இந்த 10 வகை உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வேண்டாத பிரச்னைகள் வந்து சேரும்!

Food
Food
Published on

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் சில வகை உணவுகள் வயிற்றுப் பகுதியில் உள்ள படலத்தை பாதிக்கும் என்பதால் அவை சத்தானதாகவே இருந்தாலும் அவசியம் தவிர்க்க வேண்டும். அத்தகைய 10 உணவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

1. காஃபி

காஃபி யில் உள்ள காஃபின்( Caffeine) உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வெறும் வயிற்றில் காபியை எடுத்துக் கொள்ளக் கூடாது. காஃபி-ஐ குடிக்கும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு குடிக்க வேண்டும்.

2. டீ

தேநீரிலும் Caffeine உள்ளதோடு, காஃபியை காட்டிலும் டீ இல் அதிக அளவு அமிலத்தன்மை உள்ளதால் வெறும் வயிற்றில் டீ குடிக்கக்கூடாது.

3. சோடா

சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால் அது வயிற்றில் உள்ள ஆசிட்வுடன் கலந்து குமட்டல் மற்றும் அசௌகர்யத்தை ஏற்படுத்தும் என்பதால் வெறும் வயிற்றில் சோடா குடிக்கக் கூடாது .

4. தக்காளி பழம்

தக்காளிப்பழத்தை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள டானிக் ஆசிட் இரைப்பையில் உள்ள ஆசிட் உடன் இணைந்து கற்களை உண்டாக்க வாய்ப்புகள் உள்ளதால் தக்காளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

5. தயிர்

தயிரில் நல்ல பாக்டீரியா இருந்தாலும் அது வயிற்று படலத்துடன் சேர்ந்து வினைபுரிந்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும் என்பதால் வெறும் வயிற்றில் தயிரை எடுத்துக் கொள்ளக் கூடாது.

இதையும் படியுங்கள்:
மாதவிடாய் வலியை சட்டுன்னு குறைக்கும் சில அற்புத பானங்கள்!
Food

6. வாழைப்பழம்

காலை வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடும் போது அதில் உள்ள மெக்னீசியம் உடலில் அதிகரித்து கால்சியம் மற்றும் மெக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு உடலில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும்.

7. பேரிக்காய்

பேரிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருந்தாலும் கூட அதனை வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது வயிற்று வலி மற்றும் சவ்வுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

8. இனிப்பு வகைகள்

காலை வெறும் வயிற்றில் இனிப்பு வகைகளை சாப்பிடுவதால் இன்சுலின் அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதால் இனிப்புகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

9. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும்போது அசிடிட்டியை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல், அல்சர் போன்றவற்றை உண்டாக்குவதால் வெறும் வயிற்றில் இதனை தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் இந்த 10 நோய்கள்தான் லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்குதாம்! 
Food

10. வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் பொழுது நெஞ்செரிச்சலும், வயிற்று வலியும் ஏற்படக்கூடும். பச்சை காய்கறிகள் சத்தானதாக இருந்தாலும் அதனை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

மேற்கூறிய 10 வகை உணவுகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் முடிந்த வரை தவிர்த்து ஆரோக்கியத்தை பேண வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com