குழந்தை வளர்ப்பில் 10 தவறான மருத்துவ நம்பிக்கைகளை உடனே கைவிடுங்கள்!

குழந்தை எடை, பல் முளைக்கும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு தண்ணீர் முதல் கேரட் பார்வை வரை - ஆராய்ச்சியாளர்களின் உண்மை விளக்கம்!
Child care - Parenting - மருத்துவ நம்பிக்கைகள்
Child care - Parenting - மருத்துவ நம்பிக்கைகள்
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on: 
  • பிறந்த சில மாதங்களில் கைக் குழந்தைகள் எடை குறைவாக மெலிந்து இருந்தால் பெற்றோர் மிகவும் கவலைப்படுகிறார்கள். அதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாத படி ஆகிவிடுமோ, குழந்தையின் உடல் எடை வேகமாக அதிகரிக்கவில்லையே என்றும் கவலைப்படுகிறார்கள்.

    ஆனால், இதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவே அவசியம் இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதாவது இது உடல் ரீதியான ஒரு குறைபாடு இல்லை என்றும் வயது கூடக் கூட, அது சரியாகி விடும் என்கிறார்கள் இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

    இது பற்றி விஞ்ஞானிகள் மேலும் கூறுகையில், '9 மாதங்கள் வரையில் குழந்தையின் எடை அதிகரிப்பது சற்று குறைவாகவே இருக்கும். அதன் பிறகு வயதிற்கு ஏற்ப எடை அதிகரிக்க தொடங்கி 13 வயதை எட்டும் போது தேவையான அளவை எட்டிவிடுவார்கள்' என்கிறார்கள்.

  • குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது வயிற்றுப் போக்கு, காய்ச்சல், இழுப்பு, சொறி, கரப்பான் போன்றவை ஏற்படும் என்று ஒரு நம்பிக்கை நம்மிடையே பழங்காலமாக நிலவி வருகிறது. இது உண்மையா?

    இது பற்றி ஆய்வு மேற்கொண்ட பின்லாந்து நாட்டின் மருத்துவ குழு பல் முளைப்பதற்கும் குழந்தைகளுக்கு நோய்கள் வருவதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.

  • சிறு குழந்தைகளுக்கு திரவ உணவைத் தவிர திட உணவைத் தரக் கூடாது என்ற தவறான எண்ணம் பல பெற்றோர்களிடம் உள்ளது. இதுவும் தவறான கருத்து என்கிறார்கள். இதனால் குழந்தைகள் நோஞ்சானாக இருக்கின்றன. குழந்தைகளுக்கு பால் முக்கியமான ஒன்று தான். ஆனால், அதுவே முழுமையான உணவு கிடையாது. குழந்தைகளுக்கு முக்கிய தேவையான வைட்டமின் 'சி', 'டி'' மற்றும் இரும்புச் சத்தும் குறைவாகவே உள்ளது. ஆகவே குழந்தைகள் ஆறு மாதங்களைக் கடந்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக திட உணவை அவர்களுக்கு கொடுக்கலாம். ஒரு வயது நிரம்பிய பின்னர் குடும்பத்தில் மற்றவர்கள் சாப்பிட்டு வரும் அனைத்து உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இந்த சமயத்தில் குழந்தைகளுக்கு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், முட்டை, மாமிசம் போன்றவை தாரளமாக சேர்த்து கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.

  • வயிற்றுப் போக்கு இருந்தால் தண்ணீர் குடிக்க கொடுக்கக் கூடாது. வயிற்றுப்போக்கு அதிகரிக்கும் என்று ஒரு தவறான நம்பிக்கை பலரிடம் உள்ளது. ஆனால் அந்த மாதிரி சமயங்களில் தண்ணீர் கொடுக்க வேண்டும். அதுவே அவர்களின் உடலில் குறையும் நீர் சத்தை ஈடுகட்டி, உடலை தெம்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நீர் சத்து வற்றிப்போன குழந்தைகளுக்கு எலக்ட்ரோலைட் பானங்களை கொடுப்பதை விட ஆப்பிள் ஜூஸ் நீர் சேர்த்து கொடுப்பது மிகவும் நல்லது என்கிறார்கள் கனடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

Fever - மருத்துவ நம்பிக்கைகள்
Fever - மருத்துவ நம்பிக்கைகள்
  • நோய்களின் பாதிப்பின் போது மருந்து சாப்பிடுவதை விட ஊசி போட்டுக் கொள்வதே நல்லது என்று ஒரு கருத்து பலரிடம் உள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலை தவிர மற்ற நேரங்களில் வாய் மூலம் எடுத்துக் கொள்ளும் மருந்தே சிறந்தது என்கிறார்கள்.

