உலகின் டாப் 10 ஆரோக்கியமான காய்கறிகள்! - உங்களுடைய டயட் பட்டியலில் இவை இடம் பெற்றுள்ளதா?

Vegetables
Vegetables

காய்கறிகளுக்குத்தான் பெரிய வியாதிகளான கேன்சர், இதயநோய் மற்றும் மறதி நோய்களைத் தடுக்கும் ஆற்றல் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். காய்கறிகளில் உள்ள வைட்டமின்களும், தாதுக்களும், ஃபைட்டோ கெமிக்கல்களும் கேன்சர் வியாதிகளின் 'கார்சினோ'வை அழிக்கும் ஆற்றல் உடையவை. காய்கறிகளிலுள்ள நார்ச்சத்து இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கிறது என்கிறார் உணவியல் நிபுணர் பிரைன் ஹன்டர். அவர் கூறும் உலகின் டாப் 10 காய்கறிகள்:

1. பச்சை பட்டாணி:

Green Peas
Green Peas

மற்ற காய்கறிகளைவிட அதிக புரதச்சத்து உள்ளது. அதனுடன் கரையும் நார்ச்சத்தும், வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் ஏ மற்றும் கே உள்ளன. இதிலுள்ள கணிசமான இரும்புச்சத்தும், ஃபோலேட் சத்துக்களும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

2. பசலைக்கீரை:

Spinach
Spinach

இக்கீரையில் இயற்கையிலேயே உள்ள பைட்டோ நியூட்ரியன்கள் மற்ற நியூட்ரியன்களுடன் இணைந்து செயலாற்றும் தன்மை உடையவை. இது ஃப்ரீ ராடிக்கல்களின் சிதைவுகளைச் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது. அதனால் கேன்சர் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படும் என்கிறார்.

3. காலிபிளவர் மற்றும் முட்டைக்கோஸ்:

Cauliflower & Cabbage
Cauliflower & Cabbage

இவை இரண்டும் அடர்த்தியான ஊட்டச்சத்து உள்ள உணவான பிரக்கோலி குடும்பத்தைச் சேர்ந்தவை. இவைகளில் உள்ள அதிகளவு நார்ச்சத்து வயிற்றுப் பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்று எரிச்சல் ஆகியவை சரியாகும். இவைகளில் உள்ள வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் ஆகியவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மனநலப் பிரச்சினைகளையும் தவிர்க்க உதவுகின்றன.

4. பீட்ரூட்:

Beetroot
Beetroot

குறைந்த கொழுப்பு, அதிக வைட்டமின்களும், மினரல்களும், ஆன்டி ஆக்சிடென்ட்களும் உள்ள காய். இதிலுள்ள குளுடாமின் குடல்களைப் பாதுகாக்கிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு பீட்ரூட் சாறு பருகுவது தசை சோர்வை அகற்றும். பீட்ரூட் சாற்றில் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் இருக்கின்றன. அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பரவலை மெதுவாக்குகிறது.

பீட்ரூட் மிகவும் சத்தான வேர்க்காய்கறிகளில் ஒன்றாகும். ஆரோக்கியமான அளவு நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் மாங்கனீசு உள்ளது. அவை நைட்ரேட்டுகளிலும் வலுவானவை, அவை இரத்த நாளங்களை விரிவுபடுத்தக்கூடிய நன்மை பயக்கும் தாவரக் கூறுகளாகும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

5. காரட்:

Carrot
Carrot

இதில் உள்ள பீட்டா கரோட்டின் எனும் பைட்டோ கெமிக்கல் அதற்கு ஆரஞ்சு நிறத்தைத் தருகிறது. இது தோல்களை ஃப்ரீ ராடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது. கண்களில் காட்ராக்ட் ஏற்படுவதைத் தடுக்கிறது. வயது மூப்பு காரணமாக ஏற்படும் இடர்பாடுகளைத் தடுக்கிறது. மேலும், புரோஸ்டேட், நுரையீரல், குடல் புற்றுநோய்களிலிருந்தும், இரத்தப் புற்றுநோயிலிருந்தும் தடுக்கிறது என்கிறார்கள்.

6. சர்க்கரை வள்ளிக் கிழங்கு:

Sweet Potato
Sweet Potato

கிழங்கு வகைகளில் அதிக வைட்டமின் சி, தாது உப்புக்கள் (பொட்டாசியம், மாங்கனீசு), கரையும் நார்ச்சத்தும், ஆரோக்கியமான கார்போஹைடிரேட்டும் உள்ளது. இதிலுள்ள பீட்டா கரோட்டின் சரும ஆரோக்கியம் காக்கிறது. மேலும், மெதுவாகச் செரிமானமாகும் உணவு என்பதால் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

7. பச்சை பீன்ஸ்:

Beans
Beans

இதில் நல்ல கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. எனவே, இது உடலில் இருக்கும் கொழுப்பைக் கரைத்து அதை வெளியேற்றுகிறது. இதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. மெலிந்த புரத உணவான இதில் முக்கிய ஊட்டச்சத்துக்களான மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் வைட்டமின் பி உள்ளன. இது தசை உருவாக்கம் மற்றும் அதன் வலிமைக்குத் தேவையானது.

8. பூசணிக்காய்:

Poosanikai
Poosanikai

காய்கறிகளிலேயே மிகுந்த நீர்ச்சத்தும் மருத்துவ குணமும் கொண்டது பூசணிக்காய் தான். அதிலும் வெண்பூசணி கூடுதல் சத்து கொண்டது. வாரம் ஒரு முறை பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை வளர்ச்சிக்கு உதவும் என்கிறார்கள். கிட்னியில் படிந்து வளரும் கற்களைக் கரைத்துவிடும் ஆற்றல் பூசணிக்கு உண்டு. உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால், அந்தப் பிரச்சனையை நீக்கவும் உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்தக் காய்கறி பல்வேறு வகையான வைட்டமின்களின் களஞ்சியமாக உள்ளது.

9. ப்ரோக்கோலி:

Brocoli
Brocoli

வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, ப்ரோக்கோலி உடலில் உள்ள மொத்த கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். புற்றுநோய் எதிர்ப்பு சேர்மங்களைக் கொண்டுள்ளது. தாவர ஈஸ்ட்ரோஜனாகச் செயல்படுகிறது மற்றும் ஹார்மோன் சமநிலையை ஆதரிக்க உதவும். சல்பர் நிறைந்தது, இது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும், தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
க்ரீன் டீ குடிக்கிறீங்களா? - இந்த 'ரகசியம்' தெரியலைன்னா நீங்க பாவம்! 
Vegetables

10. வெங்காயம்:

Onion
Onion
இதையும் படியுங்கள்:
நீரழிவு நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி - மாதுளம் பழச்சாறு சர்க்கரையை கட்டுப்படுத்துமாம்!
Vegetables

உணவில் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், சுவையைச் சேர்க்கவும் வெங்காயத்தைப் பயன்படுத்துவது சிறந்த வழியாகும். வெங்காயத்தில் ஆக்சிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. எனவே, அவை உங்கள் ஆரோக்கியத்தை பல வழிகளில் அதிகரிக்கும். வெங்காயத்தை தவறாமல் சாப்பிடுவது, காயம் குணப்படுத்துவதை மேம்படுத்தவும், பித்தப்பைக் கற்களைத் தடுக்கவும், மனச்சோர்வு அல்லது பதற்றத்தைக் குறைக்கவும், புற்றுநோய்க்கான உங்கள் வாய்ப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com