போட்டிகள், ஒலிம்பிக் வரலாற்றின் தொடக்கத்தில் கொண்டுவரப்பட்டு, பல விமர்சனங்களுக்கு உள்ளாகி நீக்கவும்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொகுப்பின் மூலம் ஒலிம்பிக் போட்டியின் உலகத்தரம் வாய்ந்த பிம்பத்திற்குப் பின்னால் இருக்கும் மறைக்கப்பட்ட வேடிக்கையான பக்கங்களையும், விளையாட்டு விதிகள் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன என்ற வரலாற்று அறிவையும் நீங்கள் முழுமையாகப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com