  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் வருவது ஆபத்து என்ற நம்பிக்கையே பலரிடம் உள்ளது. அது தவறான கருத்து, உண்மையில் காய்ச்சல் ஒரு நோய் அல்ல. அது வேறு சில நோய்களின் முன் அறிவிப்பே. நோய்க்கிருமிகளை கொல்லவே சில நேரங்களில் காய்ச்சல் வருகிறது என்கிறார்கள் வல்லுனர்கள்.

  • வைட்டமின் மாத்திரைகளை சப்ளிமென்டாக எடுத்துக் கொள்ள அது உடலுக்கு ஊட்டம் அளிக்கும் என்று ஒரு கருத்து மக்களிடையே பரவலாக உள்ளது. டாக்டர்கள் சிபாரிசு இல்லாமல் அதிகப்படியாக வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு, சிறுநீரக கற்கள் உருவாகுதல் மற்றும் சிறுநீரக கோளாறு, தலைவலி, வாந்தி போன்றவை ஏற்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

  • கேரட் உண்பதால் பார்வைத் திறன் அதிகரிக்கும் என்ற பரவலான நம்பிக்கை உள்ளது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் சத்து உடலுக்குத் தேவையான வைட்டமின் A-வை வழங்குகிறது என்பது உண்மைதான். ஆனால், இது ஏற்கனவே உள்ள கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை போன்ற பார்வைக் கோளாறுகளை முழுமையாகக் குணப்படுத்தாது.

இதையும் படியுங்கள்:
காபி, டீ குடித்தால் குழந்தைகளுக்கு ரத்தசோகை வருமா? அதிர்ச்சி தகவல்கள்!
Child care - Parenting - மருத்துவ நம்பிக்கைகள்
  • கண்ணாடி அணியத் தொடங்கினால் கண்களின் இயல்பான பார்வைத் திறன் குறைந்துவிடும் என்று பலர் அஞ்சுகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தாகும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றால் மங்கலாகத் தெரியும் பிம்பங்களை விழித்திரையில் சரியாகக் குவியச் செய்ய மட்டுமே கண்ணாடிகள் பயன்படுகின்றன. குறிப்பாகக் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடிகளைத் தவறாமல் அணிவிப்பது அவர்களின் சீரான பார்வை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும்.

  • கணினி அல்லது மொபைல் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதால் சர்க்கரை நோயினால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு (Diabetic Retinopathy) உருவாகும் என்ற தவறான எண்ணம் உள்ளது. திரைகளை அதிக நேரம் பார்ப்பது கண் சோர்வு மற்றும் கண் வறட்சியை உண்டாக்கும். சர்க்கரை நோயினால் ஏற்படும் விழித்திரை ரத்த நாளப் பாதிப்பிற்கும் திரை பயன்பாட்டிற்கும் நேரடித் தொடர்பில்லை.

  • குறைந்த வெளிச்சத்தில் புத்தகம் வாசிப்பது பார்வையைப் நிரந்தரமாகப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால், மங்கலான வெளிச்சத்தில் படிப்பது தற்காலிகமான கண் அசதி மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். இதனால் பார்வைத்திறன் நிரந்தரமாகக் குறைவதில்லை. இருப்பினும், சௌகரியமான வாசிப்பிற்குப் போதிய வெளிச்சம் உள்ள சூழலே சிறந்தது.

இதையும் படியுங்கள்:
பெரியவர்களின் புகைப் பழக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் 8 ஆபத்துகள்!
Child care - Parenting - மருத்துவ நம்பிக்கைகள்
  • சளி, இருமல் ஏற்பட்டால் ஐஸ்க்ரீம் போன்ற குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து பலரிடம் உள்ளது. ஆனால் சாதாரண சளி என்பது வைரஸ் தொற்றால் ஏற்படுவதால் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது வைரஸ் பெருக்கத்தை அதிகரிக்கவோ, தொற்றை மோசமாக்கவோ செய்யாது என்கின்றனர்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com